மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஹன்ட் ஆபரேஷனை’ - நிறுத்தக் கோரி மேற்கு வங்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முதுபெரும் எழுத்தாளர்கள் மகா ஸ்வேதா தேவி மற்றும் தருண் சான்யா உள்பட நக்ஸல் ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
நக்ஸல் பிரச்னையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக 4 மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றபோது, நக்ஸல் ஆதரவாளர்கள் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை ஊர்வலம் நடத்தினர். இதனால், நகரில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
நக்ஸல் பிரச்னையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மேற்கு வங்கம், பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட் மாநில முதல்வர்கள் கூட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற அரசு தலைமைச் செயலகத்தில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.