Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

விலங்குப் பண்ணை எழுத்தாளர் ஜோர்ஜ் ஓர்வெல் ஒரு MI5 உளவாளி

இனியொரு... by இனியொரு...
06/08/2014
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

goஉலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கின் வெள்ளை  ஜனநயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல.

சோசலிச நாடுகளில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆழமான ஜனநாயக அமைப்பு முறை ஒன்று காணப்பட்டதை முற்றாக மறைத்து அவை சர்வாதிகார நாடுகள் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்கு ஓர்வலின் நாவல் இன்றுவரை உதவி செய்கிறது. 70 களின் ஆரம்பத்தில் சோசலிச நாடுகள் முற்றாக அழிந்துபோய் சர்வாதிகார நாடுகளாக மாறிவிட ஓர்வெலின் விலங்குப் பண்ணையே சோசலிச மாதிரியாக பாடசாலைக் காலத்தொலிருந்து சிறுவர்களின் மனதில் விதைக்கப்பட்டது. ஓர்வெல் எழுத்தாளர் என்பது அவரது ஒரு முகம் மறுமுகம் அவர் ஒரு பிரித்தானிய உளவாளி.

தொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க அடிவருடி எவ்வாறு நச்சுக்கருத்துக்களை விதைத்தாரோ உலக கம்யூனிச முகாம்ற்கு எதிரான எழுத்துக்களின் அரிச்சுவடியை ஆரம்பித்தவர் ஜோர்ஜ் ஓர்வல்.

ஜோர்ஜ் ஓர்வல் குறித்து பிரித்தானிய பொலிசாருக்கும் பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ 5 இற்கும் இடையே ஒரு போராட்டமே நடந்திருக்கிறது. ஓர்வல் அதீ தீவிர புரட்சிகர கம்யூனிஸ்டாக தன்னைக் உலகிற்கு வெளிக்காட்டிக் கொண்டதே இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. பிரித்தானிய போலிஸ் இவர் கம்யூனிஸ்ட் என்று பிந்தொடர்ந்தது.பிரித்தானிய உளவு நிறுவனம் இவரைப் பாதுகாத்தது.
மார்க்சியக் குழு ஒன்றுடன் இணைந்து இஸ்பானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஜோர்ஜ் ஓவல் கலந்துகொண்டு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமுற்றிருந்தார். இதனால் எம்.ஐ 5 இவரைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தது. இவரது வறுமையைப் பயன்படுத்திகொண்ட பிரித்தானிய உளவு நிறுவனம் இவரை உள்வாங்கிக்கொண்டது.

1942 ஆம் ஆண்டு ஓர்வல் பிபிசி இன் இந்திய சேவையில் ஊடகவியலாளராகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பிரித்தானியப் போலிஸ் படையில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஈவிங் என்ற உயர் அதிகாரி ஒர்வெலின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கொள்கிறார். ஓர்வெல் இந்திய கம்யூனிஸ்டுக்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் பார்வையை கொண்டிருப்பதாகவும் ஒரு அறிக்கையை எம் ஐ 5 இற்குச் சமர்பிக்கிறார்.

அந்த அறிக்கை குறித்து ஓர்வெல் மீது எம்.ஐ 5 எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எம்.ஐ 5 உளவு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான ஒகில்வி என்பவர் அந்த அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அவர் பொலீஸ் அதிகாரிக்கு எந்தப்பதிலும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு பிரித்தானிய ஆவணக் காப்பகத்தின் பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்ட வேளையில் தான் ஓர்வல் யார் என்பது தெரியவருகிறது.

1949 ஆம் ஆண்டு ஓர்வெல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று தான் கருதுபவர்களின் பட்டியல் ஒன்றை பிரித்தானிய உளவுத்துறையான எம் ஐ 5 இற்கு வழங்கியது வெளியான ஆவணங்களில் காணப்பட்ட தகவல்களில் ஒன்று. அந்த வேளையில் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஸ்டாலின்ஸ்டுக்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டர்கள்.

இதற்கு ஒருவருடம் முன்னதாக ஓர்வெலின் மனைவிற்கு பிரித்தானிய உணவுத்துறை அமைச்சில் முக்கிய பதவி வழங்கப்ப்பட்டது.

