எஸ்.வி.ஆர் இற்கான எனது திறந்த மடலுக்கான தங்களது வருத்தம் படர்ந்த எதிர்வினையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும், தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகிறேன்.
தாங்களும், தாங்கள் சார்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புக்களான தொழிற்சங்கம், இலக்கிய அமைப்பு, வாலிபர் அமைப்பு என அனைத்திலும் செயல்படும் ஆதவன் தீட்சண்யாவினதும் பிரச்சினையின் வேர்களில் இருந்து எனது இந்த பிரதியை துவங்கலாம் என நினைக்கிறேன்.
ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் தனிநபர்கள் அல்ல.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதனது வெகுஜன அமைப்புக்களிலும் பொறுப்பிலுள்ளவர்கள்.
பொதுவாழ்வு சார்ந்த உங்களது நடத்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாரக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சார்ந்து நீங்களும் பொறுப்புடன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
”கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் வருவதைத்தான் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் “என நீங்கள் சொல்வது அடிப்படையான அரசியல் பிழை என்றே நான் கருதுகினறேன்.
ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் ஆசிரியர் குழுவிலிருந்து வழிநடத்தும் புதுவிசை சஞ்சிகைகக்கும், உங்களுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கருத்தளவில் சம்பந்தமில்லை என்கின்ற மாதிரி நீங்கள் பேசுகின்றீர்கள்.
இது ஒப்ப முடியாத ஒரு வாதம் என நான் நினைக்கின்றேன்.
ஆதவன் தீட்சண்யா ஒரு அப்பாவி அல்ல. அவர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது சர்வதேசிய அரசு சாரா தன்னார்வ வலைப்பின்னலின் தொடர் அரசியல்.
அவர்தான் சுசீந்திரனைத் தேடிச் சென்று நேர்காணல் செய்து புதுவிசையில் வெளியிட்டவர்.
அவர்தான் சோபாசக்தியின் நேர்காணலை, சுகனின் நேர்காணலை வெளியிட்டவர். அ.மார்க்ஸின் கட்டுரையை வெளியிட்டவர்.
அந்த நேர்காணல்களில் தான் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை எனும் விடயம் சொல்லப்பட்டது.
இலங்கை இடதுசாரிகளின் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் கொச்சைப்படுத்தபட்டன. கோவை ராணுவ வாகனங்கள் எதிர்ப்புப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது.
புலிகள் எதிர்ப்பை மட்டுமே முனைப்பாகக் கொண்டு அரசு சார்பு நிலைபாடுகளை முன்வைப்பவர்கள் இந்த நால்வர் குழுதான்.
இதனது உச்சம் இலங்கை இனவாத அரசுக்கும்,இலங்கை பௌத்தக் கருத்தியலுக்கும் சம்பந்தமில்லை எனும் சுகனின் உளறல்கள்.
புதுவிசையின் இந்த அரசியலுடன் உடன்பாடு கொண்டு, நீங்கள் சொல்கிற வகையிலான இலங்கை அரசுக்கு எதிரான ‘ஒற்றுமை’ அரசியலை முன்னெடுக்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?
நீங்கள் மாறுபட்ட கருத்து உள்ளவர்களின் ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆதவன் தீட்சண்யா திட்டமிட்ட வகையில் அதனைக் குலைப்பதற்கான அரசியலை, முனைப்பாக முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறார்.
ஆதவன் தீட்சண்யா அப்பாவி அல்ல.
இலங்கை அரசு ஆதரவுக் குழுவினரின் அழைப்பின் பேரில்தான் அவர் லண்டன் கூட்டத்திற்கு வந்து சென்றார்.
இந்த இலங்கைக் ஆதரவு குழுவினர் தமிழகத்திற்கு வரும்போது அவர்தான் அவர்களை வரவேற்று, ஈழப் பிரச்சினை தொடர்பாக நக்கல் நளினமாகக் கேள்விகளும் கேட்டு புதுவிசை சஞ்சிகையில் தொடர்ந்து நேர்காணல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனைத் தனிநபர் உறவுகள் எனச் சொல்கிறீர்களா அல்லது அரசியல் பரிமாணம் கொண்ட உறவு எனச் சொல்கிறீர்களா?
புதுவிசை மேலெடுத்து வருகிற அரசியலுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதில் அங்கம் வகிக்கும் உங்களுக்கும் தொடர்பற்ற ‘சுதந்திர’ அரசியல் எனச் சொல்கிறீர்களா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பான முழுநேர ஊழியரான உங்கள் பதில் இவ்விடயத்தில் ஒப்ப முடியாததாகவே இருக்கிறது.
இலங்கை குறித்த என்.ராமின் நிலைபாடுகளும் ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தங்களது கட்சியின் நிலைபாடுகளுக்கு விரோதமானது எனத் தாங்கள் கருதுவீர்களானால்-
நிலவி வரும் ஒரு குழப்பத்திற்கு நீங்கள் திட்டவட்டமாக முடிவு கட்டமுடியும்.
தங்களது கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர் பத்திரிக்கையில், “பலர் நினைக்கிறமாதிரி, என்.ராமின் அரசியலுக்கும், ஆதவன் தீட்சண்யா முன்னெடுக்கும் அரசியலுக்கும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புதுவிசை முன்னெடுக்கும் அரசியலுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என நீங்கள் அறிவிக்கலாம் இல்லையா?
அறம் சார்ந்த கருத்துப் போராட்டத்தில் எமக்கு நம்பிக்கையுண்டு.
நாம் நடத்திக் கொண்டிருப்பதும் கருத்துப் போராட்டம்தான் என்பதில் நாங்கள் உறுதியான நிலைபாடு கொண்டிருக்கிறோம்.
தங்கள் மீது இப்போதும் நான் பெறுமதிப்புக் கொண்டிருக்கிறேன். இலங்கை அரசைப் பாசிச அரசு எனத் தாங்கள் விமர்சித்திருப்பதை நான் அறிவேன். இலங்கை அரசுக்கு எதிராக, கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனத் தாங்கள் அறைகூவி வருவதையும் நாங்கள் அறிவோம். அதனையே நாங்களும் வழிமொழிகிறோம்.
துரதிருஷ்டவசமாக திருவனந்தபுரம் மாநாடு குறித்து தாங்கள் முழுமையாக அறியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்தான் நீங்கள் சென்றீர்கள் என்று நீங்கள் சொல்வதை எம்மால் ஒப்ப முடியாததாக இருக்கிறது.
ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தொடர்புகளும் அறியாமையிலும் அப்பாவித்தனத்திலும் நடக்கிற காரியங்கள் அல்ல. அவரோடுதான் நீங்கள் திருவனந்தபுரம் மாநாட்டில் பங்கு கொண்டிருக்கிறீர்கள்.
தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப் புரட்சி அரசியல் குறித்து அதிஅவதானம் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகத் தங்களது பதிலை எம்மால் ஒப்ப முடியவில்லை.
நான் தங்களது வலைத்தள வாசகன் எனும் அளவில் எமது நண்பர் டி.அருள் எழிலனது கருத்துக்கள் தொடர்பான தங்களது பதிவில், ஆதவன் தீட்சண்யாவினது வழமையான நக்கல் நடையுடனான ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.
”டி.அருள் எழிலனதும் அவரொத்தவர்களினதும் கருத்துக்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை தன்னால் பதில் எழுத முடியும்” என எக்களிப்புச் செய்துவிட்டு, “ஆனாலும் தான் எழுதக் கூடாது என அமைதி காப்பதாக “ புத்த பகவானின் மறு அவதாரம் போல ஆதவன் தீட்சண்யா பேசுகிறார்.
அவரை வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லச் சொல்லுங்கள்.
வெறும் வாய்வீச்சு வேண்டாம். நாங்கள் அதனை ஒரு சவாலாகவே ஏற்கிறோம்.
மற்றபடி, தங்களது வருத்தம் படர்ந்த எதிர்விணையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும்,தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகின்றேன்.
அன்புடனும் தோழமையுடனும்
அசோக் யோகன்.
aadhavan dheetchanya appears to be a dangerous person
அறம் சார்ந்த கருத்துப் போராட்டத்தில் எமக்கு நம்பிக்கையுண்டு
இலங்கைத் தமிழர் விடயத்தில் மட்டுமன்றி இந்திய மேலாதிக்க நலன்கள் சார்ந்த எந்த ஓடுக்குமுறையாயினும் சி.பி.எம். எத்தகைய நிலைப்பாட்டை ஏடுத்திருக்கிறது?
