மாஸ்கோ, ஆக .25: கிரைகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 67 பயணிகள் உயிரிழந்தனர். எனினும் 17 கூடைப்பந்து வீரர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
.
கிரைகிஸ்தான் நாட்டின் கிரைக்ஸ் தலைநகரிலிருந்து போயிங் விமானம் ஒன்று ஈரான் நாட்டுக்குசென்று கொண்டிருந்தது. எனினும் இந்த விமானம் புறப்பட்ட 10வது நிமிடத்திலேயே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து விமானம் மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 68 பேர் பலியானார்கள்.
எனினும் விமானத்தில் பயணம் செய்த பள்ளி ஒன்றைச் சேர்ந்த 17 கூடைப்பந்து வீரர்கள் உட்பட 22 பேர் உயிர் தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட தகவல்கள் 70 பேருக்கு மேல் பலியானதாக தெரிவித்தன. விபத்தில் உயிர் தப்பியவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.