ஜோர்ஜ் ஓர்வெலின் நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகம் குறித்த தவறான அபிப்பிராயங்களை திட்டமிட்டுப் பரப்பி சமூகத்தை எவ்வாறு நச்சூட்டியது என கைலாசபதி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

ஜோர்ஜ் ஓர்வல் தொடர்ந்தும் தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவும் இடதுசாரியாகவுமே உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதெ வேளை காட்டிக்கொடுப்பாளனாக உளவு நிறுவனத்திற்கு வேலைபார்த்திருக்கிறர். கம்யூனிசத்திற்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்குவதில் உளவு நிறுவனத்தின் அடியாளாகத் தொழிற்பட்டிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள்அதிகரவர்க்கத்தின் மரணக் கிடங்கில் புதைந்து கிடக்கின்றன.. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றது.

ஜனனி இன் அமைப்பில் இராணுவ உளவாளிக்கு முக்கிய பதவி

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஜனனி இன் அமைப்பில் இராணுவ உளவாளிக்கு முக்கிய பதவி

ஜனனி இன் அமைப்பில் இராணுவ உளவாளிக்கு முக்கிய பதவி

Comments 10

  1. kumar5 says:
    12 years ago

    ஓர்வலின் கருத்தை உறுதிப்படுத்திய சீன ,ருசிய முதலாளித்துவம் வாழ்க.ஒர்வலும், ஸ்டாலினும், லெனினும் செய்து முடித்தது ஒன்றே தான்.அனைவருமே MI5 CIA உளவாளிகள் தான்.

    எங்கே சீன ருசியா கொம்முனிசம் போனது இன்று. ஒடுக்கப்படும் இனங்களின் உரிமையை மறுப்பதேன், ஏன் இலங்கை அரசிற்கு இன்றும் ஆதரவு கொடுப்பது ஏன்?

  2. kumar5 says:
    12 years ago

    ஒர்வேல் உளவாளி எனும் கூற்று மட்டும் போதாது,ஸ்டாலினையோ லெனினையோ அவர்கள் வழி வந்த இன்றைய ரஷ்யாவையோ, சீனத்தையோ நியாயப்படுத்த.

    இது கருணா(ஒர்வேல் உளவாளி) மீது பழி போடும் புலித்தேசியவாதிகளிட்கு ஒப்பாகும்.

    அல்லது

    போராடாத இடதுசாரிகள் புலிகள் மீது பழி போடும் தன்மைக்கு
    ஒப்பாகும்

  3. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    That is new information. I like the numbers. MI5 and MI6. Irsih will come back into the UK. United Kingdom. UBS. United British Republics.

  4. kumar-8 says:
    12 years ago

    தமிழர்கள் என்றுமே கம்யூனிஸ்ட்டுக்களை ஆதரித்தது கிடையாது. அப்படியிருக்க ஏன் சீனா ,ரஷ்யா உதவில்லை என்று கேட்கும் மரமண்டை தமிழர்கள் விரும்பும் அமெரிக்கா ஏன் தேசிக்காய் தலைவரை அழிக்க பக்சே அரசுக்கு உதவியது  என்பதை புலனாய்வு செய்யலாம்.

    • lala says:
      12 years ago

      சரிதான் . தமிழர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்களை ஆதரிக்கவில்லைத்தான் . அதற்கு அங்கு இருந்த பெரும்பாலான கம்யூனிஸ்கள் போலிகளாகவும்,,மாஸ்கோவிலும் , சீனாவிலும் மழை பெய்தால் இலங்கையில் குடை பிடிப்பவர்களாகவும் இருந்ததே காரணம்.

      மேலும் இலங்கயில் தமிழர்களை அழிப்பதற்கு சீனா , ரஷ்யா உதவியதையிட்டு தமிழர்கள் பெரும்பாலும் அந்த நாடுகளை குறை கூறுவதில்லை . இந்த மாதிரி விடயங்களில் அந்த நாடுகளின் இலட்சணம் என்ன வென்பதும் அவர்களுக்கு தெரியும் .
      பெரும்பாலும் மேற்குலக நாடுகளையே அவர்கள் குறை கூறி வருகிறார்கள் .