இது முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டிய விடயம்.
புதுவிசை தன்னை சி.பி.எம்மின் தவறுகளில் இருந்து விலக்கிக் கொள்வதாயின் முதலில் சி.பி.எம்மை விமர்சித்து எழுதட்டும்.
இந்திய மக்களின் ஆதரவு என்றுமே ஈழத் தமிழருக்கும் ஓடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தேவை.
இந்திய அரசின் எவ்விதமான தலையீடும் நல்லதல்ல.
இந்திய அரசின் மேலாதிக்க நலன் சார்ந்த தலையீட்டுக்கு எதிரான போராட்டமே இன்றைய தேவை.
இந்திய அரசின் தலையீட்டுக்கான எந்த விதமான கோரிக்கையும் அழிவிற்கான அழைப்பே ஆகும்.
புதுவிசை இவை பற்றியும் பேசுமா?
////////அவரை வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லச் சொல்லுங்கள்.
வெறும் வாய்வீச்சு வேண்டாம். நாங்கள் அதனை ஒரு சவாலாகவே ஏற்கிறோம்.///////
துணிவிருந்தால் மார்க்சிஸ்ட் கட்சியின்
‘பின்நவீனத்துவ சூப்பர் ஸ்டார்’
ஆதவன் தீட்சன்யா இந்த சவாலை ஏற்று
வார்த்தைக்கு வார்த்தை எழுத முன் வரட்டும்.
ச.தமிழ்ச்செல்வனுடைய பதிலை படிக்கும் யாருக்கும் அய்யோ பாவம் ரொம்ப அப்பாவி போலிருக்கு என்று தான் தோன்றும்.அப்படி எழுதியிருக்கிறார். ஆனால் அது உண்மையா ? இல்லை. குழப்பமான சூழல் நிலவும் நேரத்தில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சென்றதை ஒரு பழியாக மாற்றுவது சரியா என்று கேட்கிறார்.என்ன குழப்பம் நிலவுகிறது தமிழகத்தில் ? இங்கு எல்லாம் ‘தெளிவாக’த்தான் இருக்கிறது. நீங்களும் (இந்திய அரசின் நிலையிலிருந்து புலியை எதிர்க்கும் நீங்களும்) தெளிவாக இருக்கிறீர்கள், புலி ஆட்களும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.அனைத்திலும் தான சொல்கிறேன்.
உங்களுக்கு யாருடைய பின்புலமும் தெரியாதா ? சுசீந்திரன் நடராசாவின் பின்புலம் தெரியாமல் தான் அவர் பின்னால் போனீர்கள்,அதை நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்கிறீர்கள். ஏன் அவரைப் பற்றி உங்கள் கட்சியின் பின்நவீனத்துவ சூப்பர் ஸ்டார் ஆதவன் தீட்சன்யாவிடம் கேட்டிருக்க வேண்டியது தானே, நன்றாகவே அவரின் பின் புலத்தை உங்களுக்கு புரிய வைத்திருப்பார்.
மார்க்சிஸ்ட் கட்சி என்றால் என்ன வேணாலும் பேசலாம் என்று இங்கே யார் உங்களைப் பற்றி பேசுகிறார்கள். உங்களுடைய அரசியலைப் பற்றித்தானே விமர்சிக்கிறோம்.அதை விடுத்து ஆதவன் தீட்சன்யா தன்னியடித்துவிட்டு சுற்றுகிறார். சென்னைக்கலைக்குழு பிரளயன் எப்போதும் புல் மப்பில் தான் இருக்கிறார், அப்புறம் உங்கள் கட்சியின் கள்ளக்காதல் தொடர்புகள் பற்றியெல்லாமா நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.?
ஈழத்துக்காக நீங்கள் என்ன லட்சனத்தில் போராட்டங்கள் நடத்துகிறீர்கள் என்பது தான் தெரியுமே ?
நீங்கள் புலியை என்ன நிலையிலிருந்து விமர்சிக்கிறீர்கள். இந்திய அரசு,சுப்பிரமணிய சாமி,இந்து ராம் நிலைப்பாட்டிற்கும் உங்கள் மார்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டிற்கும் ஒரு நாலு வேறுபாடு மட்டுமாவது சொல்லுங்களேன் பார்ப்போம்.
http://www.vinavu.com/2009/08/20/tmaks/
ஒன்றும் தெரியாத இவர்கள் தான் 2004ல் மும்பையில் நடந்த WSF மாநாட்டில் கலந்து கொண்டார்கள். ஒன்றும் தெரியாத இவர்களுடைய கட்சி தான் தன்னார்வக்குழுக்களுடன் ஒன்றாக இயங்குகிறது. இது தமிழகத்திலுள்ள எமக்கு நன்கு தெரியும்.
தற்போது புதுவிசை -சுசீந்திரன் நடராசா-மற்றும் கைக்கூலித்தனம் தொடர்கிறது …
சர்வதேசிய வாதி,
பின்நவீனத்துவம் சுப்பர் ஸ்டார் ஆதவன் தீட்சண்யா ராகவன் சோபா சக்தி அன்ட் கோ வுடன் கூழ் பார்டி இல் தண்ணி அடித்துவிட்டு மார்க்சிஸ்டுகளை திட்டிய திட்டு அவரை அல்டிமேட் சுப்பர் ஸ்டாராக உயர்த்தியது பாருங்கள்.
என் பின்னூட்டத்தைப் பொருட்படுத்தி பதில் எழுதியமைக்கு நன்றி.இலங்கை அரசை சிபிஎம் ஆதரிப்பதாக நீங்கள் குறிப்பிட்டதற்காகத்தான் நான் கட்சியின் கருத்தை கட்சிப் பத்திரிகை மூலம் மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் என்று எழுதினேன்.புதுவிசை கட்சியின் அதிகாரபூர்வ இதழ் அல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன.ஆதவன் தீட்சண்யா பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்து எனக்கில்லை.ஒரு சர்வதேச என்.ஜி.ஓ நெட் ஒர்க்கின் பகுதி தான் ஆதவன் தீட்சண்யா என்று நீங்கள் கூறுவது பலருக்கு உவப்பாக இருக்கலாம்.ஆனால் அது அபாண்டம்.கட்சி ஊழியர்களில் பலருக்கும் சில குறிப்பிட்ட பிரச்னைகளில் கட்சியின் நிலைபாட்டுடன் வேறுபாடுகள் இருக்கும்.இருக்கலாம். இருக்கின்றது.புதுவிசை யில் வரும் ஒவ்வொரு கருத்துக்கும் கட்சி தன் நிலையை விளக்கி அறிக்கை விட்டுக்கொண்டிருக்க முடியாது.கட்சியின் நிலைபாட்டைச்ச சொன்னால் அதிலிருந்து புரிந்து கொள்ள முடியாதா?அ ப்ப்வி போல நடிக்க வேன்டிய அவசியம் எனக்கென்ன வந்தது? சிபிஎம் பற்றி புதுசாக என்ன திட்டி விடப்போகிறீர்கள்-நான் அப்பாவியாக நடித்து அதைத் தடுத்து விடப்போகிறேன்? ஆதவன் தீட்சண்யாவைச் செருப்பால் அடிப்பது தொடங்கி எத்தனையோ ஆரோக்கியமற்ற விடயங்கள் வலைத்தளங்களில் நடந்துள்ளன.சர்வதேசவாதி ஏதோ வலைப்பக்கங்களில் சிபிஎம்மின் அரசியல் நிலை பற்றி மட்டுமே ஆரோக்கியமாகப் பேச்சு நயடப்பதாக படம் காட்டுகிறார்.சுசீந்திரன் புதுவிசையில் சொன்னவற்றுக்கெல்லாம் வரிக்கு வரி நீங்கள் யாராவது பதில் எழுதியிருக்கலாமல்லவா?சுசீந்திரன் கடந்த சில ஆண்டுகளாக எனக்கு அறிமுகமான நண்பர்.அவரும் இன்பாவும் என் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள்.புலிகளிடமிருந்து உயிர் தப்பிய அனுபவங்கள் அவர்களுக்கு உண்டு. இந்த தொண்டு நிறுவன மேட்டரெல்லாம் எனக்கு முன்பே தெரியாது.தவிர திருவனந்தபுரத்துக்கு போனதில் தப்பு இருப்பதாக இப்போதும் நான் கருதவில்லை.அங்கு பேசியவர்கள் எல்லாம் இலங்கை அரசுக்கு எதிராகத்தான் பேசினார்கள்.
