பனாகொடை இராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நாட்டை பிளவுபடுத்த சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என இலங்கை சர்வாதிகாரி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவரீதியாகப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கையைப் பிளவுபடுத்தும் முயற்சியில் சில குழுக்கள் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தார்.
பெயர்களை மாற்றுவதன் மூலம் பயங்கரவாதிகள் மாறமாட்டார்கள் அவர்கள் என்றும் பயங்கரவாதிகளே எனத் தெரிவித்தார்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான ஆதரவுக் குரலை அழிப்பதற்காக அக்கோரிக்கையை இனவாதம் எனவும் பயங்கரவாதம் எனவும் மகிந்தவும் அரசும் அதன் ஆதரவுக்குழுக்களும் பிரச்சாரம் செய்துவருகின்றன.