கிழக்கில் வெள்ள நிவாரணம் என்ற தலைப்பில் பல புலம் பெயர் தமிழர்கள் நிறுவன ரீதியாக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திரட்டிய பணத்தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் மின்னஞ்சல்களும் தகவல்களும் பரிமாறப்படுகின்றன. பாதிப்பிற்கு உள்ளான சில பகுதிகளை இனியொரு தொடபுகொண்ட போது உதவிகள் குறித்த தகவல்களை அறிய முடியவில்லை. உள்ளூர் மக்களின் சுய உதவிச் செயற்பாடுகளில் ஈடுபட்டோரின் தகவல்களின் அடிப்படையில் சிறிய அளவிலான ஊள்ளூர் தன்னார்வ நிறுவனங்கள் தவிர, யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் இரண்டு லொறிகளில் உதவிப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவை தவிர கிழக்கில் எந்த உதவி, மற்றும் நிவாரண முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுள் இயங்கும் கே.பியின் தன்னார்வ நிறுவனத்துடன் கூட்டிணைந்து புலிசார் மற்றும் புலியெதிர்ப்பு அணிகள் வெள்ள நிவாரணத்திற்காகப் பெருந்தொகைப் பணத்தைத் திரட்டியுள்ளன. இவர்கள் திரட்டிய பணம் குறித்த முழுமையான, வெளிப்படையான விபரங்கள் மக்கள் முன்வைக்கப்பட வேண்டும். தவிர, யார் ஊடாக யாருக்கு எங்கே பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்களும் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசு தன்னுடைய நிகழ்ச்சித் திட்டத்தினுள் எதிர்ப்பு சக்திகளை உள்வாங்கி அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இது கருதப்படுகின்ர வேளையில் திரட்டப்பட்ட பணம் குறித்த முழு விபரங்களையும் முன்வைத்தல் என்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது.
உங்களுடைய செய்தியில் சொல்லிய விசயம் உண்மை. நான் சுவிஸ்சில் இருக்கிறேன். சொந்த இடம் மட்டக்களப்பு. இன்று காலையில்கூட என் உறவினர்களோடு ரெலிபோனில் கதைத்தேன். வெளிநாடுகளிலிருந்து எந்தவித உதவிகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி கவலைப்பட்டார்கள். ஆனால் இங்கு இணையத் தளங்கள் பலவற்றில் கிழக்கு வெள்ள நிவாரண உதவி வேண்டி விளம்பரங்கள் கோரிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் உண்மையாக பணம் சேர்த்து அந்த மக்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். சுனாமிப் பேரழிவின்போது இப்படித்தான் பலர் பணம் சேர்த்து தங்கள் வாழ்க்கையை வளம்படுத்திக் கொண்டார்கள்.அப்படி இல்லாமல் இவர்கள் எங்களுடைய மக்களுக்கு உதவி செய்யவேண்டும். வெளிநாடுகலிருந்து உதவி செய்பவர்கள் கிழக்கில் எந்த நிறுவனத்தோடு இந்த உதவிகளை செய்கிறர்கள் என்பதையும் இவர்கள் வழங்கிய பணம் ஏனைய உதவிகளையும் வெளிப்படையாக தெரிவித்தால் மோசடிகள் செய்வதை தவிர்கலாம்.விளம்பரம் செய்து உதவி பெறும் எல்லா அமைப்புக்களும் இதனை செய்வதன் ஊடாக தங்களது நம்பகத் தன்மையை உறுதி செய்ய முடியும். செய்வார்களா?
நீங்கள் http://www.tamilshealth.com இல் சகலவிபரமும் அறியலாம்
சாந்தனின் கேள்வியும் கவலையும் அவருக்கானது மட்டுமல்ல. அவை நேர்மை உண்மையான மனிதாபிமானம் உள்ள அனைவரதுமாகும். மக்களைப் பகடைக்காய்களாக வைத்து சதுரங்கமாடும் சிலரது பம்மாத்துகளைப் புரிந்துகொள்ளாத எமது மக்களின் நிலைப்பாடே இதற்குக் காரணம். ஓரிடத்தில் அழிவு ஏற்பட்டுவிட்டது என்றால் அதனை ஈடுகட்ட அந்த நாட்டின் அரச இயந்திரம் என்ன செய்கிறது என்பதைப் பாருங்கள். அந்த இயந்திரத்துக்கு எதிராக சரியான முறையில் போராட்டங்களை நகர்த்துங்கள். அதற்கு சிறப்பான அரசியல் தேடல் அறிவாற்றல் உள்ளோராய் நீங்கள் உங்களை மாற்றுங்கள். மேற்காற்றில் பட்டமேற்றிய குழந்தைத் தனமானோரிடமே எங்களின் இன்றைய அரசியல் நகர்வுகள் தொங்கிப்போய்க் கிடக்கிறது. அதனை அவர்களிடமிருந்து மீட்டெடுங்கள். உந்த ஊதாரிகளை இனியும் நம்பாதீர்கள். எங்காவது ஒருசில நல்ல நேர்மையான மனிதர்களும் இவர்களின் இச் செயற்பாட்டால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியான நல்லவர்கள் யாரந்த பித்தலாட்டக்கரர் என்பதைப் புரிந்து செயற்படவேண்டும். அதற்கான நல்லாற்றலை அவர்கள் கற்கவேண்டும். அழிவு நடந்தவர்களுக்கான உதவிகளை நாம் நேரடியாகச் செய்ய முன்வரவேண்டும். அல்லது சரியானவர்களை இனங்கண்டு உதவவேண்டும்.
