24.01.2009.
கோல்டன் குளோப் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதுக்காக 10 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பையை சேர்ந்த குடிசை பகுதி இளைஞர் ஜமால் மாலிக், டிவி பரிசு போட்டியில் கோடி ரூபாய் வென்று, தொலைத்த அன்பை தேடுவதே ஸ்லம்டாக் மில்லியனர் கதை ஆகும். இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட்டில் உள்ள அயல் நாட்டு பத்திரிகையாளர்கள் வழங்கும் கோல்டன் குளோப் விருதை வென்றார்.
இந்த விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் ஏ.ஆர்.ரகுமானுக்கு உண்டு. ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு இசையமைப்பு உள்பட 4 கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்தன. படத்தின் இயக்குநர் டேனி பாயல், சிறந்த திரைப்படம், சிறந்த இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என இந்த படத்திற்கு ஆஸ்கார் விருதுக்கு 10 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அதிக அளவு ஆஸ்கார் பரிந்துரை செய்யப்பட்ட 2வது படம் இதுவாகும். இந்த படம் இந்தியாவில் மட்டுமல்ல, உலக திரைப்பட அரங்கில் பெரும் வரவேற்பை பெற் றுள்ளது.
படத்தின் ஒவ்வொரு அம்சங்களும் அனைத்து தரப்பின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப் படம் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டன.
ஆஸ்கார் விருதுக்கு இப் படம் பரிந்துரைக்கப்பட்டது குறித்து நடிகர் அனில் கபூர் கூறுகையில், 2 இந்தியர்கள் உள்பட பல பரிந்துரைகள் இப்படத்திற்கு வந்துள்ளது. இது நம்ப முடியாத ஆச்சரியமாக உள்ளது என்றார். திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, ஒலி சேர்க்கை, ஒலி தொகுப்பு, பட தொகுப்பு ஆகியவற்றுக்கும் இந்த படம் ஆஸ்கார் விருது பெற பரிந் துரைக்கப்பட்டுள்ளது.