ஜெனரல் சரத் பொன்சேக்காவை வெள்ளைக் கொடி வழக்கில் சிக்க வைத்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜயன்ஸ் இன்று மாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருடன் அந்தப் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் லால் விக்ரமதுங்கவும் சென்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்பு நாளை 18ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், பெட்ரிகா ஜயன்ஸ், அவசரமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை குறித்து நீதிமன்றத் துறையில் பரவலாக பேசப்படுகிறது.
சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தை வர்த்தகர் சேனவீரரத்ன என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் இதன்பின்னர் தான் லீடர் பத்திரிகையின் ஆசிரியர் குழாமில் பணியாற்றப் போவதில்லையென பெட்ரிகா தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
சரத் பொன்சேக்காவை சிறைப்படுத்துவதற்கு பாதகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் இணைந்து வெள்ளைக்கொடி விவகாரத்திற்கு பெட்ரிக்கா சூழ்ச்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கோதாபய ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் நிகழ்த்தியதாகக் கருத்துநிலவுகிறது.