தொடர்ச்சி…
ஈழத்துக்காக நாங்கள் போராடும்லட்சணம் தெரியாதா? என்று சர்வதேசவாதி எழுதியுள்ளார்.ஈழத்துக்காக நாங்கள் எங்கே எப்போது போராடினோம்.ஈழம் சாத்தியமல்ல என்றுதானே 25 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறோம்.முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும்தான் போராட்டம் இப்போது நடத்திக்கொண்டிருக்கிறோம்.சர்வதேசவாதிக்கு எல்லாமே தெளிவாக இருக்கிறது.ஆனால் எனக்கு நிறைய குழப்பங்கள் இருக்கின்றன.நாம் வலைப்பக்கங்களிலும் பத்திரிகைகளிலுமாக இலங்கைத்தமிழ் மக்களுக்காக உயிரைக்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.வேற எதுக்கும் நாம லாயக்கில்லை.அங்கே உண்மையிலேயே தமிழ் மக்களுக்காக யார் வந்து போரட்டத்தை முன்னெடுக்கப்போகிறார்கள்.மனப்பிறழ்வுக்காளாகி நிற்கும் நம் மக்களின் விடுதலை எப்படி நடக்கப்போகிறது? நாம் இங்கிருந்து ஒண்ணும் பண்ணாமல் இருப்பதே அவர்களுக்கு உதவியா?இலங்கைக்குள் அரசியல் மாற்றம் நிகழாமல் நம் மக்களுக்கு விடிவு சாத்தியமா? ஒரு சிவில் சமூகமே செயல்படமுடியாத இலங்கைக்குள் எப்படி மாற்றம் வரப்போகிறது என்பதான பல குழப்பங்கள் எனக்கு உள்ளன.நம்மில் எவருடைய நிலைப்பாடு சரி என்பது கவைக்குதவாத வெறும் பேச்சு- இப்போதைக்கு. நன்றி வணக்கம்.
ஈழம் அமைய வேண்டாம் என்று முடிவு செய்ய நீங்கள் யார் தமிழ்செல்வன் சார்?
நான் சொன்னது உங்களுடைய போராட்டத்தின் லட்சணம் பற்றி!
புதுவிசையில் சொன்னவற்றுக்கெல்லாம் வரிக்கு வரி நீங்கள் யாராவது பதில் எழுதியிருக்கலாமல்லவா ?
என்று கேட்கிறீர்கள். நீங்கள் படிக்கவில்லையா? தோழர் ரயாகரன் ஏற்கெனவே அந்த பிழைப்புவாத சீர்குலைவுவாதி நடராசா சுசீந்திரனை பற்றி எழுத்விட்டார்.
முற்போக்கு எழுத்தாளர் தமிழ்செல்வன் சாருக்காக கீழே சுட்டியை கொடுத்துள்ளேன்.
நம்பிக்கையூட்ட முடியாத சீரழிவுவாதி, புதுவிசை இதழில் புலம்பியது என்ன?
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5796:2009-05-28-08-57-40&catid=277:2009
புலியல்லாத புகலிடத் துரோகமும், புதுவிசையில் பொம்மலாட்டம் போடும் சுசீந்திரனும்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5804:2009-05-30-09-05-29&catid=277:2009
எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீரழிவுவாதியான சுசீந்திரன் ‘இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை” என்கின்றான். சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?
ஏகாதிபத்திய பணத்தில் எப்போதும் லாடம் கட்டி ஆடும் பொம்மலாட்டங்கள், இனவழிப்பை இல்லையென்று சொல்வது தான் அதன் அரசியல் அடிப்படையாகும். 60 வருட காலமாக சிங்களப் பேரினவாதம் நடத்தும் இனவொடுக்குமுறையோ இனவழிப்புத் தான். அதன் ஒரு அங்கமாக நடந்ததுதான், இந்த யுத்தம்.
இதை மறுத்து புதுவிசை என்ற சஞ்சிகைக்கு சுசீந்திரன் என்ற கூத்தாடி வழங்கிய பேட்டியின் சாரம் இதுதான். இதைத் தொடர்ந்து பேரினவாதத்தை ஆதரிக்கின்ற ஈழத்து இணையங்கள் வரை, இதை மறுபிரசுரம் செய்தது. அந்தளவுக்கு இந்த கூத்தாடியின் கடந்தகால நிகழ்கால அரசியல் பொம்மலாட்டம், இதற்கு துணையாக உள்ளது. புலம்பெயர் நாடுகளில், மக்களுக்கான ஒரு அரசியலை முன்னெடுப்பதற்கு எதிராக குழிபறித்த, குழிபறிக்கின்ற நபர்களில் முதன்மையானவர் இவர். நடத்தையாலும், அரசியலாலும், இதற்கென்று பெயர் பெற்றவர். மேடைக்கேற்ற சிறந்த நடிகர்.
இன்று உயிர்நிழல் சஞ்சிகை ஆசிரியராக உள்ள இவர், அதன் கடந்தகால அரசியல் சீரழிவின் தொடர்ச்சியில் பயணிக்கின்றார். அத்துடன் ஏகாதிபத்தியம் போடும் பணத்தில் (தன்னார்வ நிறுவனங்களில்) ‘இலங்கையரின் சர்வதேச வலைப்பின்னல்” என்ற, மக்கள் விரோத ஏகாதிபத்திய அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றார்.
இந்த பொம்மலாட்ட சீரழிவுவாதி கூறுகின்றார் ‘மன்னிக்கணும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை.” என்கின்றார். இப்படி கூறும் நீ, நம்பிக்கை ஊட்டக் கூடிய எதை நீ வைத்திருக்கின்றாய்! அதை முதலில் சொல். உன்னிடம் இல்லாதது, எப்படி சமூகத்திடம் இருக்கும். சமூகத்தின் முன்னோடியாக காட்டிக்கொள்ள முனையும் உன்னிடம் அது இல்லாத போது, சமூகத்திடம் அது இல்லை என்று சொல்லும் உன் அரசியல் நிலைப்பாடு படுபிற்போக்குத்தனமானது.
கடந்த 20 வருடமாக உலகம் முழுக்க ஏகாதிபத்திய தன்னார்வப் பணத்தில் சுற்றி வலம் வரும் நீ, ஒவ்வொரு சந்திப்பையும் எழுத்தையும் காட்டி பணம் வாங்கிப் பிழைத்த நீ, இந்த மக்களுக்காக எதைச் சொன்னாய்!? ‘நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும்” நீ எங்கே எப்போது மக்களுக்காக முன் வைத்தாயா? அதைச் சொல்லு. நீயும், உன் கூட்டாளிகளும் 20 வருடமாக மக்களுக்கு எதிராக, மக்கள் விரோத அரசியலுடன் புலம்பெயர் நாட்டில் கூடிக் கூத்தாடினீர்கள். இறுதியில் அதில் பெரும்பான்மை, அரசு சார்பு நக்குண்ணிகளாக மாறிவிட்டனர். அவர்களுடன் இன்றும் நட்பும், கூடிக் கூத்தாடும் சந்திப்புகளும், தமிழ் மக்களுக்கு எதிரான சதிகளும் உங்கள் பின்னால் தொடருகின்றது. புலி இல்லாத இன்றைய நிலையில், இந்த கூத்தாடிகள் மக்களுக்கு சொல்லவும், வழிகாட்டவும், அவர்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.
இப்படி இந்த மக்களுக்காக என்னத்தை நீங்கள் நம்பிக்கையுடன் சொன்னீர்கள்? ஒவ்வொரு கூட்ட அழைப்பிலும் பெயரை தவறாது பதிவு செய்து, அதை காட்டி ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனத்திடம் பணம் பெற்று வாழ்ந்த வாழ்வுதான், தமிழனைச் சொல்லிப் பிழைக்கும் உங்கள் நம்பிக்கையாக இருந்தது.
