போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.அக்டோபர் 2-ஆம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை பார்ட்டி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போதை பொருள் தடுப்பு முகாமை நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ ரெய்ட் நடத்தியதாகவும் அப்போது அக்கப்பலில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் பின்னர் வெளியான செய்திகள் அதிர்ச்சிகரமானவை.
ஆர்யன் கானை கைது செய்து நார்கோட்டிக் அலுவலகத்தில் ஒப்படைத்தது பாஜக பிரமுகர்கள். அவர் போதை பொருள் பயன்படுத்தவும் இல்லை அவரிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்படவும் இல்லை. தவிறவும் அவரை விடுதலை செய்வதற்காக போதை பொருள் தடுப்பு அதிகாரிகளே பல கோடி ரூபாய் பேரம் பேசும் விடியோக்கள் வெளியானது.
இது அரசியல் நோக்கம் கொண்டதாகவும் மிகப்பெரிய அளவில் பணம் பறிப்பதற்கான அச்சுறுத்தலாகவும் முஸ்லீம் என்ற அடையாளத்தைக் காட்டி அச்சுறுத்துவதாகவும் கூறப்பட்ட நிலையில், ஆர்யன் கான் சார்பாக ஒன்றிய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார்.”ஆர்யன்கானிடம் இருந்து எந்தவிதமான போதை பொருளும் கைப்பற்றப்படவில்லை. அவர் போதை பொருளை பயன்படுத்தவும் இல்லை.இந்த வழக்கே அநீதியானது.அடிப்படையில்லாதது என வாதிடார். பின்னர் மும்பை உயர்நீதிமன்றம் ஆர்யன்கானுக்கு ஜாமின் வழங்கியது.