ஒரு இயற்பியில் விரிவுரையாளரை கொலை செய்ததாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவாளிகள் மீது இரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முட்டாள் தனமானது என்று கூறி அமெரிக்க மறுத்துள்ளது.
மசூட் அலி முகமதி என்னும் அவர் தனது வீட்டை விட்டு கிளம்பிய போது குண்டு வெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டதாக இரானிய அரச ஊடகம் கூறியது.
அணு விஞ்ஞானியாக இவரை விபரித்துள்ள அரச தொலைக்காட்சி, புரட்சிக்கான விசுவாசமான ஊழியர் என்றும் வர்ணித்துள்ளது.
ஆனால், அவர் வேறு விஞ்ஞானப் பணிகளில்தான் ஈடுபட்டார் என்பதுடன், அவருக்கு இரானின் அணுத்திட்டத்தில் தொடர்பு கிடையாது என்பதுபோல் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
BBC.
“இந்தக் குற்றச்சாட்டை முட்டாள் தனமானது என்று கூறி அமெரிக்க மறுத்துள்ளது.”
ஈரான் தேர்தல் குழறுபடியானது என்று அமெரிக்கா நடத்துகிற பிரசாரத்தை விடவா?