அந்த பணத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கையில், உலகம் முழுக்க சுற்ற முடிகின்றது. இதற்காக உன் பெயர் அழைப்பிதழில் தவறாது வருமாறு பார்த்துக்கொள்கின்றாய். இதற்கு வெளியில் மக்களுக்காக சொல்ல என்ன உன்னிடம் உள்ளது. ‘மன்னிக்கணும், நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியவில்லை.” என்று சொல்ல வெட்கமாயில்லை. 20 வருடமாக இந்த மக்களுக்காக, நம்பிக்கையூட்டும் வண்ணம் நீ என்ன கருத்தை வைத்தாய்! அதைச்சொல். பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
நீ இன்றைய பேரினவாதம் நடத்தியதை இனவழிப்பல்ல என்கின்றாய். இதை நீ ‘இவர்களுக்கு கிடைக்கும் தகவல்கள் ஒருதலை பட்சமானவை. ஆகவே அங்கு இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை. ஏன்னா, அரச கட்டுப்பாட்டில் வாழ்கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது. அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக வாழுகிறார்கள்.” என்று இப்படி சப்பை கட்டி இனவழிப்பை மறுக்கும் இந்த கம்மனாட்டி, மற்றொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள். ‘வாழ்வா சாவா என்று புலிகள் போராடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இப்படியான விமர்சனங்களை வைப்பது சரிதானா?” என்ற கேள்வியின் போது ‘இலங்கை அரசு என்ன நோக்கத்தை கொண்டிருக்கு, ஏன் இந்த இன அழிப்பை செய்கிறது என்று..” பதிலில் தனது முன் கூற்றுக்கு முரணாக தடுமாறியபடியே இந்த இனவழிப்பை மூடிமறைக்க முடியவில்லை. பிழைப்புக்கு அரசியல் செய்கின்றவர்கள், அரசியலில் தடுமாறுகின்றனர். இனவழிப்பல்ல என்ற தர்க்கம், அவரின் முரண்பாடான பதில் கூற்றில் தகர்ந்து போகின்றது.
உண்மையில் ஏகாதிபத்திய தன்னார்வ வேலைத்திட்டத்தின் அடிப்படையில், இரண்டையும் விமர்சிக்கின்ற ஏகாதிபத்திய கயிற்றைப்பிடித்துக் கொண்டு மிதக்க முனைகின்றனர். இதற்குள் இடதுசாரியத்தை கலந்து விடுகின்றார். வற்றி வரண்டு போன 30 வருட ஈழத்து சூழலில், இப்படி அரசு – புலி என இரண்டையும் மறுக்கின்ற பிழைப்புவாதம் நீடிக்கின்றது. இவர்கள் மக்களுக்காக வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக போராட மறுக்கின்ற கூத்துகள் எங்கும் எப்போதும் அரங்கேறத்தான் செய்கின்றது.
அரசு மற்றும் புலி சார்பு பிரிவினரை மக்கள் எதிரியாக வரையறுக்காத கூட்டங்கள், சந்திப்புகளை நடத்துவதும் நீங்கள் தான். அதேநேரம் அரசுக்கும் புலிக்கும் எதிராக, விமர்சனம் செய்து பம்மாத்து காட்டுவது, இந்த சூழலுக்கு ஏற்ற பிழைப்புத்தனம். அரசு மற்றும் புலியை விமர்சனம் செய்யும் உங்கள் அரசியல் அடிப்படைகள் என்ன? எந்த மக்கள் அரசியல் அடிப்படையில், இந்த விமர்சனத்தை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்? இந்த மக்கள் எந்த அடிப்படையில் தம் சொந்த விடுதலையை அடைய முடியும்? அதையா நீங்கள் வைக்கின்றீர்கள்!, சொல்லுகின்றீர்கள்! ஏகாதிபத்திய விமர்சன எல்லைக்குள், வயிற்றுக்குத்தைக்காட்டி பிள்ளை பெற முனைகின்றீர்கள்.
இந்த நிலையில் இது “இனவழிப்பல்ல” என்று கூறும் போது, அரசு சொன்னது போல் இது என்ன புலி அழிப்பா!? சரி அது இல்லையென்றால், அது என்ன அழிப்பு!? 60 வருடமாக தமிழ் மக்களுக்கு எதிராக இனவொடுக்குமுறையை அரசு செய்கின்றது என்றால், இது இனவழிப்புத் தான். அதன் பண்பு, இடத்துக்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடுகின்றது. (இனவழிப்பு பற்றி தனிக் கட்டுரை விரிவாக பின்னால் பார்ப்போம்.)
இது “இனவழிப்பல்ல” என்று மறுக்க வைக்கும் காரணம் ‘அரச கட்டுப்பாட்டில் வாழ்கிற தமிழர்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கிற தமிழர்களை விட கூடுதலானது.” இதனால் இது இனவழிப்பல்ல. நகைச்சுவையான அரசியல் அடிப்படையும், அளவுகோலும். இன்று இலங்கையில் மலையகத் தமிழர் மேல், வடகிழக்கு தமிழர்களுக்கு உள்ளது போன்ற இனவொடுக்குமுறை இல்லை, இதனால் இலங்கையில் இனவொடுக்குமுறையே, இல்லை என்றாகிவிடுமா!?
இது இனவழிப்பே அல்ல புலி அழிப்பு என்ற அரசின் இனவாத இனவழிப்பு நோக்கத்தையே, சுசீந்திரன் நாசூக்காக அரசு-புலி விமர்சனத்தின் ஊடாக முன்வைக்கின்றார். அந்த விமர்சனம் மக்களின் விடுதலைக்கான மாற்று அரசியலை வைக்கவில்லை.
தன்னை நல்ல பிள்ளையாக காட்ட வேஷம் போட்டு பொம்மலாட்டம் ஆட, அவர் முன்வைப்பதைப் பாருங்கள் ‘ஒரு கலாச்சார மோதலை எதிர்கொண்ட தன்மை, அடக்குமுறையை எதிர்கொண்ட விதம்,…. இவைகளை யெல்லாம் வெளிப்படுத்துவதாக புகலிட இலக்கியம் இருந்ததா என்றால் இல்லை. போராட்டத்தால் ஏற்படும் அனுபவங்கள் அனர்த்தங்கள் ரணங்கள் வலி சீழ் பற்றி பேசுதா என்றால் அதுவுமில்லை. ஏன் அப்படி பேசல என்று காரணங்களைத் தேடிப் போகலாம். ஆனால் உண்மை என்னவென்றால், வெறுமனே மேல்நிலைப்பட்ட விசயங்களைப் பேசுவதாகத்தான் இருக்கு. தொடக்கம் முற்போக்கா இருந்தாலும் பிறகு மழுங்கடிக்கப்பட்டு இன்று வெறுமனே இன்னொரு நாட்டுக்கு இடம் பெயர்ந்த ஒருவர் எதை எழுதினாலும் புகலிட இலக்கியமாக பார்க்கிற தன்மையாக குறுகிவிட்டது. தமிழ் வாசகனின் தேடலும் ரசனையும் எந்தளவில் இருக்கிறதென்று யோசிக்கவேண்டியிருக்கு.” என்கின்றார். சரி இதை யாருக்கு நீ சொல்லுகின்றாய்? உனக்கா? உன் நிழலுக்கா?
20 வருடமாக இதை மறுத்தே இயங்கியவர்களில் முதன்மையானவன் நீ. இப்படி இயங்கிதையும், இயங்க முனைந்ததையும் குழிபறித்த கும்பலில் தலைமைதாங்கி நின்றவன் தானே நீ. இலக்கியச் சந்திப்பை சீரழித்து, அதையே சீரழிவாக முன்னின்று நடத்தியவன் நீ. மக்களைப்பற்றி பேசாது, மக்கள் அரசியலை வைக்காத உங்களால், நீ கூறுவது போல் ‘ஒரு கலாச்சார மோதலை எதிர்கொண்ட தன்மை, அடக்குமுறையை எதிர்கொண்ட விதம்,…. இவைகளை யெல்லாம் வெளிப்படுத்துவதாக புகலிட இலக்கியம் இருந்ததா என்றால் இல்லை. போராட்டத்தால் ஏற்படும் அனுபவங்கள் அனர்த்தங்கள் ரணங்கள் வலி சீழ் பற்றி பேசுதா என்றால் அதுவுமில்லை.” என்ற கூற்றுக்கமைய நீங்களே காரணமாய் அமைந்த சூழலையும் மீறி எப்படி இலக்கியங்கள் படைப்பாகும்? இதை உருவாகவிடாது, அனைத்தையும் அரசியல் நீக்கம் செய்தவர்கள் தான் நீங்கள். இதைத்தான் புலியல்லாத தளத்தில் 20 வருடமாக செய்தீர்கள்.
