கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் திவீரம் பெற்று வருகிற நிலையில் அதே பகுதியில் ஸ்டெர்லைட் என்னும் ரசாயன ஆலை மக்கள் எதிர்ப்பையும் மீறி இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை நேரிட்ட விஷ வாய்வுக்கசிவில் பாண்டியன் என்ற ஒப்பந்தத் தொழிலாளி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலைக்கு எதிராகத்தான் மதிமுக தலைவர் வைகோ வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதன் காரணமாகவே அவர் ஜெயலலிதா கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.