ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது தலைமைத்துவத்தின் கீழ் நாடு அமைதியான முறையில் விரைவாக அபிவிருத்து அடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியான நெருங்கிய உறவுள்ளது.இருநாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய பல வேலைத் திட்டங்களில் இனிவரும் காலங்களிலும் இணைந்து செயற்பட நாம் விரும்புகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு மேலும் அதிகாரம் : வெற்றிக்களிப்பில் ராஜபக்ஷே பேட்டி.
தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். தமிழர்களுக்கு மேலும் அதிகாரம் வழங்கப்படும்’ என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே வாக்குறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே, அதிபர் தேர்தலைத் தொடர்ந்து, பார்லிமென்ட் தேர்தலையும் விரைவில் நடத்த, ராஜபக்ஷே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ராஜபக்ஷே, செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி: அதிபர் தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடந்து முடிந்துள்ளது. அவசர நிலை தொடர்பான விதிமுறைகள் படிப்படியாக நீக்கப்படும். இருந்தாலும், இந்த விஷயத்தில் அவசரம் காட்ட மாட்டோம். பார்லிமென்ட் தேர்தலும் விரைவில் நடத்தப்படும். இதற்கு பின், தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டம் குறித்து, தமிழர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனைக்கு பின், தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான புதிய அரசியல் திட்டம் அறிவிக்கப்படும். தமிழர் பகுதிகளில் எனக்கு ஓட்டு குறைவாக விழுந்துள்ளது குறித்து கேட்கப்படுகிறது. எனக்கு ஓட்டு விழுந்துள்ளதோ, இல்லையோ, அவர்கள் ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளித்ததே பெரிய விஷயம் அல்லவா? பல ஆண்டுகளாக ஓட்டளிக்க விடாமல் அவர்கள் தடுக்கப்பட்டு இருந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட அதிகார பகிர்வு அளிக்கப்படும்.
இலங்கைக்கு எப்போதுமே இந்திய அரசு உதவி செய்து வந்துள்ளது. தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பான, புதிய அரசியல் திட்டத்துக்கும், இந்தியா ஆதரவு அளிக்கும் என, நம்புகிறேன். இது, இலங்கையின் உள்நாட்டு விஷயம் என்பதை இந்தியா நன்றாக உணர்ந்துள்ளது என்று எனக்கு தெரியும். இருந்தாலும், இந்தியாவை சார்ந்து தான், நாங்கள் உள்ளோம். தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் எந்த விஷயமாக இருந்தாலும், அது, பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை பெற்றதாக இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த திட்டம் செயல்படாது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியபோது, இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக சிலர் என்னை கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர்களின் விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில், தற்போது மக்கள் எனக்கு பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். பயங்கரவாதத்தில் இருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும், இலங்கை மக்களுக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது. இதற்காகவே, எனக்கு ஓட்டளித்துள்ளனர்.
என்னை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகா, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் பயப்படுவதற்கான எந்த அவசியமும் இல்லை. தேவையில்லாமல், அவர் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை. இலங்கை மக்கள் அனைவரும், கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அமைதிக்கான புதிய தொடக்கமாக, இந்த தேர்தல் வெற்றியை கருதுகிறேன். இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.
மேலும்:
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6429
Again India on LTTE security alert:
ecurity alert has been sounded in India following the seizure of ammunition on the Tamil Nadu coast and the arrest of four Indian men who allegedly helped former Tamil Tiger (LTTE) guerrillas fleeing Sri Lanka take shelter in India.
Also unearthed from prime accused Selvakumar alias Jeeva’s property in Rameshwaram were Rs.800,000 in Indian currency and half a kilo of heroin valued at 100,000 dollars in the global market, official sources here said.
A Tamil web site known to be controlled by LTTE sympathizers has sought to blame Home Minister P. Chidamabaram for the killing of LTTE political chief B. Nadesan who was allegedly shot dead along with others when they tried to surrender to the Sri Lankan military last year.
In the recent past, pro-LTTE literature has branded India a ‘traitor’ and poured scorn on Tamil Nadu Chief Minister M. Karunanidhi, a key backer of Prime Minister Manmohan Singh, for failing to save the LTTE.
For in detail:
http://www.dailymirror.lk/index.php/news/1274-india-on-ltte-threat-alert.html