யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கென பல்வேறு நாடுகளால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் எங்கே சென்றது என தமிழ் நாட்டில் நிகழ்த்திய உரையில் நிமல்கா பெர்ணான்டோ கேள்வியெழுப்பியுள்ளார். . மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் ஊழலை அவர்களே நிராகரிக்கவில்லை. மக்களின் அழிவிலும், அவலத்திலும் பணம் சேர்க்கும் இலங்கை அரச மாபியாக் குழுவின் பலம் பொருந்திய தமிழ் முகமும், இலங்கை அரசிற்கும் அதன் புலம் பெயர் தமிழ் அங்கத்திற்கும் இடையேயான முன்முகமுமான குமரன் பத்மனாதனின் நிறுவனமான NERDO வும் களத்தில் இறங்கி சில நாட்கள் கடந்தோடிவிட்டது.
இலங்கை அரச நிகழ்ச்சி நிரல்..
பேரினவாதப் பாசிச இலங்கை அரசு தனது இராணுவ அரசியல் சாம்ராஜ்யத்தை உருவமைப்பதற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு வருகிறது. புலம்பெயர் நாடுகளில் நிலவுகின்ற குறைந்தபட்ச ஜனநாயகச் சூழல் தமது உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்கள் குரலெழுப்புவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு நடை முறைக்குக் கொண்டு வந்துள்ளது.
இலங்கை அரசு மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளும்; சாரி சாரியாக மக்களை அகதிகளாக அடைத்து வைத்திருக்கும்; மீள் குடியேற்றம் என்ற பெயரில் இராணுவக் குடியிருப்புகளை நிறுவிக்கொள்ளும்; இவற்றில் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிபுரிய வேண்டுமாயின் கே.பி போன்ற இலங்கை அரச அடியாட்களுடன் இணைந்து உதவிபுரியக் கோரும்.
உதவி வழங்குவதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனை உண்டு! இலங்கை அரசின் போர்க் குற்ரங்களையோ, மனிதப்படுகொலைகளையோ, சர்வாதிகார எதேச்சதிகாரத்தையோ, மனித உரிமை மீறல்களையோ கண்டுகொள்ளக் கூடாது!! நாளை, நாளை மறு நாள், இன்னும் சில தினங்களில், சில மாதங்களில் தேச விரோதி அல்லது பயங்கரவாதி என்ற குற்றச் சாட்டில் சில மனிதர்களையோ அல்லது மக்கள் கூட்டத்தையோ இலங்கை அரசு கொன்று போடலாம். அவர்களுக்கு உதவி புரிவதற்கு இலங்கை அரசோடு இணைந்து கே.பி குழு மறுபடி புலம்பெயர் நாடுகளை நோக்கிக் கையேந்தும்.
கிழக்கின் பெருவெள்ளம் ஏற்படுத்திய அனர்த்தம் ஆயிரக்கணக்கானோரை அகடிகளாக்கியுள்ளது. பலர் மரணித்துள்ளனர். காணாமல் போனொரின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. இலங்கை அரசு மக்களுக்கு எந்தக் குறிப்பான உதவிகளையும் மேற்கொள்ளவில்லை. தெருக்களில் அனைதைகளாக மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். இரசாயனக் குண்டுகளால் மக்களைக் கொன்று போட்ட அதே கூட்டம் இன்று மக்களை நோக்கி வருகிறது. உதவி கோருகிறது. அரசியல் பேச வேண்டாம் என்கிறது. உரிமை கேட்பவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுகிறது.
ஜனநாயகம் கொன்றொழிக்கப்பட்ட இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தங்களை வழங்கவல்ல புலம்பெயர் தமிழர்களின் குரலை நசுக்குவதற்கு இலங்கை அரசின் வேலைத் திட்டத்தின் பிரதான பகுதி இது தான்.
இலங்கை அரசின் செயற்திட்டம்:
கிழக்கில் வெள்ள அவலம் நடைபெற்றுச் சில நாட்களிலேயெ கே.பியின் நிறுவனத்துடன் இணைந்து பல புலம்பெயர் நிறுவனங்கள் தமது நிதி திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன. அவர்களின் ஒரே குரல் இப்போது உதவி தேவை என்பது மட்டும்தான். இது வரைக்கும் வழங்கப்பட்ட மில்லியன்களின் ஒரு பகுதி இராணுவக் குடியேற்ரங்களுக்குப் பயன்படுத்தப்படதையும் மறுபகுதி ராஜபக்ச குடும்ப ஆடம்பரங்களுக்காக வியாபாரிகளோடு பங்கு போடப்பட்டதையும் இன்னமும் யாரும் மறந்துவிடவில்லை.
