இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று முன்நாள் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார். இவர் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ௭ரிக் சொல்ஹெய்மும் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பாத்து கூட்டிட்டுபோங்கோ…முக்கியமா சம்மந்தன் ஐயாவை கொடிகம்பம் இருக்கிற பக்கமா கூட்டிட்டுபோயிடாதைங்கோ…
I think Eric Solheim and Norway sincerely want to do something good for us.
டெரிக் சொல்கைமும் ஈழத் தமிழர்களின் புரிதல்களும்!
-யோகா-ராஜன்
„பிரபாகரன் விட்ட வரலாற்றுத் தவறுதான் ஆயிரக் கணக்கில் புலிகளும், பொதுமக்களும் பலியாவதற்குக் காரணமாக அமைந்தது“ என்று எரிக் சொல்கைம் பிபிசியில் கொட்டிய வார்த்தைகள்; ஈழத் தமிழர் மத்தியில் பேர் அதிர்வுளைத் தோற்றுவித்திருக்கிறது! அதிர்ச்சியில் விழித்தவர்கள்போல் கருத்துக்ளை வெளிப்படுத்த முனைகின்றனர் பலர்! உருத்திரகுமாரன், தீபம் ரிவியில் சேனன், நாவலன் போன்றோரின் விவாதங்கள், தேசம் நெற்றில் வரும் பின்னோட்டங்களும், இன்னும் பல வழிகளிலும் புத்திஜீவிகள் என்று சொல்லிக்கொள்ளும் பலரிடமும் இருந்துவரும் அதிர்வலைகள்… இவை எல்லாமே எம்மவரின் பன்முகப் பார்வையின்மையின் எதிரொலிகளாக! நவீன உலகம் பற்றிய புரிதல் இல்லாத வெட்டிப்பேச்சுக்களாக, சொல்கைம் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாக! தூற்றுதல்களாக! அவதூறல்களாவே வந்து குவிகின்றன!
மேற்குலகை (ஏகாதிபத்தியங்களை)ப் பொறுத்தவரை, அவர்களது செயற்பாடுகளில் பொதுவாக அவர்களுக்கான நலன்களும் புதைந்திருப்பது இயல்பு. குறிப்பாக சமாதானத் தூதுவர் பாத்திரத்தைக் கையில் எடுக்கின்ற போது „கரணம்… தப்பினால் மரணம்“ என்பது அவர்களின் அடிப்படை விதி. அதாவது „நாம் விரும்பிய வண்ணம் நீ கரணம் போடத் தவறுவாயானால் நீ மரணத்தைத் தழுவுவாய்“ என்பதே இதன் பொருள். கொலம்பிய விடுதலை இராணுவம் முதல் பல்வேறு இயக்கங்கள் இதற்குப் பலியானதை உதாரணமாகக் கொள்ளலாம். அதே வேளை இவர்களால் ~~நன்மை?’’ அடைந்த நாடுகளாக எரித்திரியா, கோசவா, சூடான் போன்ற நாடுகளை புலிசார் நண்பர்கள் குறிப்பிடத் தவறுவதில்லை.
சொல்கைம்மைப் பொறுத்தவரை, அவர் மேற்குலகின் இவ் விதிமுறைகளுக்குட்பட்ட ஒரு பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி! அவ்வளவுதான்! இலங்கை அரசினதும் புலிகளினதும் மனம் நிறைந்த விருப்பின் அடிப்படையில்தான் இவர் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டார் என்பதை நிராகரித்துவிட முடியாது. இன்னும் அவருக்குரிய மேலதிக சான்றாக, அன்ரன் பாலசிங்கத்துக்கும் சொல்கைம்முக்கும் இடையிலான தொடர்புகள் பற்றியும் பல்வேறு வழிகளில் அன்று பெருமையுடன் சிலாகிக்கப்பட்டவை பல. 1985களில் ஈ பி ஆர் எல் எவ் போன்ற அமைப்புக்கள் சோவியத் சார்புநிலைக்கு ஆட்பட்ட போது, பிரபாகரன் மேற்குலகின் சார்புநிலைக்குட்பட்டிருந்திருந்தார் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
எம்மைப் பொறுத்தவரை, இன்றைய உலக சூழலில் புலிகள் மேற்குலகு சார்ந்த ஒருவரை தூதுவராக நியமித்தமையை தவிர்க்க முடியாத ஒரு செயற்பாட்பாட்டின் வெளிப்பாடாகவே நோக்குகிறோம். அதேவேளை, இந் நிகழ்வினால் தமிழ்ச் சூழலில் குறைந்தபட்ச ஜனநாயகம் நிலவுவதற்கும் வாய்ப்பேற்பட்டிருக்கும் என்பதும் எமது எண்ணம். இங்கு பிரச்சனை என்னவெனில் மேற்குலகின் நிகழ்ச்சித்திட்டம் பற்றிய புரிந்துணர்வை பிரபாகரன் கொண்டிருக்கவில்லை என்பதுதான். மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்தில் முதன்மையாகக் காணப்பட்ட விடயம் „புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்பதும், அதன் அடிப்படையாக, முதலில் பயங்கரவாத நடவடிக்கைகளையும், தற்கொலைத் தாக்குதல்களையும் கைவிட வேண்டும்“ என்பதே!
