22.03.2009.
வேலை வாய்ப்பில்லாத வெளிநாட்டு குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டுமென ஐரோப்பிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில் வெளிநாட்டினர் குடியேறி வேலைசெய்து வருகிறார்கள். இப்படி குடியேறியவர்களில் பலருக்கு பொருளாதார பின்னடைவு காரணமாக வேலை இல்லை. இப்படி வேலை இல்லாமல் இருப்பவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.
79 சதவீத இத்தாலியர்களும், 78 சதவீத பிரித்தானியர்களும், 71 சதவீத ஸ்பெயின் நாட்டினரும், 67 சதவீத ஜேர்மனியர்களும், 51 சதவீத பிரெஞ்சு மக்களும் இப்படி கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பிரிட்டனின் வேலை வாய்ப்புக்கள் பிரிட்டன் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிரவுண் செயல்பட்டு வருகிறார். அந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 20 இலட்சமாக இருக்கிறது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத உச்சம் ஆகும்.