இந்திய நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கிய நிலையில் கடும் அமளிகளுக்கு மத்தியில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இன்று முதல் டிசம்பர் 23-ஆம் தேதிவரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் ஆனால் கூட்டம் துவங்குவதற்கு முன்பே போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி உள்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.
முன்னதாக அவையில் கடும் கொந்தளிப்பு நிலவும் என்பதை தெரிந்தே பிரதமர் மோடி “நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த கூட்டத்தொடர் முக்கியமானதாகும். மிகமுக்கியமான கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். புதிய உருமாறிய கொரோனா ஒமிக்ரான் குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்தாண்டு மார்ச் வரை இலவச ரேசன் பொருள் வழங்கப்படும் என கூறினார்.
ஆனால், அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவையில் முழக்கம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கியை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து மக்களவை இன்று நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்து அமளிக்கு இடையே நிறைவேற்றினார்.
வேளாண்சட்டங்கள் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.