ஆனால் மேற்குலகின் நோக்கில், புலிகள் விடயத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது. குறைந்தபட்சம் புலிகள் சார்பில் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தவர்கள் (அன்னர் பாலசிங்கம் உட்பட) எவருக்கும் சுதந்திரமாக உரையாடும் அதிகாரம் இருந்திருக்கவில்லை. சிறிய சிறிய வினாக்களுக்கு கூட பிரபாகரனின் தொலைபேசிக்காக காத்திருக்கவேண்டி இருந்தது. அதே சமயம் அரசு சார்பில் வந்தவர்கள் மிகவும் சுதந்திரமாக உரையாடவும், உரையாடிய விசயங்களை மிகவும் துணிச்சலுடன் ஜனாதிபதியுடன் பகிர்ந்துகொள்வதற்கான அதிகாரத்தையும் பெற்றிருந்தனர். இந் நடைமுறை, அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஜனநாயகரீதியான வேறுபாட்டைக் கோடிட்டது. இந் நிலைமையில் பிரபாகரனைக் கையாள்வதில் பல சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆட்பட்டது, எரிக் சொல்கைம் மட்டுமல்ல மேற்குலகமும்தான்! இதன் காரணமாகத்தான் சொல்கைம் முன்கூட்டியே பல எச்சரிக்கை மணிகளை ஒலிக்கத் தலைப்பட்டார்.
மாவிலாறில் ஆரம்பித்த புலிகளின் சமர் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து கிழக்கின் வீழ்சியும், புலிகளைத் தொடர்ச்சியான தற்காப்பு யுத்தமுறைக்குத் தள்ளியது. அப்போதிருந்தே போர்நிறுத்தத்துக்கான பேச்சுக்கள் ஆரம்பமான போதும், புலிகள் ராணுவ சமபலத்தை இழந்த நிலையில், அரசமட்டத்தில் அவை புலிகளின் சரணடைவுக்கான சந்தர்ப்பத்தை நோக்கியதாகவே அமைந்தன அல்லது நகர்ந்தன. இந்நிலையில் இந்தியாவும், மேற்குலக நாடுகளும் கூட அதே திசைவழியை (புலிகளின் சரணடைவுக்காக) நோக்கியே காத்திருந்தன!
எரிக் சொல்கைமின் பேச்சுவார்த்தை முயற்சியில் பலத்த தொய்வு ஏற்பட்டது. தமிழர்களுக்கான ஓர் இடைக்காலத் தீர்வைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கூடிவந்த போதும், பிரபாகரன், பொட்டம்மான் ஆகியோரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது தொடர்பில் மிகுந்த சிரமத்துக்கும், சிக்கலுக்கும் ஆட்பட்டிருப்பார் சொல்கைம். அதாவது இவ் இருவர் மீதான சட்ட நடவடிக்கைகள் சார்ந்து எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு இலங்கை, இந்திய அரசுகள் உடன்பட்டிருக்கவில்லை என்பதே இதன் உள்ளார்ந்த அர்த்தமாகும். இந் நிலைமையில் சொல்கைம் அவர்கள் புலிகளின் தலைமையின் மீது மிகுந்த கரிசனை கொண்டிருந்தார் என்பதையே ஊகிக்க முடிகிறது.