சில சந்தேகங்கள்:
குருதி படிந்த கரங்களிடம் மக்களின் அவலவாழ்விற்கான தீர்வை ஒப்படைக்கக் கோருகின்றவர்கள், பணம் எங்கே யாரிடம் செல்கிறது என்பதைத் ஐயமின்றி முன்வைக்க வேண்டும். மக்களுக்கு எவ்வளவு பணம் எங்கே வழங்கப்பட்டது என தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டம் குறித்த அரசியலை மக்கள் முன் வைக்கவேண்டும். இதற்கான மாற்று ஒன்றை அழுத்தங்களூடாகவே ஏற்படுத்த முடியும் என்ற கருத்துக் குறித்து அவர்கள் தங்கள் கருத்தை முன்வைக்க வேண்டும்.
மாற்று வழி..
இலங்கையில் அரசின் அடக்கு முறைக்கு மத்தியிலும் சில உள்ளூர்த் தன்னார்வ நிறுவனங்கள் உதவிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பக பவ்ரல் போன்ற அமைப்புகள் இதற்கான வேலைகளில் அரசின் மாபியா வலைப்பின்னலுக்கு வெளியில் உதவிப் பணிகளை மேற்கொள்கின்றனர். தனி மனிதர்கள், உள்ளூர்க் குழுக்கள் போன்றன இவ்வாறான வேலைகளை முன்வைக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் பல உதவிகளை மேற்கொண்டு வருகிறது. தன்னார்வ நிறுவனங்கள் நீண்ட கால நோக்கில் அபாயம் மிக்கவையாயினும், இன்றைய சூழலில் கே.பியின் அரச சார் வலைப்பின்னலின் உடனடி நோக்கத்தை எதிர்கொள்ள உள்ளூர் நிறுவனங்களைப் பயனப்டுத்தல் என்பது தவறானதாகாது.
அழுத்தங்களுக்கான போராட்டம்..
கிழக்கில் அனாதரவான மக்களின் அவலங்களுக்கு முழுப் பொறுப்பும் இலங்கை அரசைச் சார்ந்ததே. தம்மை மக்களின் இரட்சகர்களாக மார்தட்டிக்கொள்ளும் தன்னார்வ நிறுவன்ங்கள் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கான போராட்டங்கள் முனைப்படைய வேண்டும். ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய அமரிக்க அரசுகள் கொடுப்பனவு நிறுவனங்கள் போன்றவற்றின் மீதான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவலங்களையும் , அழிவுகளையும், குற்றச் செயல்களையும் அங்கீகரிக்கும் போக்கை இலங்கையை முன்வைத்து உலக மக்கள் புரிந்து கொள்ள அனைத்து வலுவும் பிரயோகிக்கப்பட வேண்டும்.
மெளனித்த மரணித்த வீரர்கள் குடும்பஙகள் பற்றி முதலில் புலத்தில்
உள்ளவர்
சிந்தியுங்கள். K.Pபற்றி தாயக மக்கள் தீர்மானிக்கட்டும்
சிவா,
கே.பியும் மகிந்த கும்பலும் சிந்திக்க முன்னமோ போட்டுத் தள்ளி விடுகிறார்களே? எப்படி சிந்தக்க விட சொல்லுகிறீர்கள்?
k.p is a dirty man! he helped the gosl to kill pirapakaran!
தங்கக்கட்டி கேபி உருகி ஊரெல்லாம் நெய்யாய் ஓடுகையில் மாவீரர் குடும்பத்துக்கு என்ன குற வரப்போகுது.கேபியை பெருமாளாக்கி கும்பிட்ட மனுசனின் குலத்தையே அழித்தவர் தமிழ்க் குலத்துக்கு வெளீச்சம் காட்டுவார் என்றா நினைக்கிறீர்கள்?