கடந்தகாலப் பம்மாத்துப் போராட்ட அரசியலை இன்னும் நாங்கள் புரிந்துகொள்ளவில்லையெனில் எமது பக்க பிழைகளை எமக்குள்ளே அசைபோட்டுப் பார்க்கவேண்டும். இல்லையேல் இப்படியான மனவருத்தங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கும். கடந்த காலத்தில் இயக்கங்களுக்கு பணம் சேர்த்தோரிடம் கணக்குக் கேளுங்கள். அவர்களின் கையொப்பத்துடன் அதனைப் பெறுங்கள். இப்படியான நிதிச் சேர்ப்பின்போது அதற்கான சகல ஆதாரங்களையும் அதற்கான திட்டமிடல்களையும் அவர்களிடம் கோருங்கள். எதற்கும் நன்கு சிந்தியுங்கள்.
ஊகங்களை மட்டும் வைத்து இங்கு கதை எழுத வேண்டாம்! நிதி திரட்டலுக்கு அத்திவாரம் இடப்பட்டபோதே பீரிஎப் இந்த கூட்டக்கு ஆப்படடித்து விட்டது. இருந்தாலும் தமது கையிருப்பில் இருந்த பணத்தை அவர்கள் கீழ்வரும் ஸ்தாபனங்களுக்க அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றிய விபரங்கள் http://www.tamilshealth.com உள்ளது.
சாந்தன் பெருந்தொகை பணம் சேர்த்தார்கள் என்ற தகவலை உமக்கு கூறியவர்களட யார்? இங்கு 10இற்கு மேற்பட்ட ஸ்தாபனங்கள் ஒரு நிர்வாக குழ அமைத்து தான் செயற்படுகிறார்கள். சுடுகிறன் மடியை படி என்று நிங்கள் எழுதியதன் பின்னணி நிச்சயம் ஒரு அரசியலே. அனால் அதனைக்கடந்து இவர்கள் இன்று செயற்படுவதே இன்று வரவேற்கப்பட வேண்டும்.
THO already remitted One Million SL Rupees to Eastern Flood Relief
The amount of money remitted and other details:
Vice-Chancellor’s Fund, Eastern University, Sri Lanka Peoples Bank, Chenkalady.1670026788 Rs.300,000/=
International Tamil Students Organization Commercial Bank, Delkanda branch 8134005295 Rs.100,000/=
Swami Vivekanantha Welfare Society, People’s Bank, Batticaloa 075100140043275 Rs.300,000/=
SL Red Cross society, Porathivu pattu division, NSB, Kaluwanchikudy 1-0114-01-09762 Rs.200,000/=
Working Women Development Foundation Commercial Bank, Batticaloa. 8105027650 Rs.100,000/=
I SENT MONEY THROUGH ACHC…AND HOPE THAT EP PEOPLE RECEIVED THAT HELP!
SEE http://WWW.HINDUCONGRESS.LK
உண்மையாக அதிர்வு கண்ணன் எப்படி ஈடுபட்டார். அவர் சொல்லியபடி நேர்மையாக ஏன் செயற்படாமல் ஒழித்து ஓடினார்.
யாழ் பல்கலைகழக மாணவர் தலைவர் என்று சொல்லி ஒருவரின் செல்பேசி நம்பரையும் கொடுத்து சேர்த்த பணத்தின் கணக்கு எங்கே. cashpoint ஊடாக அனுப்பிய பணத்தை அந்த நிறுவனம் சொல்லுமா. சிரேப் சேர்த்த பணம் என்னாயிற்று.