29 வயதேயான ஒரு இளைஞனைக்ப் பார்த்து உலகின் பேட்டை ரவுடி என மார்தட்டிக்கொண்ட அமரிக்கா குலை நடுங்குகிறது. உலக நாடுகளை மிரட்டுகிறது. தமது சொந்த நாட்டில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாகப் பாதுகாப்பின்றி இன்னொரு நாட்டில் வாழ்வதற்கான உரிமை கோருவதே அரசியல் தஞ்சம் என்ற ஜெனீவா தீர்மானம். அமரிக்க அரசின் பயங்கரவாத தனது நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர்களுக்குக் கூறியதால் ஸ்நோடெனை அமரிக்க அரசு வேட்டையாடும் நோக்கில் உலகம் முழுவதும் உலா வருகிறது. ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் அரசியல் தஞ்சம் வழங்க வேண்டாம் என நாடுகளை மிரட்டுகிறது.
அமரிக்காவின் உத்தரவின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனாதிபதி 12 மணி நேரங்கள் விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மொஸ்கோவிலிருந்து பயணித்த பொலீவிய நாட்டின் அதிபர் எவோ மோராலெஸ் பயணித்த விமானத்தில் ஸ்னோடெனும் பயணம் செய்கிறார் என்ற சந்தேகத்தின் பெயரில் விமானம் அவுஸ்திரியாவை நோக்கித் திசைதிருப்பப்பட்டு வியன்னாவில் தரையிறக்கப்படுகிறது. அங்கு விமானம் சோதனையிடப்பட்டு பொலிவிய அதிபர் 12 மணி நேரங்கள் அங்கு தடுத்துவைக்கப்படுகிறார்.
பிரான்ஸும் போத்துக்கல்லும் தமது வான் எல்லைகளூடாக விமானம் பயணிப்பதற்குத் தடைவிதிக்கிறது. இதனால் அவுஸ்திரியா வழியாக செல்லும் போது அங்கு தரையிறக்கப்படுகிறது. விமான ஓட்டியும் அதிகாரிகளும் ஸ்நோடென் விமானத்தில் இல்லை என்று உறுதிப்படுத்தியதையும் நம்பாத அமரிக்க அரசும் அரசியல் தஞ்சத்திற்குப் பெயர் போன பிரன்சும், இன்றோ நாளையோ என மரணத்தின் வாயிலில் கிடக்கும் நாடான போத்துக்கல்லும் தமது வான் எல்லைகளைத் தடைவிதித்து விமானம் திசைதிருப்பப்பட்டுக் கடத்தப்பட்டு வியன்னாவில் தரையிறக்கப்படுகிறது.
இதற்கிடையில் பதைதைத்துப்போன அமரிக்க அரசு ஸ்னோடென் போலிவியாவிற்கு வந்தால் உடனடியாகத் திருப்பி
அனுப்பிவிடுங்கள் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சருக்குக் கடிதம் அனுப்பி வைக்கிறது.
ஸ்நோடனை வேட்டையாடுவதற்காக ஒரு நாட்டின் ஜனாதிபதியையும் மக்களையும் அவமானப்படுத்தியிருக்கின்றன அமரிக்க அரசும் அதன் கூட்டாளிகளும்.
19 நாடுகள் ஸ்னோடெனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரித்துள்ளன.
ஸ்னோடென் அமரிக்காவிற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற அடிப்படையில் அரசியல் தஞ்சம் வழங்க முன்வந்த போது ஸ்னோடென் அதனை நிராகரித்தார்.
எந்தக் காரணமும் இன்றி சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே ஸ்னோடெனின் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்த நாடு இந்தியா.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நாடு என அவ்வப்போது மார்தட்டிக்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமது நாட்டுக்குள்ளேயே மக்களைச் சாரிசாரியாகக் கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகிலேயே மிகவும் வறுமைப்பட்ட நாடு, தனது எல்லைக்குள்ளேயே மக்களைக் கொன்று குவித்த இரதக்கறை படிந்த நாடு, இந்துத்துவா பயங்கரவாதத்தை நேரடியாகவும் மறை முகமாகவும் ஆதரிக்கும் நாடு, அருகில் உள்ள நாடுகளில் மூக்கை நுளைத்து அங்கெல்லாம் மக்களைக் கொன்று போடும் நாடு என்றெல்லாம் ஆயிரம் தகமைகளைக் கொண்டிருந்தாலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கிறோம் என்று அடிக்கடி வாய்கூடாமல் இந்திய அதிகாரவர்க்கம் சொல்லிக்கொள்ளும்.
ஸ்னொடென் அரசியல் தஞ்சம் கேட்ட நாடுகளில் இந்தியவும் ஒன்று. இந்தியா அவரது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்ததற்கு தெளிவான காரணங்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
இந்தியாவின் பல்தேசிய பங்காளர்களும், தரகுகளும் தமது இழைப்பிற்காக யாருக்கும் அடிமையாவார்கள் என்பது முள்ளிவாய்க்காலோடு முளைத்த ஆய்வாளர்களுக்குப் புரிவதில்லை.
அமரிக்க அரசு இந்தியத் தூதரகத்தை வேவு பார்த்தது என்பதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரே அடிமை போல வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அப்துல் கலாமும் அவர்சார்ந்த திருடர்களும் கனவுகண்ட வல்லரசு அமரிக்காவிற்கு அடிமையாவது என்பதே என்று இப்போதுதான் பலபேருக்குப் புரிந்திருக்கிறது.
இதுவரைக்கும் உலகில் எந்த நாடும் இந்தளவிற்கு அடிமையாக நடந்துகொண்டதில்லை என்பது இந்திய மக்களுக்கு அவமானம். இப்படித் தன்னையே அடிமையாக அறிவித்திருக்கும் இந்திய அரச அதிகாரத்தை மேய்ப்பர்களாக நம்பக்கோருகிறார்கள் ஈழத்தமிழர்களுக்காக பேசுவதாகக் கூறுகின்றவர்கள்.
That is shabby treatment for the President of Bolivia. American educated Oscar Arias then the President of Costa Rica used to say many thiings in a suttle way. I use to appreciate him a lot.