கேரள மாநிலம் கொல்லம் அருகில் பிறந்தவர் ஒற்றப் பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு என்பவர். குறுப்பு என்பது நாயர் சாதியினருடைய ஒரு வகையினருக்கான பட்டம், நீலகண்டன் வேலு குறுப்பு கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞராகவும், தத்துவார்த்த பாடலாசிரியராகவும் இருந்து மறைந்தவர். அவர் பெயரில் ஓ என் வி குறுப் விருது ஆண்டு தோறும் வழங்கப்படும், இலக்கிய சூழலில் தென்னிந்தியாவில் மரியாதையாக பார்க்கப்படும் இந்த விருது. இந்த ஆண்டு தமிழ் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதற்கு பாடகி சின்மயி. கேரள பத்திரிகையாளரும் நியூஸ் மினிட் இணைய ஆசிரியருமான தன்யா ராஜேந்திரன், நடிகை பார்வதி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.அதே போன்று தமிழகத்தில் உள்ளவர்களும் வைரமுத்து மீதான பாலியல் சச்சரவுகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த குழுவின் தலைவராக கேரள முதல்வர் பினராயி விஜயனும், புரவலர்களாக கேரளத்தின் புகழ் பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி வாசுதேவன் நாயரும், பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் போன்றோரும் புரலர்களாக உள்ள நிலையில். வைரமுத்து தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்த அடூர் கோபாலகிருஷ்ணன் “வைரமுத்துவின் இலக்கிய சேவைகளுக்காகவே இந்த விருது வழங்கப்படுவதாகவும், அவரது நடத்தைகள் பற்றி நாங்கள் ஆய்வு செய்வதில்லை என அறிவித்த நிலையில், ஓ என் வி விருதுகள் தேர்வுக்குழு.இன்று ஓ என் வி கல்ச்சுரல் அகாதமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “ இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும்” என அறிவித்துள்ளது.இந்த விருதில் ஒரு கேடயமும் 3 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்படும் என்பதை விட தென்னிந்தியாவில் முக்கியமான விருதாக இது கருதப்படுகிறது.