நேற்று முன் தினம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட முக்கியமான 13 அதிகாரிகள் பலியானார்கள். இது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கியது.
இந்த விபத்து வானிலை காரணங்களால் நடந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. சூலூரில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பி வெலிங்டனில் இறங்குவதற்கு முன்னால் இந்த விபத்து மேக மூட்டம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று பல தரப்பினரும் கருத்து வெளியிடும் நிலையில், இந்த விபத்து பற்றி தமிழ்நாடு அரசும் தனி விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்திய ஒன்றிய அரசும் இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் சிலர் தமிழ்நாடு அரசை தீய நோக்கத்துடன் உள்நோக்கத்துடன் அவதூறு செய்யும் பல கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.அதிமுக, நாம் தமிழர், பாஜகவினர் இந்த மூன்று சக்திகளும் சமுக வலைத்தளங்களில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பல கற்பனைக்கதைகளை வெளியிட்டு வருவதால் காவல்துறை இன்று காலை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் என்பவரும் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருகிறது என்பது போன்று கருத்து வெளியிட்டு கைதான நிலையில் காவல்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.