Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

‘வெலிவேரியவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி’, என்ற குரல்களை இன்று தெற்கில் : மனோ கணேசன்

இனியொரு... by இனியொரு...
08/07/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

mano‘வெலிவேரியவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி’, என்ற குரல்களை இன்று தெற்கில் கேட்கும் போது என் நெஞ்சம் கனக்கின்றது
– மனோ கணேசன்
வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்திருக்குமானால், வன்னியிலே யுத்தத்தின் போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கும் என்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக எழுப்பட்டு வருகின்றன. இந்த கன்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்வி உரக்க கேட்கப்படுகின்றது. தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சி தலைவர்கள், தேரர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இப்போது இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.
இந்த, ‘இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி’ என்ற கருத்துகளை கேட்கும்போது என் உடம்பு புல்லரித்து மயிர்கூச்செறிகின்றது. என் நெஞ்சம் கனக்கின்றது. என் கண்களில் கண்ணீர் தளும்புகின்றது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னமேயே புலிகள் சண்டையிடுவதை நிறுத்தி விட்டார்கள். பெருந்தொகை போராளிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைய தொடங்கிவிட்டார்கள். அந்த இயக்கம் செயலிழந்துவிட்டது. புலிகளில் சரணடைய வந்தவர்கள் சரணடைந்தார்கள். ஏனையோர் போரிட்டு மடிந்தார்கள்.
ஆனால் அப்போது முள்ளிவாய்க்காலில் சிக்கிக்கொண்டு பெருந்தொகை அப்பாவி தமிழ் மக்கள் மரண ஓலம் எழுப்பி கொண்டிருந்தார்கள். அப்பாவி தமிழ் மக்கள் சிக்கி தவிப்பதை அறிந்தும் அறியாதது போல், புலிகளை கொல்கின்றோம் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது பல்குழல் எறிகணை இராணுவ தாக்குதல் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது.
அதைதான் உலகம் நிறுத்த சொன்னது. புலிகளை பாதுகாக்க சொல்லவில்லை. அப்பாவி மக்களை கொலை செய்ய வேண்டாம் என உலக சமூகத்துடன் சேர்ந்து நாமும் சொன்னோம். அதை சொன்ன எங்களை பார்த்து பயங்கரவாதிகள் என்றும், புலிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் இங்கே முத்திரை குத்தி பயமுறுத்தினார்கள்.
இப்போது ‘இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி’ கேள்வி எழுப்பும் ஜேவிபிகூட அன்று கைதட்டி யுத்தத்தை ஆதரித்துவிட்டு எங்களை பார்த்து புலிப்பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டியது.
இன்று பிரதான எதிர்கட்சியான ஐதேக, வெலிவேரிய ரதுபஸ்கல இராணுவ துப்பாக்கி சூட்டை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்று சொல்லுகின்றது. இதைத்தான் நாங்களும் அன்று வன்னி யுத்தம் பற்றி சொன்னோம். வன்னியில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நிறுத்த சொன்னோம். அங்கு நடைபெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்றும் சொன்னோம்.
இப்போதும் நாம் சொல்கின்றோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. அதேபோல் வெலிவேரிய ரதுபஸ்கல படுகொலைகள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை தேவை. முள்ளிவாய்க்காலிலும், ரதுபஸ்கலவிலும் அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த ஆணையிட்டது யார் என கேட்கின்றோம்.
அன்று ஒன்றும், இன்று ஒன்றும் பேசுபவர்கள்தான் வெட்கப்பட, பயப்பட வேண்டும். நாங்கள் அன்று ஒன்றும், இன்று வேறொன்றையும் பேசவில்லை. நான் ஒருபோதும் அப்படி மாற்றி, மாற்றி பேச மாட்டேன். கொல்லப்பட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் பொதுவான நியாயத்தை தான் நான் கேட்கின்றேன். தமிழ், சிங்கள, முஸ்லிம் அப்பாவி மக்கள் அனைவருக்கும் ஒரே சமநீதியைதான் நாம் இங்கே ஒருசேர கேட்கின்றோம்.
துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டது யார்? இராணுவ தளபதியா? பாதுகாப்பு செயலாளரா? ஜனாதிபதியா? இந்த கேள்விக்கு இந்த நாட்டு மக்களுக்கு பதில் கூற முடியாவிட்டால் எல்லாம் முடிந்து போய் விடாது. இதோ, அதோ என்று இந்த மாத இறுதியில் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதன்பிள்ளை இலங்கை வருகின்றார். அவருக்கு நீங்கள் இவற்றுக்கான பதில்களை கூறியே ஆக வேண்டும். பதில் கூறினாலும், கூறாவிட்டாலும் இந்த விடயங்கள் இந்த செப்டம்பரிலும், அடுத்த மார்ச்சிலும் ஐநா மனித உரிமை பேரவையில் ஒலிக்கத்தான் போகின்றன.
இராணுவத்தை ஏவிவிட்டு தமிழ் மக்கள் மீது எத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்ககூடும் என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு, கண்களை திறந்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என சிங்கள மொழியில் நான் இங்கே கூறுகின்றேன்.
போர் முடிவுக்கு வந்து விட்ட இன்று, தமிழ் மாகாணங்களில் இருந்து இராணுவத்தை ஏன் அகற்ற சொல்கின்றோம் என்பதையும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பை சிவில் திணைக்களமான போலிஸ் திணைக்களத்திடம் ஒப்படையுங்கள் என நாம் ஏன் சொல்கின்றோம் என்பதையும், இனியாவது சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சக்தீ பால-ஐயா – தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் : லெனின் மதிவானம்

