தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க முந்தைய அதிமுக அரசு அருணா ஜெகதீசன் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்த நிலையில்
நாளையோடு ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் நான்காம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு உரிய அரசு வேலை வழங்க அதாவது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர் அந்த கோரிக்கையை ஏற்று 16 பேருக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலையை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பணி நியமனம் ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேரடியாக ஆணையை வழங்கினார்.
மேலும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.