கேபி மீது கடுப்பாக உள்ள நிவேதா உலகளாவிய புலிப்பினாமிகள் தமது பண இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள போட்ட நிகழ்ச்சி நிரலில் நின்று பேசுவது நன்கே தெரிகிறது. இன்று சுவிசில் நடைபெறும் சம்பவங்கள் என்ன என்பதை பற்றி நிவேதா நேசன் சொல்ல மறந்தது ஏன்? மகிந்த குடும்ப பணக்கணக்கில் இங்கு வந்து கண்ணிர் கதை எழதம் நிவேதா புலம் பெயர் மண்ணில் பதுக்கி வைத்திருக்கும் பணம் பற்றி நேர்மையுடன் ஒரு வார்த்தை கூட கூறாத நிற்பத எதனால்? அரசின் மாபியா வலைப்பின்னலை விட புலம்பெயர் மண்ணில் உள்ள புலி மாபியக்கும்பல் எப்படி கேபியை தட்டில் வைத்து இலங்கை அரசிடம் காட்டிக்கொடுத்து என்பதை நிங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். காரணம் உங்கள் எஜமானார்கள் இந்த புலி மாபியா கும்பலாக இருக்கலாம் தானே? கேபி யாருடன் என்பதை பார்ப்பதை விட இன்று அவர்கள் தமது செயற்பாட்டை வெளிப்படையாக மாதா மாதம் கணக்கு காட்டியே செயற்படுகிறார்கள்! இந்த நேர்மை கூட இல்லாத புலிப்பினாமிகளை விட கேபி பரவாயில்லை!
http://tamil.nerdolanka.org/index.php?option=com_content&view=article&id=698:-2010&catid=48:all-news&Itemid=224
புலிப் பினாமிகளின் பணத்தைச் சுட்டிக்காட்டியே நீங்கள் கே.பி யின் இருப்பையும் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதும் எனக்குத் தெரிகிறது. புலம் பெயர் புலிகளின் பணம் தொடர்பாக இனியொரு இணையதில் பல கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். நிவாரணம் தொடர்பான பிரச்சனையில் அரசு என்ன செய்கிறது என்று பேசும் போது அதற்கு கே.பி குறித்தும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. அரசியல் போராட்டம் நடத்தியே ஆயிரக் கணக்கான மக்களைச் சாகடித்ட்க கே.பி கும்பல் இப்போது அரசியல் வேண்டாம் என்று தனது இணயதிலேயே எழுதி வைத்துள்ளது.
இங்கு பிரச்சனை இதுவல்ல. கே.பி முன்னெடுக்கின்ற அரசியல். கொலை செய்யும் அரசியலுக்குள் வாழும் மக்களையும் எங்களையும் அதைப்பற்றிப் பேச வேண்டாம் என்று வாய்ப் பூட்டுப் போடும் அரசியல். கொலை செய்ய அனுமதியுங்கள் என்று கூறும் அரசியல். வன்னிப் படுகொலைகளின் பின்னரே நான் இடம் பெயர்ந்துள்ளேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நிமல்கா சொன்னதைத் திருப்பிக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் புலம் பெயர் நாட்டில் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு அங்குள்ளவர்களுக்குப் பிச்சை போட்டு வாயை அடைக்கலாம் என நினைக்கிறீர்கள். உரிமையற்ற அனாதைகளையா நீங்கள் உருவாக்க்குகிறீர்கள். புலம்பெயர் நாட்டிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் உலகம் முழுவதிலிருந்தும் இலங்கை அரசிற்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் மட்டுமே சிறிய ஜனநாயக இடைவெளியையாவது எற்படுத்தும். தயவுசெய்து இனிமேலாவது மக்களின் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப்படுங்கள். உங்களின் வியாபாரத்தை வெள்ளைக் காரார்களுடன் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.
KP is a dead man..
புலிப்பினாமிகள் தமது பண இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள போட்ட நிகழ்ச்சி நிரல் தெரிகிறது இன்னும் சிறிது நாட்களில் உண்மை அறிவீர்கள்
.
களத்தில் சிந்திக்க முன்னமே போட்டுத் தள்ளியவர்கள் புலிகள் 2002 பின் போராட்டத்தை காட்டிக்கொடுத்து யார் என்பதை நிங்கள் அறியத்தாருங்கள்.
உண்மையான உணர்வுள்ள மனிதனாகவாள்
கே.பி இன் பற்றி எனக்கு தெரிந்த வரலாற்றைக் கொஞ்சம் எழுதலாம் என நினைக்கிறேன். மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கடத்தல் தொழில் செய்யும் சூழலில் வாழ்ந்து வந்தவர். 70 ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் கடத்தல் வேலைகளுக்கு புலிகள் இவரை பயன்படுத்தி வந்தனர். நீர்வேலி வங்கிக் கொள்ளையோடு கே.பி பிரபாகரனுக்கு மிகவும் நம்பிக்கை உடையவர் ஆகினார். 84 இல் இந்தியா போன கே.பி ஆயுதங்கள் சேகரிக்க பொறுப்பானார். பின்னர் 90 ஆம் ஆண்டு வரைக்கும் பல நாடுகளின் ஆயுத குழுக்களுடன் தொடர்பு கொள்ண்டு பரிமாற உதவினார். 90 இல் உலக சந்தையில் நகைகளுக்கு கிராக்கி ஏற்பட பிரபாகரனுக்கு இவர் கொடுத்த பக்கா ஐடியா என்ன தெரியுமோ? யாழ்ப்பாணத்தில் இருக்கும் முஸ்லீம்களை வெளியேற்றி அவர்களிடமிருந்த பெரும் தொகை நகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.