இதற்கு வெளியில் புலம்பெயர் மாற்றுத்தளத்தில், அதாவது புலியல்லாத தளத்தில் நீங்கள் செய்தது என்ன? புலிகள் மற்றும் அரசு மேல் குற்றம் சாட்டும் நீங்கள், இதற்கு பதில் எதை மக்களுக்கு மாற்றாக வைத்தீர்கள். அப்படி ஒன்றையும் நீங்கள் வைக்க முடியாது. அதை வைக்கவிடாது செயல்பட்டது தான், உங்கள் 20 வருட செயற்பாடுகள். புலிகள் மட்டும் மக்களுக்கு எதிராக இருக்கவில்லை, நீங்களும் தான். போலிக் கம்யூனிஸ்ட்டுகளின் பின் நிற்கும் புதுவிசையின் இடதுசாரியத்துக்கு ஏற்ப, வழமையான பாணியில், சூழலுக்கும் ஆட்களுக்கும் ஏற்ப கருத்துரைத்துள்ளாய்.
ஆனால் நம்பிக்கையூட்டக் கூடிய எதையும், மக்களுக்காக உன்னால் சொல்ல முடியவில்லை. சமூக ஓட்டத்தில் இல்லை என்பதால், உன்னிடம் இல்லாத போனது ஏன்? ஏகாதிபத்திய தன்னார்வ செயற்பாட்டில், மக்களுக்கு வழிகாட்டும் அரசியலை அழிப்பதுதானே அதன் செயற்தந்திரம். அதைத்தான் 20 வருடமாக செய்தாய். சமூகத்தில் நம்பிக்கைய+ட்டக் கூடிய அனைத்தையும், அரசும் – புலிகளும் மட்டும் அழிக்கவில்லை, நீங்களும் தான் அதை அழித்தீர்கள். அதைத்தான் பெருமையாக நீ ‘நம்பிக்கையூட்டும் கருத்து ஒன்றையேனும் என்னால் சொல்ல முடியாது” என்கின்றாய். என்ன திமிர் உனக்கு!
ஒரு கூட்டத்திற்கு அல்லது கருத்தரங்கிற்கு போவதை மட்டும் வைத்துக்கொண்டு அவரை விமர்சிப்பது தவறான அணுகுமுறை என்றே நான் கருதுகிறேன்.மாறாக அங்கு அவர் என்ன கருத்துக்களை தெரிவித்தார் என்பதை வைத்துக்கொண்டு விமர்சிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என நான் கருதுகிறேன்.அதேபோல் சுசீந்திரன் சோபாசக்தி போன்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளல் என்பது எப்படி என்.ஜி.ஓ நெட்வேக்கில் சம்பந்தப்பட்டது என்பது புரியவில்லை?பணம் பரிமாறப்பட்டது என்பதற்கு ஏதும் ஆதாரம் உண்டா?மேலும் சுசீந்திரன் சோபாசக்தி போன்றோர் உதிரிகள்.அவர்கள் எந்த கட்சியிலும் அங்கத்தவர்கள் கிடையாது.அதுமட்டுமல்ல கட்சி அரசியலில் அவர்களுக்கு நம்பிக்கையும் கிடையாது.அப்படிப்பட்டவர்களையும் ஒரு கம்யுனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினர்களாக செயற்பட்டுவரும் ஆதவன்தீட்சனையா தமிழ்செல்வன் போன்றவர்களையும் ஒரே தட்டில் வைத்து ஒன்றாக விமர்சிப்பது தவறாகும்.அத்துடன் இந்த விமர்சனக்கட்டுரையைப்படிப்பவர்கள் தமிழ்செல்வன் ஆதவன்தீட்சனையா போன்றவர்கள் ஒரு உண்மையான புரட்சியாளர்கள் என்றும் அவர்களின் கட்சி ஒரு சரியான புரட்சிகர கட்சியாக என்றும் அவர்கள் இந்த சோபாசக்தி சுசீந்திரன் கும்பலுடன் சேர்ந்த ஒரு தவறை மட்டுமே இழைத்துவிட்டார்கள் என எண்ணக்கூடும்.இத்தகைய (தவறான)தோற்றப்பாடை கட்டுரை தோற்றுவிப்பதை கட்டுரையாளர் அசோக் அவர்கள் கருத்தில் எடுக்க தவறிவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.மாறாக இவர்களின் கட்சி மேற்கு வங்கத்தில் எப்படி அப்பாவி மக்களை சுட்டுக்கொல்கிறது? அதை எப்படி இந்த போலி புரட்சியாளர்கள் நியாயப்படுத்துகின்றனர் என்பதை விளக்கியிருந்தால் இவர்கள் இந்த சுசீந்திரன் கும்பலுடன் கூடிக்குலாவுவதில் எந்த ஆச்சரியத்தையும் காணமுடியாது என்ற நிலை வாசகர்கள் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள்.
இங்கு குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும், தோழர். தமிழ்செல்வன் மீதும் இந்த சர்வதேசவாதிகள், பாய்ந்து குதறுவது சரியெனப்படவில்லை. காரணம் மார்க்சிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள். அத்ன் நிலைப்பாட்டில் வேண்டுமானால் நாம் முரண்படலாம், அல்லது ஆரோக்கியமாக விமர்சிக்கலாம். மாறாக அதன் செயல்பாட்டில் குறைகாணுவது என்பது அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து மீறும்போதுதான். மேலும் தமிழ்செல்வன் குறிப்பிட்டவாறு கட்சியின் நிலைப்பாட்டில் எல்லோரும் உடன்படுகிறார்களா? அல்லது மாறுபட்ட கருத்துகொண்டு செயல்படுகிறார்களா? என்பதையும் பார்க்க வேண்டும். ஆக இப்போ பிரச்சினை என்பது தான் கொண்ட நிலைக்கு யார் துரோகம் செய்கிறார்கள். நம் போலித் தமிழ்தேசியவாதிகளான திருமாவளவனா, மருத்துவர் ராமதாசா, கோபாலசாமியா, சுப.வீரபாண்டியனா, அல்லது அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அகிலத்திற்கெல்லாம் தலைவரான கருணாநிதியா, அல்லது இலக்கிய தொண்டு செய்யும் மகள் கனிமொழியா, அல்லது புதிய தமிழ்கடவுளர் முருகன் மு.க.ஸ்டாலினா, இப்படி தாங்கள்தான் தமிழ்தேசியத்தின் ஒப்ப்ற்ற தலைவர்களாய் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் பற்றி தாங்கள் யாரும் புலம்புவதில்லையே அது ஏன்? கொண்ட கொள்கைக்கு எதிராய் செயல்படுவது துரோகமா? அல்லது தன் நிலைபாட்டில் தனித்து இயங்குவது துரொகமா? கேள்விக்குட்படுத்துவோம். மார்கசிஸ்ட் நிலைபாட்டில் எனக்குகூட முரண்பாடுகள் உண்டு அதற்காக தனிப்பட்ட தாக்குதல் என்பது ஏற்புடையது இல்லை. மேலும் எதற்கெடுத்தாலும் மேற்குவங்க நந்திகிராமை எடுத்துக்கொள்கிறீர்களே, அது என்ன உண்மையிலேயே மக்களால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் எழுச்சியா? அல்லது அங்கு எதிராய் செயல்படும் எதிர் அரசியலின் சூழ்ச்சியில் சிக்குண்ட வன்முறையா? அதுசரி இன்றுவரை மாவோயிஸ்ட்களுடன் மமதா ஏற்படுத்திக்கொண்ட இரகசிய ஒப்பந்த கைசாத்தை(குற்றச்சாட்டை) இன்றுவரை மமதா மறுக்காத்தன் பின்னனியை தோழர்கள் அறிவீர்களோ! இதையெல்லாம் பார்த்தால் இந்தியாவில் ஒரு கம்யூனிச அரசு இருப்பதை நாம் யாரும் விரும்பவில்லை என்பதாய்தான் தோன்றுகிறது. இது யாருக்கும் வக்காலத்து அல்ல மாறாக தத்தமது நிலைப்பாடுகளின் உண்மைத்தன்மையை புரிய முயற்சிப்பது. வேண்டுமானால் தோழர் தியாகுவின் கீற்று நேர்காணலை வாசித்தோமானால் மார்க்சிஸ்டுகளின் தேவையும், செயல்பாடுகளும், இன்றய சூழலும் புரியும் என் நம்புகிறேன். அங்கேயும் குற்றசாட்டு இருக்கிறது ஈழ விசயத்தில் அதை விமர்சனமாக மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துக்கொள்ளும் என நம்புவோம்.
