டேவிட் கமரனின் தேர்தல் வாக்குறுதிகளில் வெளி நாட்டவர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தலும் ஒன்றாகும். இதன் செயற்திட்டத்தை எதிர்த்த பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தமக்கு தகுதியுடைய வேலையாட்களை வெளி நாட்டவர்களே வழங்குகின்றனர் என்றன. வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்களை பயமுறுத்தி வாழ வைப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுள் அதிக ஆபத்தானது குடியுரிமை பெற்ற பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்று அறியப்படுவோரின் குடியுரிமையைத் திரும்பப்பெறுதலாகும்.
பயங்கரவாதச் சந்தேக நபர்களின் பிரிட்டிஷ் குடியுரிமையை பறிப்பதற்கான திருத்தம் ஒன்றை குடிவரவு சட்டமூலத்தில் இறுதி நேரத்தில் உள்துறை அமைச்சர் தெரேஸா மே கொண்டுவந்துள்ளார்.
பயங்கரவாதச் சந்தேக நபர்கள் நாடற்றவர்களாக இருந்தாலும் அவர்களது பிரிட்டிஷ் குடியுரிமையை பறிக்க இந்தச் சட்டத்திருத்தம் வழி செய்யும். பிறப்பாலேயே பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால், பிரிட்டிஷ் பிரஜைகளாக மாறிய வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும்.
இரட்டைக்குடியுரிமை உடைய பயங்கரவாதச் சந்தேக நபர்கள் பிரிட்டிஷ் கடவுச் சீட்டை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.
இந்த திருத்ததுக்கு லிபரல் டெமொக்கிரட் கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளது.
குடியுரிமை என்பது ஒரு உரிமை அல்ல அது ஒரு சிறப்புச் சலுகை என்று கூறியுள்ளா குடிவரவு அமைச்சரான மார்க் ஹார்ப்பர் அவர்கள், பொதுமக்களின் நலனை முன்னிட்டு, இந்தச் சலுகையை ஆபத்தான சிலரிடம் இருந்து பறிப்பது நல்லதே என்று கூறியுள்ளார்.
ஆக வெளிநாட்டவர்களைப் பயமுறுத்தி வேலைவாங்கவும், வாக்குவங்கியை நிரப்பிக் கொள்ளவும் இத் திருத்தச்சட்டம் பயன்பட்டுத்தப்படும்.
அரசுகளின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் நடத்த்தும் தற்காப்பு யுத்தத்தில் ஈடுபடுவோரைக் கூட பயங்கரவாதிகளாக குற்றமத்தி நாடுகடத்துவதற்கோ பிரஜா உரிமையப் பறிப்பதற்கோ சட்டமூலம் வழிவட்குக்கும்.