திமுக குடும்ப அரசியலில் உட்கட்சி பூசல் வலுத்து வருகிறது.
ஸ்டாலின் மதுரை வந்தபோது மத்திய அமைச்சரும் அவரது சகோதரருமான அழகிரி சீனா சென்று இருந்தார். அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவரை வரவேற்கவும் அதிக அளவில் யாரும் செல்லவில்லை. இதனால் ஸ்டாலினும், கட்சி மேலிடமும் அதிருப்தியில் இருந்தது.
இதனையடுத்து இவ்வாறு வரவேற்க வராத அழகிரியின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு திமுக தலைமைநிலையம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியது. இந்நிலையில் இன்று சீனாவில் இருந்து மதுரை வந்து சேர்ந்தvஅழகிரியை மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகள் கேட்டனர்.
ஸ்டாலினை உங்கள் ஆதரவாளர்கள் யாரும் சென்று வரவேற்கவில்லையே இது குறித்து என்ன கருதுகிறீர்கள் என்று கேட்ட போது, திமுகவில் யாரையும் போய் வரவேற்க வேண்டும் என்ற சட்டம் எதுவுமில்லை என்றார் அழகிரி. ஸ்டாலின் மதுரைக்கு வந்து நேர்காணல் நடத்துவது தொடர்பாக உங்களுக்கு ஏதும் தகவல் தரப்பட்டதா? என்ற கேள்விக்கு அது தொடர்பாக, முன்கூட்டியே தகவல் இல்லை என்றார் அழகிரி
உங்கள் ஆதரவாளர்கள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு அறிவிக்கை வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியிருக்கிறார்களே இது குறித்து ? என்று கேட்ட போது, நான் இப்போதுதான் வந்திருக்கிறேன், அப்படி எதுவும் தெரியாது. இனிமேல் தான் கேட்கனும். என்றார் அழகிரி
Kalaignar had indeed produced a lot of progeny.