வெலிவெரியவில் மக்கள் மிக இறுக்கமாகத் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டங்கள் வளர்ச்சியடைந்து மக்கள் போராட்டமாக, தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளுக்குக் கூட குரல்கொடுக்கும் போராட்டமாக வளர்ச்சியடையும் நிலை காணப்பட்டது. இதனைக் கண்டு மிரண்டவர்கள் ராஜபக்ச பாசிஸ்டுக்கள் மட்டுமல்ல. போராட்டங்களையும் மக்களின் உணர்வுகளையும் அன்னியர்களுக்கு விற்பனை செய்யும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் கூட. மக்களைப் போராடாமல் மௌனித்திருங்கள் என்று வீடுகளுக்குள் முடக்கிவிட்டு ஐக்கிய நாடுகள் சபையோடும் அமரிக்காவோடும் ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பேசித் தீர்த்துவைக்கிறோம் என்று போலி நம்பிக்கை வழங்குகிறார்கள்.
இந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் போராட்டத்தைக் கண்டு மிரண்டு போயுள்ளது. விசாரண நடத்த வேண்டும் என்று கூக்குரலிடுகிறது. மக்கள் போராட்டம் மேலும் தொடரும் என்ற அச்சத்திலேயே அவற்றை ஒடுக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முனைகிறது. இந்த வகையிலேயே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈழப் போராட்டம் அன்னியர்களதும் விதேசிகளதும் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.
வெலிவெரியப் போராட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைத் திசைதிருப்பவே இலங்கை அரசாங்கம் தனது குண்டர்படைகளுடன் கிரான்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியது. அமரிக்க ஆதரவுடனும் கோதபாயவின் வழிகாட்டலிலும் செயற்படுவதாகக் கருதப்படும் பௌத்த அடிப்படை வாதக் குழுக்களின் ஊடாக போலிஸ் பாதுகாப்புடன் இத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வெலிவேரிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. வெலிவேரிய மற்றும் கிராண்ட்பாஸ் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
துரித கதியில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
வெலிவெரிய , வெலி என்பது சன்ட் மண் இச் சம்பவம்நாடு மன்னகிவிட்டதென்பது பொருள் .
அவுக மெரண்டுட்டாங்களா இல்லநீங்க மெரட்டுறீங்களா அவுகள ?