அப்படியே ஒரு இரவுக்குள் முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகள், தங்க வியாபாரத்தில் உலக மாபியாகளுடன் தொடர்பு பட்டார் கே.பி. (என்னே மனிதாபிமானம்) இப்படி தொடர்பு பட்டவர், தாய்லாந்தை மையத் தளமாக வைத்து செயற்பட்டார். தாய்லாந்திலும் மலேசியாவிலும் தளங்களை வைத்துக் கொண்டவர் புலம் பெயர் நாடுகளில் இருந்து பணம் வந்ததும் பெரிய பணக்காரர் ஆனார். கஸ்ரோ விற்கும் கே.பி குழுவுக்கும் வியாவாரப் போட்டி வரத் தொடங்கியதும், பிரபாகரன் கே.பி ஐ சந்தேகிக்க ஆரம்பித்தார். தாய்லாந்தில் தக்சன் என்ற மாபியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த கே.பி ஐ பிரபாகரன் கொலையிலிருந்து பாதுகாக்க தக்சன் சிறைக்குள் வைத்தார்.
2006 இல் நடந்த இந்த சம்பவத்தின் பிறகு தக்சன் ஊடாக இந்திய உளவுத் துறையோடு கே.பிக்கு உறவு வருகிறது. பின்னர், சிங்கப்பூரில் அங்கு வசிக்கும் மாபியா புத்திசீவியும் இலங்கை அரசின் கைக்கூலியுமான ரோகான் குணரத்னவுடன் உடன் கே.பிக்கு தொடர்பு வருகிறது. அப்போது சிங்கப்பூரில் கே.பி, ப்சில், கோதப்பாய, மலேசிய மில்லியனர் ஆகியோர் சந்தித்து இலங்கை ரெலிகொம் பங்குகளை கே.பியின் பினாமிக்கு வழங்குகின்றனர். இது தான் கே.பியின் இலங்கை அரசுடன் முதலாவது ஒபிசல் தொடர்பு.
பிறகு 2008 இல் நெடியவன் பல கோடிப் பணத்தை சுருட்டிக்கொண்டு ஏவுகளை வாங்க யூ.கே யில் உள்ள வைத்தியருடன் அமரிக்கா சென்றனர். அரைவாசிப் பணம் நெடியவன் குழுவின் பொக்கட்டுக்குள் போக மிகுதியை ஏவுகணை வாங்க லஞ்சமாகக் கொடுத்துப் பிடிபடுகின்றனர். இதைக் காட்டிக் கொடுத்தது கே.பி. ஆனால் அதற்கு முன்னரேயே அவர் இந்த முயற்சி சரிவராது பிடிபடும் என பிரபாகரனுக்கு எச்சரித்தார். கே.பி காட்டிக் கொடுத்தது தெரியாமல் அவரை நம்பிய பிரபாகரன் கே.பியை ஒதுக்கினார்.
கே.பியோ இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக வந்துவிட்டார். கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்த கே.பி, இலங்கை அரசிற்கு முழு நகர்வுகளையும் கூறி பிரபாகரன் குழுவை அழிக்கத் திட்டமிட்டார்.
பிரபாகரனும் கே.பி அமரிக்காவையோ, ஐக்கிய நாடுகள் சபையையோ கொண்டுவந்து இறக்குவார் என நம்பி மக்களைப் பணயம் வைத்து நகர்ந்து திரிந்தார். கடைசியில் இலங்கை அரசாங்கத்திடம் கே.பியை நம்பி சரணடைந்தார். பிரபாகரன் பிடிபட்டதும் அவரை வைத்து அரசியல் செய்ய கே.பி நினைத்திருந்தார். ஆனால் இந்தியா பிரபாகரனைக் கொல்லச் சொல்லி இலங்கை அரசுக்கு ஆணையிட்டதும் கொஞ்சம் பின்வாங்கி இப்போது தனது நண்பர்களிடமே சேர்ந்துவிட்டார்.
ஐரோபிய நாடு முழுவதும் நடக்கும் ஜீரிவி கே.பியின் பணத்திலேயே நடக்கிறது. கே.பி ஜீரிவையை வைத்து புலி என்று சொல்லியே மக்களை அழிக்க இது புதுமையான திட்டம்.