இத்தகைய ஓர் இக்கட்டான நிலைமைகளைத்தான் இறுதிக்கட்ட போர் முடிவிலும் எரிக் சொல்கைம் சந்திக்க நேர்ந்தது. ஆயிரம் அளவில் போராளிகளை மன்னிக்கத் தயாராக இருந்த இலங்கை, இந்திய அரசுகள், பிபாகரனையோ பொட்டம்மானையோ மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை. அவர்கள் இருவரையும் கிரிமினல் குற்றவாளிகளாகவே நோக்கினர். இந்நிலையில் பிரபாகரனும், பொட்டம்மானும் பொது மக்கள் சார்ந்தும், போராளிகள் மீதான கரிசனையின் அடிப்படையிலும் ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர். „இவர்கள் ஏதாவது ஒரு முறையில் தம்மைத் தியாகித்துக் கொள்வார்கள்“ என்ற பலரது எதிர்பார்ப்பு தோல்வியில் முடிந்திருக்கிறது. இந் நிகழ்வைத்தான் எரிக் சொல்கைம் „பிரபாகரன் விட்ட வரலாற்றுத் தவறுதான் ஆயிரக் கணக்கில் புலிகளும், பொதுமக்களும் பலியாவதற்குக் காரணமாக அமைந்தது“ என்ற வகையில் இறுதிக்கட்ட நிலைமைகளின் சில உண்மைகளை வெளிப்படுத்தினார்.
இதன்பொருட்டு அவரை தனிப்பட்ட முறையில், அப்பட்டமான அவதூறுகள் (சேனன் என்பவர்) மூலம் தாக்க முனைகின்றனர் உருத்திரகுமார், சேனன் போன்றோரும் இன்னும் பலரும். இவை அனைத்துமே இவர்களது இயலாமையின் வெளிப்பாடுதான் என்பதை பொதுமக்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்!. அவரைப் பற்றி முன்கூட்டியே அறிந்ததன் பின்புதான் அவரை உங்கள் தூதராகவும் ஏற்றுக்கொண்டீர்கள். இன்று அவர் மொழியும் உண்மைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லையென்றவுடன் அவருக்கு துரோகிப் பட்டம் கொடுக்க முனைகிறீர்கள். இதுதான் அன்று தொட்டு இன்று வரையான புலிகளின் நடைமுறை உத்தி! இத்தகைய நடைமுறைகளின் மூலம்தான் உங்களைச் சுற்றியுள்ள அனைத்துத் தரப்பினரையும் வகைதொகையின்றி எதிரிகள் ஆக்கினீர்கள். இன்றும் எதிரிகளைப் பெருக்கிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறீர்கள். இதன் மூலம்… உங்கள் தவறுகளுக்கு முலாமிட முனைவதன் மூலம்… மேலும் மேலும் மக்களை, புலம் பெயர்ந்த தமிழர்களின் புலன்களை மழுங்கடிக்க முனையாதீர்கள்… அவர்களை ~~தமிழ் ஈழம்’’ பற்றிய கொதிநிலையில் வைத்திருப்பதற்காக!
இன்று (ஐரோப்பிய) தமிழ் மாக்சீயர்கள் சிலர் புலிகளின் போராட்டத்தை புதிய வழியில் கையில் எடுத்துவிடலாம் என்று கனவு காணுகிறார்கள். அந்த வழியில்தான் சபா நாவலனும் தன்னைக் கட்டமைக்க முனைகிறார். புலிகள் தவறுவிட்டார்களா என்ற கேள்விக்கு பதில் கூறத் தயங்குகிறார். உலகமே அப்பட்பட்டமாக ஏற்றுக்கொண்ட (புலிகள் பல சந்தர்ப்பங்களில் தவறுவிட்டார்கள் என்ற) உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் முழித்தவர், இறுதியாக மக்கள் மீது பழியைப் போட்டு தப்பிக்க முனைகிறார்.
