இம்மாதம் கடைசியில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இதனையொட்டி வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் மகா பஞ்சாயத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் நாடாளுமன்றம் கூடும் போது அதை அன்றாடம் 500 பேர் வாகனங்களில் முற்றுகையிடவும் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில்தான் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பை ஏற்று விவசாயிகள் கலைந்து செல்லவில்லை.
மோடியின் இந்த அறிவிப்பு தொடர்பாக 40 விவசாய சங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா டெல்லியில் ஆலோசனை நடத்தியது பின்னர் அது பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் பல்பில்சிங் ரஜேவால் செய்தியாளர்களிடம் பேசும் போது,
“இது ஓராண்டுகால போராட்டம் இதில் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள். ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு உரிய இழப்பீடு வழங்க வெண்டு,. லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளை சுட்டுக் கொலை செய்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைதாகியிருக்கும் நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக மாற்றும் வகையிலும் அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பைக் கோரும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலைக்கான சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். மின்சார சட்டத்தை கைவிட வேண்டும். போராட்டக்காலங்களில் ஏராளமான விவசாயிகள் மீது வழக்குகள் போடப்பட்டன.அவைகளை திருமப்பெற வேண்டும்”என பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள். இவைகளை நிறைவேற்றா விட்டால் திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை நடைபெறும் என அறிவித்துள்ளார்.