இலங்கையில் இருந்து…ஒரு மார்க்சிஸ்டு கனடா வந்தார்.
வன்னியில் முகாமிலிருக்கும் 21/2 லட்சம் மக்களை ஏன் அரசு அடைத்து வைத்திருக்கிறது?
ஒரு மக்களாட்சி நடக்கும் நாட்டில் குடிமக்களுக்கு விரும்பி இடத்தில் வாழும் உரிமையில்லையா?
ஒரு தாய்க்கு தனது குழந்தைகளை வளர்த்தெடுக்க உரிய இடத்தைத் தேர்ந்தெடுக்குமு; உரிமையில்லையா என்று கேட்கப்பட்டது.
அவர் அண்மையில் பார்வையிடச் சென்ற சுதர்சனமும் ஆரூனும் சொன்னதைப்போலவே இதுவரைக்கும் சிறிலங்காவைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
உடனே “ஏன் இதை ஒரு மூண்டு மாசத்துக்கு முன்பு புலியளிட்டைக் கேட்டிருக்கலாம் தானே” என்றார்.
அந்தப் புலியளிட்டை ஏதும் கேக்கிறநிலை முந்தி இருந்திருந்தா இந்த நிலை சனத்துக்கு வந்திருக்காது என்பது எங்களுக்கு தெரியும்தானே.
பதில் சொல்ல வேணும் எண்டதுக்காக எதையாவது சொல்லித் தொலைப்பதா? சொல்வதா?
காஸ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு விஸ்தரிப்புப் பயணம் வந்திருந்த ராசீவ்காந்தியின் கற்பழிப்பு புகழ் மகன் இதே போல ஓர் புகழ்பெற்ற பதிலை சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கேட்கப்பட்டது.
குசராத்திலும்தான் தாக்கப்படுகிறார்கள் என்றார் அவர்.
எல்லாருக்கும் மகிந்த ராசபக்சவிடம் என் பக்சம் என்பதுதான் தெரியவில்லை.
இந்த மேற்சொன்ன ‘மார்க்சிஸ்ட்’ இந்திய மார்க்சிஸ்டா மொஸ்கோ மார்க்சிஸ்டா சீன மார்க்ஸ்சிஸ்டா சும்மா மார்க்ஸ்சிஸ்டா உண்மையிலேயே மார்க்சிஸ்டா என்பதற்கு அப்பால்…
அண்மையில் முன்னாள் ‘இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்’ செயலாளர் பிரேம்ஜியின் நுhல்வெளியீட்டில் “தமிழ்த்தேசிய இனத்தில் சிக்கலில் இலங்கையில் அனைத்து மார்க்சிஸ்டுக்களும் தவறிழைத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.” என நான்காவது பரிமாணம் க.நவம் சொல்லியிருப்பதுதான் உண்மை.
மெய்யிலாளர்களைத் தவிர வரலாற்றில் உண்மையை ஒத்துக்கொண்டவர்கள யாரெனும் உண்டா?
மார்க்சிஸ்டுகளை யாரும் பாய்ந்து பிடுங்கவில்லை தமிழவன்.வேடம் போடும் அவர்களின் அயோக்கியத்தனத்தை தான் நான் சாடுகிறேன். அதில் சினம் வெளிப்படத்தான் செய்யும், அதை நீங்கள் பாய்ந்து பிராண்டுவதாக எண்ணிக்கொண்டால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஈழப்பிரச்சனையில் இவர்கள் என்னென்ன நாடகம் எல்லாம் ஆடினார்கள் என்று எமக்கு தான் தெரியும். நீங்கள் சொல்கிறீர்களே போலி தமிழ் தேசியவாதிகள் என்று, அவர்களுக்கு பெயர் உண்மையில் போலி தமிழ் தேசியவாதிகள் அல்ல தமிழகத்தில் அவர்களுக்கு பெயர் ஓட்டுப்பொறுக்கிகள். அதே போலத்தான் இவர்களையும் நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள், இவர்களுக்கு பெயர் கம்யூனிஸ்டுகள் அல்ல, ஓட்டுப்பொறுக்கி போலிக்கம்யூனிஸ்டுகள்.
இந்திய அமைதிப் படை ஈழத்திற்கு சென்ற பொழுது இந்த இரண்டு(சி.பி.ஐ சி.பி.எம்)போலிக்கம்யூனிஸ்டுகளும் அப்போது என்ன பேசினார்கள், அவர்களுடைய பத்திரிகைகளில் என்ன எழுதினார்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லச் சொல்லுங்கள், இவர்களின் யோக்கியதை என்ன என்பதை பிறகு பேசுவோம்.
“ஆதவன் தீட்சண்யா ” ** ** வளர, வளர ஒட்டுமொத்த தமிழினத்திற்க்கே பாதகங்கள் விளையும்.
தமிழ்இளைஞர்களின் போராட்டம் சிறிமாவோபண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில்தான் ஆரம்பமாகியது.அவருடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்மக்களை இரண்டாம்தர பிரஜைகளாக்கிய அரசியல் அமைப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது.இதற்கு அதரவு தெரிவித்து இதை அமுலாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் அப்போது ஆட்சியில் பங்கெடுத்த கம்யுனிஸ் கட்சியினர்.இந்த கம்யுனிஸ்ட் கட்சியுடன் தான் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் உறவு வைத்திருக்கின்றனர்.இவர்களுக்கு தமிழீழம் தான் பிரச்சனை.ஜக்கிய இலங்கைக்காக போராடியிருந்தால் ஆதரித்திருப்போம் என்பதெல்லாம் சும்மா பேச்சு.ஏனெனில் அப்படியானால் ஜக்கிய இலங்கையை முன்வைத்து போராடிய தமிழ்மக்கள் பாதுகாப்பு பேரவை போன்ற இயக்கங்களை இவர்கள் ஆதரிக்கவும் இல்லை.உறவு வைக்கவுமில்லை.ஒருவேளை இவ் இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது இந்த காந்தீயவாத கம்யுனிஸ்டுக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி ஜக்கிய இலங்கைக்காக போராடியதே.அக் கட்சியை ஆதரித்திருக்கலாம்தானே.அதனுடன் உறவு வைத்திருக்கலாம்தானே.ஆனால் இவர்கள் தற்போதும் மகிந்த அரசில் அங்கம் வகிக்கும் கம்யுனிஸ்ட் கட்சியுடன்தானே உறவு வைத்திருக்கின்றனர்.இதில் இருந்தே இவர்களின் உண்மை முகத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லையா தோழர்களே?
“நாம் வலைப்பக்கங்களிலும் பத்திரிகைகளிலுமாக இலங்கைத்தமிழ் மக்களுக்காக உயிரைக்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.வேற எதுக்கும் நாம லாயக்கில்லை.அங்கே உண்மையிலேயே தமிழ் மக்களுக்காக யார் வந்து போரட்டத்தை முன்னெடுக்கப்போகிறார்கள்.மனப்பிறழ்வுக்காளாகி நிற்கும் நம் மக்களின் விடுதலை எப்படி நடக்கப்போகிறது? நாம் இங்கிருந்து ஒண்ணும் பண்ணாமல் இருப்பதே அவர்களுக்கு உதவியா?இலங்கைக்குள் அரசியல் மாற்றம் நிகழாமல் நம் மக்களுக்கு விடிவு சாத்தியமா?” என்று தமிழ்ச் செல்வன் புலம்புகிறார்.