நண்பர் நாவலன் பல்வகை வாசிப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களில் இருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அவ்வகையில் அவரை மதிக்கிறோம். ஆனால் அவர் 1970க்கு முந்திய மாக்ச்சீய மொழியில், (வெறும் தர்க்கம் நிறைந்த பிரச்சாரப் பாணியில்)தான் இன்றும் பேசிக்கொண்டிருக்கிறார். ஏகாதிபத்தியம் பற்றிய அவரது பேச்சில் வெறும் அவதூறல்கள்தான் விஞ்சுகின்றன. அவை பற்றிய நவீன புரிதல்களைக் கண்டுகொள்ள முடியவில்லை. இன்றைய உலக முறைமை மாறியிருக்கிறது. அதற்கேற்ப ஏகாதிபத்தியங்கள் பௌதீகரீயாக மட்டுமன்றி பண்புரீயாகவும் மாற்றங்களுக்குட்பட்டிருக்கின்றன. அன்றைய ஏகாதிபத்தியங்கள் தமது மூலதனக் குவியல்களையும், அறிவியல்களையும், வன்முறைசார் ராணுவ அதிகாரங்களையும் திரட்சி வடிவில் ஒருங்கே குவித்து தனது ஆதிக்கத்தை அந்நிய நாடுகளில் நிலைநிறுத்தியது. ஆனால் இன்று இவை அனைத்துமே பரவலாக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியா, சீனா, மற்றும் அரபுநாடுகளின் சேமிப்புப் பயிற்சி அந்தந்த நாடுகளில் மூலதனத் திரட்சியாக குவிந்திருக்கிறது. நவீன தகவல் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி உலகின் மூலை முடுக்கெங்கும் அறிவியல் திரட்சியை மேம்படுத்தி வருகிறது. இதே அறிவியல் திரட்சி, பல நாடுகளின் ராணுவ பலத்திற்கு அடிப்படையான அணு ஆயுத உருவாக்கத்திற்கும் வழி செய்திருக்கிறது. இதனால் இந்நாடுகள் ஒன்றுக்கொன்று சளைத்துவிட முடியாத அளவுக்கு ராணுவபலத்தையும் பெற்றுவருகின்றன. இவையனைத்துமே இன்றைய ஏகாதிபத்திய பரவலாக்கல் முறைமைகளுக்கான சில எடுத்துக்காட்டுகளாகும். (இவை பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்குவோம்)
சுருங்கக் கூறின், இத்தகைய நவீன புரிதல்களுக்கூடாகத்தான் நாம் இன்றைய உலகைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு அடிப்படையாக (நவீன உலகைப் புரிந்துகொள்ளும் வகையில்) நாம் எமது சிந்தனை முறைமையில் உடைப்பை மேற்கொள்ளவேண்டும். எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும் எமது சிந்தனை முறைமையில் உடைப்புச் செய்யாதவரை நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகத்தான் இருப்போம். இது நண்பர் நாவலனுக்கும் பொருந்தும்.
அதனால்தான் நாம் கூறுகிறோம், ஏகாதிபத்தியம் அல்லது மேற்குலகம் பற்றிய நவீன புரிதல்களுக்கூடாகத்தான் எரிக் சொல்கைம்மையும் நாம் புரிந்துகொள்ள முடியும். பிரபாகரன் வரலாற்றுத் தவறை இழைத்தார் என்பது தமிழர்களின் அடிமனதில் மறைந்திருக்கும் அப்பட்டமான பேருண்மை. வாழ்க்கை பூராவும் தவறுகளுக்கூடாகவே தலைமைக்கு வந்த ஒரு மனிதன் வரலாற்றுத் தவறிழைத்தார் என்பதில் வியப்பேதுமில்லை. பிரபாகரன் சரணாகதியடைந்தது முதல், இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த இன்னும் பல உண்மைகளை அறிந்திருப்பவர்தான் எரிக் சொல்கைம். அவ்வகையில்; இன்னும் பல விடயங்களை அவர் துல்லியப்படுத்த வேண்டும். அதற்கான கடமையும் அவருக்குண்டு.
இறுதிக் கட்டப் போரில் ஓர் தலைவனாக தன்னை புடம்போட்டுக்கொள்வதற்கான சத்திய சோதனையில் பிரபாகரன் தோற்றுப்போகிறார். தற்கொலைத் தாக்குதல் வழியிலும் மற்றும் போர்முனைத் தாக்குதல்களிலுமாய், ஆயிரம் ஆயிரமாய் மாவீரர்களை உருவாக்கிய ஒரு ‘தலைவன்”, பொது மக்கள் சார்ந்தும், தனது போராளிகளின் உயிர்வாழ்வு குறித்தும் தன்னை ஒரு மாவீரனாகத் தியாகித்துக்கொள்ள முன்வரவில்லையே என்பதுதான் இங்கு அவலம். 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் தமிழ் தேசியத்துக்குக் கிடைத்த பேரவலமும் இதுதான்.
எந்தொரு மனிதன் சத்திய சோதனையில் ஜெயிக்கிறானோ அவனே சரித்திரம் முழுமையும் வாழ்வான்.
தேனீ இனயத்தளதிலிருந்து
ஆகா..அற்ப்புதம் ..பிரமாதம்… பிரபாகரன் எனும் றவுடியால்தான் உங்களை கொத்துக்கொத்தாக கொன்று தள்ளினோம்… உலக றவுடிகளின் தத்துவங்களுக்கு பேட்டை றவுடிகள் தலை சாய்க்கவேண்டும்… இல்லையேல் அவனை விரும்பினவர்களையும்,விரும்பாதவர்களையும் வெவ்வேறாய் நினைக்காமல் கொன்றேதல்லுவோம்…
Two people mutually agreed to stop the war because of what happened in New York, USA. on September 11, 2001. This time not only they cannot start it but it will also be a fight to the finish.