விடுதலைப் புலிகளுக்கெதிரான போரின்போது, போர் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஒரு சரியான இராணுவச் சிப்பாயைப் போன்றே நான் போரை முன்னெடுத்தேன். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு நான் தீர்மானம் எடுக்கவில்லை. இறுதிக் கட்டத்தின் போதும், போரை நிறுத்துமாறு எனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. வெள்ளைக் கொடிகளுடன் வருபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தகவல்கள் வந்தன. போரை இராணுவத்தினரே முன்னெடுத்தனர். அவர்கள் உயிரைப் பணயமாக வைத்தே போரில் ஈடுபடுகின்றனர். எனவே, களத்தில் தீர்மானம் எடுப்பது களத்திலுள்ள இராணுவச் சிப்பாயே. கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளவர்கள் அல்ல. வெள்ளைக்கொடிகளை ஏந்திக்கொண்டு சரணடைய வருவதைப் போன்று வந்தவர்கள் இதற்கு முன்னர் செய்த பாரிய அழிவுகளினால் எமது இராணுவச் சிப்பாய்களே உயிரிழந்தனர். இதனூடாக அவர்கள் நல்ல பாடம் கற்றுக்கொண்டனர். எனவே அவர்கள், அவர்களது பொறுப்புக்களை நிறைவேற்றினர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைவரையும் அழித்தனர். போரை நாம் அவ்வாறே வெற்றிகொண்டோம்’ என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, அவருக்கு மரியாதையளிக்கும் விதமாக ஜூலை 10ம் திகதி அம்பலாங்கொடயில் நடைபெற்ற விழாவொன்றில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
இது தான் ஜனனாயகமா. யாரையும் கேல்லும் அதிகாரம், ராணுவத்திற்கும் இல்லை. அதுவும் சரணடை பவர்களை. பாவம் இலங்கயின் ஜனனாயகம்!!!
இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவிட்டு விடுறுறியள்! இன்னும் கொஞ்சநாளில் பிரபாகரனுக்கு எப்படி கோடாலி கொத்து விழுந்தது எனறும் சொல்வீர்கள்!
//இதனூடாக அவர்கள் நல்ல பாடம் கற்றுக்கொண்டனர்.//
இதென்ன வேடிக்கையாக இருக்கிறது? ஒருவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றால், அதற்கு அவர் உயிருடன் இருத்தல் அவசியம். இப்படி அநியாயமாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை சுட்டுப் பொசுக்கியது வீரனுக்கு அழகல்லவே. இவரின் கூற்றுப்படி இவர் தன் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காமல் தட்டிக்கழித்து தாந்தோன்றித்தனமாக நடந்திருக்கிறார்.
இதற்காக இவர் தண்டிக்கப்படுவாரா? இவரெல்லாம் ஒரு மனிதரே கிடையாது. எப்படித்தான் இவர் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடிகிறதோ? இவரது மனைவி பிள்ளைகள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ? அசிங்கம், வெட்கக்கேடு.