ஹோண்டுராஸ் நாட்டின் இடதுசாரி ஆதரவு ஜனாதிபதி மானுவேல் ஸெலாயா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதுடன், கோஸ்டாரிகாவுக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டார். ஹோண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் கூறிய குற்றச் சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.
ஜனாதிபதியின் ஆட்சிக் கால வரம்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஸெலாயாவை ராணுவம் நாடு கடத்தியுள்ளது. ஞாயி றன்று அதிகாலையில் ஜனாதிபதி மாளிகையை ராணுவம் சுற்றி வளைத்தது. மாளிகைக் காவலர்களின் ஆயுதங்களைப் பறித்த ராணுவம், உறங்கிக் கொண்டிருந்த ஜனாதிபதியை எழுப்பி விமானத்தில் ஏற்றி கோஸ்டாரிகா நாட்டுக்கு அனுப்பியது.
இரவு உடையுடன் கோஸ்டாரிகாவின் சான் ஜோஸ் விமான நிலையத்தில் இறக்கப்பட்ட ஸெலாயா, ஹோண்டுராஸின் ஜனாதிபதியாகத் தான் நீடிப்பதாக அறிவித்தார். ஆனால் அன்று மாலை கூடிய ஹோண்டுராஸ் நாடாளுமன்றம் ஸெலாயாவை பதவியை விட்டு நீக்கிவிட்டதாக தீர்மானம் நிறைவேற்றியது. நாடாளுமன்றத் தலைவர் ராபர்டோ மிச் செலட்டியை புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்றம் நியமித்தது.
தனது நடவடிக்கைக்கு ராணுவம் விளக்கம் அளிக்க வில்லை. ஆனால், அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பேசியவர்கள் மற்றும் செயல்பட்டவர்களுக்கு எதிராகவும், நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்கவும் ராணுவம் நடவடிக்கை எடுத்தது என்று உச்சநீதி மன்றம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
சர்வதேச எதிர்ப்பு
அமெரிக்கக் கண்ட நாடுகள் அனைத்தும் ராணுவப் புரட்சியைக் கண்டனம் செய்துள்ளன. இந்நிலைமையைத் தவிர்க்க பல நாட் கள் முயன்றதாக ஞாயிறன்று அமெரிக்கா கூறியது. ஹோண்டுராஸ் புரட்சி பற்றி கவலை தெரிவித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹோண்டு ராஸ் அதிகார வர்க்கம் ஜனநாயக மரபுகளையும், சட்டத்தின் ஆட்சியையும், அமெரிக்க நாடுகளுக்கிடையேயான ஜனநாயக சாசனத்தின் மாண்புகளையும் மதித்து நடக்கவேண்டு மென்று கூறப்பட்டுள்ளது. 2002 வெனிசுலா கலகக்காரர்களுக்கு புஷ் அளித்த மறைமுக ஆதரவு போல், ஹோண்டு ராஸ் கலகத்துக்கு ஒபாமா ஆதரவு அளிக்கவில்லை.
ஹோண்டுராஸ் புரட்சியை அமெரிக்கா திட்டமிட்டு நடத்தியது என்று வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஹோண்டு ராஸின் சட்டப்பூர்வ ஜனாதிபதி ஸெலாயாதான் என்று கருதுவதாகவும், பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டுமென்றும் கூறுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஹோண்டுராஸ் ஜனாதிபதி ஸெலாயா நாடு திரும்ப வேண்டுமென்றும், ஹோண்டுராஸில் வேறு எந்த அரசையும் அங்கீகரிக்க முடியாதென்றும் அமெரிக்க நாடுகளின் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கத்திற்காக எந்த ஒரு முயற்சியையும் அமெரிக்க அரசு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் மற்ற நாடுகளில் எடுத்த வரலாற்றை யவரால்தான் மறுக்க முடியும்? ஹொண்டுராஸ் நாட்டில் அமெரிக்க கம்பெனிகளின் ஆதிக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ள அதிபரின் ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நெருக்கடி ஏற்படும் என்று தெரிந்து கொண்டே அந்நாட்டு அதிபரை மறைமுகமாக அமெரிக்க உளவுத்துறையின் முன் முயற்ச்சியால் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபரங்களுக்கு பார்க்க — John Perkin, The Secret History of American Empire (விரைவில் தமிழில்)