சக்தீ பால-ஐயா - தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் : லெனின் மதிவானம்

Comments 3

  1. செய்வினை says:
    13 years ago

    “தமிழ், சிங்கள, முஸ்லிம் அப்பாவி மக்கள் அனைவருக்கும் ஒரே சமநீதியைதான் நாம் இங்கே ஒருசேர கேட்கின்றோம்.”

    ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் பற்றிப் புலம்புகிற இடதுசாரியத்தின் கபடக்குரல்களுக்கும்,ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் குரலாக எழுகிற மனோ கணேசனின் நேர்மையான ஆதங்கத்திற்கும் உள்ள பேதமே இதுதான்.

    ஒடுக்கப்பட்டவனின் குரல் நேர்மையானது;உண்மையானது;
    வெளிப்படையானது;யாருக்கும் அஞ்சாதது.

    உண்மையான போராளிகளே! இதைக்கற்றுக் கொள்ளுங்கள்.

    • Yaroo says:
      13 years ago

      இலங்கையில் தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடு என்றும் அதற்காக ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடவேண்டும் என்றும் சமரசமில்லாமல் சொல்பவரகள் இடதுசாரிகளே. இலங்கையில் சுய நிர்ணய உரிமை வேண்டாம் என்று காலத்துக்குக் காலம் தத்துவம் பேசியவர்களை பட்டியல் போடுங்கள் பார்ப்பம்!
      முதலாவதாக சுய நிர்ணய உரிமை என்றாலே சமஷ்டி என்று பல்டி அடித்தது தமிழரசுக் கட்சி. இரண்டாவதாக தேர்தல் முடிந்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக பல்டி அடித்து கூட்டணி. மூன்றாவதாக திம்புப் பேச்சுக்களில் பல்டி அடிதது மாநில சுயாட்சி முழுவதையும் தனது கைகளில் தந்தால் தமிழீழம் துறப்பதாக பல்டி அடித்தது அப்பாவி பிரபாகரனும் அட்வைசு பாலசிங்கமும். பேச்சுவார்த்தைக் காலத்தில் அகநிலை சுயநிர்ணய உரிமை என்று தமிழீழம் எல்லாம் தேவயில்லை என்று பல்டி அடித்தவர் பாலசிங்கம்.
      இடதுசாரிகளோ சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்துபோகும் உரிமை என்ற கருத்தை எப்போதுமே விட்டுக்கொடுதததில்லை.
      உங்களது முதலாளித்துவத்தில் பாசிஸ்டுகள், ஏகாதிபத்திய வாதிகள், பின்நவீனத்துவக் காரர்கள், குறுந்தேசிய வாதிகள், உங்களைப் போல இனவாதிகள் என்று பல வகையறாக்கள் இருப்பதைப் போல இடதுசாரிகளிலும் போலி இடதுசாரிகள் இருக்கிறார்கள். பாலசிங்கம் வாசுதேவ போன்றவர்கள் இந்த வகையே.

  2. செய்வினை says:
    13 years ago

    ஓய் Yaroo! “இடதுசாரிகளோ சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரிந்துபோகும் உரிமை என்ற கருத்தை எப்போதுமே விட்டுக்கொடுதததில்லை.” என்று எழுதியதன் மூலம்,இலங்கையில் இடதுசாரிகள் இல்லை என்று வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

    ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்த ஸ்டாலின்,”நண்பனாக இருந்து கொண்டு அடிச்சுப் போட்டியே.” என ஹிட்லரை நோக்கி அலறிய அலறல்,இன்று இடதுசாரிகளின் Glasnost ஆக வெளியில் கிடக்கிறது.
    லெனின்,ஸ்டாலின்,ட்ரொஸ்கி,மாஓ போன்றவர்களும் அவர்தம் பெண்டாட்டிகளும் அடித்த பல்டி பற்றியும்,உங்கள் முகவர்களிடம் கேட்டறிந்தால்,ஒர் அடிமைப்படுத்தப்பட்ட இனத்தின் வாழ்வியல் போராட்டம் பற்றி,நையாண்டி பண்ண மாட்டீர்கள்.
    ஓய் Yaroo! இடதுசாரியாகக் காட்டிக் கருத்தெழுத வந்து,என்னை இனவாதியென குறிசுட வெளிக்கிட்டு,உங்களுக்கெல்லாம் எதுக்கு வாதம்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...