      ஆனால் தமிழர்களிடையே இன்னமும் எச்ச சொச்சமாக இருக்கும் ரஷ்ய , சீனா ஜால்ராக்களும் , இடது சாரிகளும் , தமிழர்களது அழிப்பில் பெருமளவு பங்கு கொண்ட தமது தாசர்களான ரஷ்யாவினதும் , சீனாவினாதும் பங்கை மூடி மறைத்து விட்டு , அவர்களை நல்ல பிள்ளைக்கு வைத்து விட்டு மேற்குலக நாடுகளுக்கு தர்ம அடி கொடுக்கும் பணியினை செவ்வனே செய்கிறார்கள் ..

      இவர்களது இந்த நரித்தனமான பிர்ச்சாரத்தை அப்படியே கேட்டு தலயாட்டுதற்கு தமிழ்கர்கள் உங்களைப்போல் மந்தைக்கூட்டமல்ல.
      அந்த சமயத்தில் சீனா , ரஷ்யாவின் தமிழின அழிப்பு குறித்து பேசுவதற்கு தமிழர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு . அத்ற்கு அவர்கள் இலங்கையில் போலி கம்யூணிஸ் களை ஆதரித்திருக்க வேண்டுமென்பதில்லை..

    • kumar5 says:
      12 years ago

      அமெரிக்கா ஏன் தேசிக்காய் தலைவரை அழிக்க பக்சே அரசுக்கு உதவியது என்பதை புலனாய்வு செய்யலாம்.
      // மேற்கு எதிர் கிழக்கு இரட்டை சிந்தனை முறை தான் நமது புலனாய்வை தடுக்கிறது.
      .
      .

      தமிழர்கள் கம்யூனிஸ்ட்டுக்களை ஆதரித்து இருந்தால் சீனா ,ரஷ்யா உதவி இருக்கும்?

      .
      .
      எங்கே சீன ருசியா கொம்முனிசம் போனது இன்று. ஒடுக்கப்படும் இனங்களின் உரிமையை மறுப்பதேன், ஏன் இலங்கை அரசிற்கு இன்றும் ஆதரவு கொடுப்பது ஏன்?
      .
      .

      தமிழர்கள் கம்யூனிஸ்ட்டுக்களை ஆதரிக்காததால் தமிழர்களை அழிக்க இலங்கை அரசிற்கு இன்றும் ஆதரவு. அனைவருமே MI5 CIA உளவாளிகள் தான்

    • Sutharsan says:
      12 years ago

      அதுதான் கொமியூனிசம் பேசுன ஜேவீபி காரங்கள அந்த ரஸ்ஸியனும் சீனனும் வந்து காப்பாத்துனானுங்க, நல்லா தெரிஞசு வச்சிருக்காரு இந்த உரமண்டையர்.

  5. kumar-8 says:
    12 years ago

    லாலா உமக்கு பேசிக் விஷயங்கள் ஒன்றுமே தெரியாது என்பது நன்றாகத் தெரிகிறது.

    • lala says:
      12 years ago

      சொல்வதற்கு எதுவுமேயில்லாது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டால் உமக்கு எதுவுமே புரியவில்லை , எமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஏகடியம் பேசுவதுதான் காலம் காலமாக சீன , ரஷய கம்யூனிஸ்ட் தாசர்கள் செய்து வருவது.

      இலங்கி , இந்திய கம்யூனிஸ்கள் பற்றி புரிந்து கொள்வதற்கு பேசிக் அறிவு கூட வேண்டியதில்லை என்பது உமது பேசிக் அறிவுக்கு புரியவில்லை..

      • kumar5 says:
        12 years ago

        ஒரு சமூக மாற்றத்தை வெம்பி பழுக்க எண்ணுவோர்களும் , படிமுறை சமூக மாற்றத்தை மறுத்து அல்லது தயாராயில்லாது
        சமூகத்தையே ஒரு நாளில் புரட்டிப்போடும் எண்ணமுள்ளவர்களும் MI5 CIA உளவாளிகள் தான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...