தமிழ்ச்செல்வன் அவர்களே
சி .பி.எம். வகையறாக்களும் பிற தமிழக ஓட்டுக் கட்சிகளும் “அங்கிருந்து ஒண்ணும் பண்ணாமல் இருப்பதே” நல்லது.
சி .பி.எம். தலைவர் கராத் சில ஆண்டுகள் முன்பு இலங்கையில் பேசியவை மனதில் நிற்கின்றன.
என். ராமின் தமிழர் விரோத அரசியல் தெரிந்த விடயமே.
இந்திய மேலாதிக்கத்தின் குரலாகிவிட்டது சி .பி.எம். தலைமை. அதன் வண்ட வாளங்களைப் போட்டுடைக்க இங்கே இடம் போதாது.
எங்களுக்கு இந்திய மேலாதிக்க உதவியும் வேண்டாம்; உபத்திரவமும் வேண்டாம்.
“மார்க்சிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள். அதன் நிலைப்பாட்டில் வேண்டுமானால் நாம் முரண்படலாம் அல்லது ஆரோக்கியமாக விமர்சிக்கலாம். மாறாக அதன் செயல்பாட்டில் குறைகாணுவது என்பது அவர்களின் நிலைப்பாட்டில் இருந்து மீறும்போதுதான். மேலும் தமிழ்செல்வன் குறிப்பிட்டவாறு கட்சியின் நிலைப்பாட்டில் எல்லோரும் உடன்படுகிறார்களா? அல்லது மாறுபட்ட கருத்துகொண்டு செயல்படுகிறார்களா? என்பதையும் பார்க்க வேண்டும். ஆக இப்போ பிரச்சினை என்பது தான் கொண்ட நிலைக்கு யார் துரோகம் செய்கிறார்கள். நம் போலித் தமிழ்தேசியவாதிகளான திருமாவளவனா மருத்துவர் ராமதாசா கோபாலசாமியா சுப. வீரபாண்டியனா அல்லது அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அகிலத்திற்கெல்லாம் தலைவரான கருணாநிதியா அல்லது இலக்கிய தொண்டு செய்யும் மகள் கனிமொழியா அல்லது புதிய தமிழ்கடவுளர் முருகன் மு.க.ஸ்டாலினா”
“அதுசரி இன்றுவரை மாவோயிஸ்ட்களுடன் மமதா ஏற்படுத்திக்கொண்ட இரகசிய ஒப்பந்த கைசாத்தை(குற்றச்சாட்டை) இன்றுவரை மமதா மறுக்காத்தன் பின்னனியை தோழர்கள் அறிவீர்களோ!” என்கிறார் தமிழவன்.
அன்னை ஜெயலலிதாவின் பேர் தற்செயலாக விடுபட்டுப் போனதா? அல்லது….
மாஓவாதிகளுடன் மம்தா ஏற்படுத்திக்கொண்ட இரகசிய ஒப்பந்தம் இருந்தால் அது சி.பி.எம்மின் மக்கள் விரோத வெறியாட்டப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டியது. அது சரியா பிழையா என விவாதிக்க நேர்மையான மார்க்ஸியர்கட்கு யோக்கியதை உண்டு. சி .பி.எம். போல கொலைகார ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கிறவர்கட்கு???
ஏதாவது தி.மு.க.வின் தயவை விட்டால் சி .பி.எம்முக்குத் தமிழகத்தில் இடமே இல்லாதபடி தேர்தல் அரசியல் அதைச் சீரழித்துவிட்டது. இந்த லட்சணத்தில் என்ன கொள்கையைப் பற்றிக் கதைக்கிறார்கள்?
இலங்கை அரசின் விருந்தாளியாய் நம்ம ஆதவன் தீட்சண்யா கொழும்பில் தற்போது நிற்பது தமிழ் செல்வனுக்கு தெரியுமா? இலங்கை அரசு ஏற்பாடு செய்த மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் ஆதவன் தீட்சண்யா சிறப்புரை ஆற்றியுள்ளார். இப்போது இலங்கை அரச சார்பு விழாக்களில் சிறப்புரை ஆற்றுவது நம்ம ஆக்களுக்கு தொழிலாக போய்விட்டது. வாழ்க வளர்க உங்கள் சொந்த வாழ்க்கையை வளம்படுத்துக. வன்னி முகாம்களில் மக்கள் செத்து மடியட்டும்.
நண்பர்களுக்கு,
நான் சொல்ல வந்த விடயத்தை புரிந்து செவிமடுத்த “சர்வதேசியவதிகள்” நன்றி,
//ஈழப்பிரச்சனையில் இவர்கள் என்னென்ன நாடகம் எல்லாம் ஆடினார்கள் என்று எமக்கு தான் தெரியும். நீங்கள் சொல்கிறீர்களே போலி தமிழ் தேசியவாதிகள் என்று, அவர்களுக்கு பெயர் உண்மையில் போலி தமிழ் தேசியவாதிகள் அல்ல தமிழகத்தில் அவர்களுக்கு பெயர் ஓட்டுப்பொறுக்கிகள். அதே போலத்தான் இவர்களையும் நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள், இவர்களுக்கு பெயர் கம்யூனிஸ்டுகள் அல்ல, ஓட்டுப்பொறுக்கி போலிக்கம்யூனிஸ்டுகள்.இந்திய அமைதிப் படை ஈழத்திற்கு சென்ற பொழுது இந்த இரண்டு(சி.பி.ஐ சி.பி.எம்)போலிக்கம்யூனிஸ்டுகளும் அப்போது என்ன பேசினார்கள், அவர்களுடைய பத்திரிகைகளில் என்ன எழுதினார்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லச் சொல்லுங்கள், இவர்களின் யோக்கியதை என்ன என்பதை பிறகு பேசுவோம்////
நாம் மீண்டும் பழையவற்றையே விவாதிக்கிறோம் என்று எண்ணுகிறேன் காரணம் தங்களின் கூற்றுப்படியே யோசித்தாலும் அவர்கள் முடிவை அறிவித்து அதன் படி செயல்படுகிறார்கள் என்பதுதான் என் வாதம். அவர்கள் ஒரு நாளும் ஒன்றுபட்ட இலங்கை என்பதைத்தவிற ஈழம் என்பதை ஆதரித்தது கிடையாது.இது எல்லோரும் அறிந்த விடயம். மேலும் அவர்களை நோக்கி தனி ஈழம் எனபதற்கான தங்களின் இந்த நிலைப்பாடுகளுக்கான கேள்வியை முன்வைத்து விமர்சிக்கலாம். அதைவிடுத்து உணர்ச்சி மேலிட்டால் அநாகரீகமாக அள்ளி வீசுவது என்பது ஆரோக்கியமான் இணையவிவாதத்திற்கு உகந்ததல்ல,
மேலும் ஈழப்பிரச்சினையில் ஏதுமறியாது இருண்டுகிடந்த தமிழகத்தில் எழுச்சிபோராட்டம் என்கிற முதல் ஒளியை ஏற்றி வைத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதை நாம் எப்படி மறக்க முடியும்? மேலும் அதிலே ஆளுகிற கட்சியை தவிர்த்து அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஓர் எழுச்சியை உருவாக்கினார்கள் என்பதை புறந்தள்ளி விட முடியுமா? அதற்குப் பின்னாலே சி.பி.அய் யின் மகேந்திரன் மீது சிறீலங்கா கைகூலி துணைத்தூதர் அம்சாவால் தூந்தப்பட்டு அவர்மீது சேற்றைவாரி இறைத்தார்களே ! மேலும் கட்ந்த தேர்தலுக்கு முந்திய இந்திய நாடாளுமன்றத்தில் ஈழப் பிரச்சனையில் சி.பி.அய். யின் து.ராசா அவர்கள் இந்திய துரோகதினை தோலுரித்து முழங்கிய முழக்கங்கள். டெல்லியில் தனித்து அவர் செய்த முயற்சிகளை நாம் அரசியற்கடந்து ஆய்வுசெய்வோம். இத்தனைக்கும் இங்கிருந்து சென்ற ஏனைய உறுப்பினர்கள் கடைசிவரையில் மந்திரி சபையில் மவுனமாய்த்தானே இருந்தார்கள். மீண்டும் அடுத்த தேர்தலில் அவர்கள்தானே மந்திரியாகவும் இருக்கிறார்கள் எம்மால் என்ன செய்ய முடிந்தது.
