முன்னை நாள் அமரிக்க உளவு நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியரும் அமரிக்காவின் மக்கள் விரோத அரசியலை ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் வெளிக்கொண்டுவந்தவருமான எட்வாட் ஸ்னோடென் ரஷ்ய விமான நிலையத்தில் காத்திருப்பாளர் பகுதியில் தங்கியிருப்பதாக ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடீன் உறுதிப்படுத்தியுள்ளார். சிவில் உரிமைகளுக்கு உட்பட்ட வகையில் அமரிக்காவின் மக்கள் மீதான வன்முறைகளை மட்டும் வெளியிட்ட ஸ்னேடெனை துரோகி என்று அமரிக்க அரச உயர்மட்டம் விமர்சித்து வருகின்றது. இந்த நிலையில் அமரிக்க அரசின் கோரிக்கைக்கு இணங்கி ஸ்னோடெனை அமரிக்க அரசிடம் ஒப்படைப்பதற்கு பூடின் மறுத்துவிட்டார்.
உலகின் மாபியா அரசுகளாக மாற்றமடைந்திருக்கும் சீன ரஷ்ய அரசுகள் அமரிக்க அரசுடனான அதிகாரப் போட்டிக்கு ஸ்னேடனின் தகவல்களைப் பயன்படுத்திக்கொண்டாலும் முதல் தடவையாக அமரிக்காவின் சமூகவிரோத செயற்பாடுகள் உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்னோடென் தப்பிச்செல்கிறார் : கிழிந்து தொங்கும் அமரிக்க முகத்திரை