யாரும் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடுவது கிடையாது. எல்லாம் கே.பி, கோத்தபாய, ரோ வகுக்கும் திட்டம் தான் நடைபெறுகிறது. நெடியவன் கொம்பனிக்கும், கே.பி கொம்பனிக்கும் பணத்தகராறு தான் இப்போ பிரச்சனை. இது இன்னும் தொடரும்.
நிவேதா கே.பி அரசியல் செய்வதாக எங்கும் கூறவில்லை. கருணா டக்கிளஸ் போல் கே.பி அரசிற்காக தனது நெர்டோ இணையத்தில் எதுவுமே கூறவில்லை. மனிதாபிமான பணிக்கும் அரசியலுக்குமா உங்களிற்கு வித்தியாசம் தெரியவில்லை. கேபி இன்று செய்கின்ற சிறிய வேலைகள் தான் அங்கு முன்னை நாள் போராளிகளை ஓரளவாவது பொது வாழ்க்கைக்கு திரும்ப வைக்ககிறது. கே.பி அபிவிருத்தி செய்யவில்லை. இன்று நலிந்து போயுள்ள சமூகத்தை தன்னால் இயன்றவரை பலப்படுத்தவே நினைக்கிறார். இதையும் அரசுடன் இணைந்து வேலைசெய்யும் குழுவின் வேலைகளையும் ஒன்றுபட்டு குழப்ப வேண்டாம். 30 இளைஞர் யுவதிகள் வன்னியில் இருந்து பல்கலைக்கழகம் சென்று படிப்பதற்தான உதவி செய்வது துரோகமா? அனாதைகளாக கைவிடப்பட்ட 250 மேற்பட்ட பிள்ளைகளை பார்ப்பது அரசியலா? தொழில் பயிற்சி கொடுத்து இளைஞர் யுவதிகளிற்க தொழில் வாய்ப்பு கொடுப்பது அரசியலா?
சுபத்திர் நீங்கள் உங்கள் யாழ் வேளாள குணம்சத்தை நன்கே கட்டுகிறீர்கள். கேபி ஒரு யாழ் பல்கலைக்கழக மாணவர் என்பதை ஏன் மறந்தீர்கள்? கேபி ஒரு கடத்தல் கர குடும்பம் என்று கூறுவதுடன் உங்கள் குணாம்சம் நன்கே புலப்படுகிறது. 2001இல் தான் முஸ்லீம்களிற்கும் தெற்கிற்கும் தெறிபாடு வருகிறது. அந்த சமயத்தில் கே.பி இயக்கத்திற்கு வெளியில் ஒதுக்கப்படுகிறார். முஸ்லீம்கள் யாழில் விரட்டபட்டது பிரபாகரனின் முடிவு என்பது யாழில் இருந்த அனைவரும் அறிந்ததே. கொழும்பில் பல முஸ்லீம் வியாபரரிகளுடன் தொடர்பு வைத்திருந்த கே.பி இந்த நிகழ்வால் அனைத்தை தொடர்புகளையும் இழந்ததுடன் பெருந்தொகை பணத்தையும் இழந்து பிரபாகரனிடம் கே.பி வாங்கி கட்டியது தெரியாதா? 2001இல் கேபியின் கே.பி டிப்பாட்மன்றை பொறுப்பெடுத்தது கஸ்ரோவோ நெடியவனோ அல்ல! நெடியவன் 2001இல் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு போராளி! பொறுப்பெடுத்தது சூசையின் குறுப்! பணம் சேகரிக்கும் பொறுப்பெடுத்தது கஸ்ரோவின் குறுப். ஆயுதங்கள் வாங்கும் பொறுப்பெடுத்தது தமிழ்செல்வன் மற்றும் பொட்டு குறுப்! இந்த வரலாறுகள் தெரியாது தங்ஸ்ரன் மாபியா ரெலிக்கொம் என்று கதையளக்க வேண்டாம்! அமரிக்கவில் ஏவுகணை வாங்க ஒருபோதும் நெடியவன் போகவில்லை. கனடாவில் வசிக்கும் தமிழ்செல்வனின் தமையனார் ஏற்பாடே அந்த மொக்குத்தனமான முயற்சி. இது கூட தெரியாது கே.பி பற்றி அம்புலிமாமா கதையெழுத வேண்டாம்! கே.பி தான் அரசியல் செய்யவில்லை என்ற பின்னரும் நீங்கள் அவரை அரசியலுக்குள் இழுப்பது உங்கள் சேறடிக்கும் முயற்சிக்கான ஒரு பண்பே!
அரசியல் இல்லைஎன்பதுவும் அரசியல்தான் என்ற கட்டுரையாளரின் கருத்திற்கு உங்கள் பதிலென்ன?