மேலும் நண்பர் ஷிவா அவர்கள்/////
அன்னை ஜெயலலிதாவின் பேர் தற்செயலாக விடுபட்டுப் போனதா? அல்லது….////
என்று கேள்வி எழுப்புகிறார் அது தற்செயலாய் அல்ல தெரிந்தேதான் விடுபட்டது. அதுசரி அவரை என்றைக்கு தமிழ்தேசியத்தின் பக்கம் தள்ளிவிட்டீர். அவரின் தற்போதைய கனவே இந்திய தேசியத்தின் அடுத்த பிரதமர் என்பதை தாங்கள் அறியவில்லையோ நண்பரே?
எம்மைப் பொருத்தவரையில் ஜெயா விவாதிக்க தகுந்தவராய் தோன்றவில்லை
மார்க்சியம் மானுட விடுதலைக்கானது மறவோம்! பின்பற்றுபவர்கள் வேண்டுமனால் பிறழலாம் வேறன்றி எந்த வேள்விகளாலும் வீழ்த்திட முடியாது.
எமக்கு கட்சிகளைப்பற்றிக் கவலையில்லை ஆனால் தத்துவம் தனித்துவமானது.
அதுதான் உலகின் அரசியல் விஞ்ஞானமும், மெய்ஞானமும்
@ தமிழவன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தியதா ?
நன்றாக இருக்கிறதே உங்கள் கூற்று!! நீங்கள் என்ன அண்டார்டிகாவிலா இருக்கிறீர்கள் ?
தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இந்த வெட்கம்கெட்ட போலிக்கம்யூனிஸ்டுகளின் ஈழத்தமிழர்கள் பாலான அணுகுமுறை என்ன என்பதை அவர்களிடம் சூடு பட்டுத்திரும்பிய புலம்பெயர் நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்து கொளுங்கள். மற்றபடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியெல்லாம் ஒன்றும் செய்து கிழித்துவிடவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் எப்போதும் தமிழர்களுக்கு விரோதமாகவே சிந்திக்கும் பார்ப்பன பாசிச பாப்பாத்தி ஜெயலலிதாவை ஈழ ஆதரவு சக்தியாக முன்னிறுத்தி தமிழக மக்களிடம் ஓட்டுப்பொறுக்கினார்கள்.
பிறகு
இந்த போலிக்கம்யூனிஸ்டுகள் தனி ஈழம் தான் தீர்வு, தனி ஈழம் தான் வேண்டும் என்றெல்லாம் பேச வேண்டும் என்பது நம் நோக்கம் அல்ல,மாறாக ஈழம் கூடவே கூடாது என்று பேச இந்த யோக்கிய சிகாமணிகள் யார் ? இவர்களுடைய குரல் யாருடைய குரல் ? இவர்கள் யார் சார்பாக நின்று பேசுகிறார்கள் என்பது தான் நம் கேள்வி. இவர்களின் குரல் இந்திய மேலாதிக்க அரசின் ஆதிக்க குரல், ஆனால் அதை சற்று சாஃப்ட்டாக பேசுகிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம். கம்யூனிஸ்ட் கட்சி என்று பேரை வைத்துக்கொண்டு நீ இந்திய அரசின் வாயால் பேசுவாய் நாங்கள் அதை வேடிக்கை பார்க்க வேண்டுமா ? கம்யூனிசத்தின் பெயரில் செய்யும் இந்த அயோக்கியத்தனத்தை தோலை உரித்து தொங்க விடுவது தான் எமது வேலை!!
“எம்மைப் பொருத்தவரையில் ஜெயா விவாதிக்க தகுந்தவராய் தோன்றவில்லை” – தமிழவன்
ஆனால் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள இரண்டு ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகட்கும் ஏற்றவர் ; அப்படித்தானே!
சி.பி.ஐயின் பாண்டியன் சில ஆண்டுகள் முன்பு இலங்கை வருகையின் போது சென்னவை எங்களுக்கு நினைவில் இருக்கிறது. கட்சிக்குள்ளே அதல்லாம் எப்படி நினைவிருக்கும்? அவர் இங்கே வந்தபோது கூடித் திரிந்ததெல்லாம் அரசாங்கத்தோடு அட்டை போல ஒட்டிக்கிடந்த ; இன்னமும் ஒட்டிக்கிடக்கிற திரிபுவாதக் கட்சிக் கூட்டத்துடன் தானே!
This is sorry state of affair mr. tamil selvan. .
வணக்கம்,
நீங்கள் ஏதோ ஒரு முடிவை வைத்துக்கொண்டு விவாதிக்கிறீர்கள், நானோ ஒரு முடிவைநோக்கி விவாதிக்க முயற்சிக்கிறேன். மிக்க நன்றி
தமிழவனின் ‘முடிவுகள்’ ஊகிக்கக் கடினமானவையல்ல.
அன்புத் தோழர்களுக்கு
மார்க்சிஸ்ட் கம்யுனிஸட்களுக்கு தேசிய இனச் சிக்கல்கள் குறித்த அக்கறை ஏதும் இல்லை என்று அறிவித்துவிடட்பின் ஈழம் பற்றி அவர்கள் பேசுவதை சீரியசாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தமிழ்ச் செல்வன் மற்றும் ஆதவன் ஆகியோர் கட்சிக்கு மேலான நின்று சிந்திப்பதாக காட்டும் பாவனைகளின் நகைச்சுவைக் காட்சிதான் புதுவிசையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மற்றபடி காசுக்காக மாரடிப்பது என்று சொல்வது அபத்தம். முடிவை எடுத்துச் செயல்படும் கட்சிக்கும் அவர்களின் ஊடக விற்பன்னர்களுக்கும் அறப் பிதாமகர்கள் என தமிழவன் சொல்வது போல பட்டம் தர முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக கட்சியை வைத்த பின்னர் மூளையை எங்கு வைப்பது என்ற தத்துவச் சிக்கல் எழத்தான் செய்கிறது போலும்! இருக்கவே இருக்கிறது தன்னார்வ வங்கிகள்.
அமார்க்சு இசுலாமியர் பக்கம் நின்று செய்யும் புலி எதிர்ப்பு நிறைய தமாசான காட்சிகளைக் கொண்டது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொஞ்ச நாள் புதிய கலாச்சாரம் புதிய சனநாயகம் படித்தாலே நக்சலைட் ஆகிவிட்டதாக பலருக்கு நினைப்பு இருக்கிறதை தமிழக அறிவுச் சூழலில் யாரும் குறை சொல்ல முடியாது. புரட்சிக்கான அரிப்பை சொறிந்து விட்டுக் கொண்டபின்னர்அவற்றை படிப்பதை நிறுத்திவிட்டால் ஓய்வு பெற்ற தீவிர இடதுசாரியாகி அவர்களையே காயலாம்.அமா நிறைய படிப்பவர் படித்தவர்.அத்தகையவர்களின் குருநாதராக அமா இருப்பதில் தவறில்லை. ஈழ முகாம்கள் குறித்து பாழாப் போன கருணாநிதிக்கே கவலை வரும் போது காசுமீர் அகதிகள் குறித்து அமாவின் கரிசனம் சர்வதேசியத்தனமானது என பெருமை கொள்ள வேண்டும். அமா கொஞ்சநாளாக தலித்தியம் குறித்துப் பேசுவதில்லை. தலித்துகளை முன்னேற்றிவிட்ட பின்னர் நன்றி கொன்ற அவர்களைவிட்டு இப்போது பரிதாபத்திற்குரிய இசுலாமியர் பக்கம் நின்று போராடி வருகிறார். அவருக்கு எமது வாழ்த்துகள். விரைவில் மேற்கு இசுலாமிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து கட்டுரைகள் புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள். ஆயுதப் பாசிசங்களை அரச வன்முறைகளை எதிர்கொண்டு விடலாம் பேனாப் பாசிசங்களை எப்படி எதிர்கொள்வது?