சிறீ லங்கன் ஏர் லன்ஸ் என்ற நிறுவவனம் இலங்கை அரசின் விமான சேவை நிறுவனம் என்பது வெளியில் சொல்லப்படும் செய்தி. ராஜபக்ச குடும்பம் இலங்கை முழுவதையும் சுரண்டி அன்னிய நாடுகள் முழுவதும் சொத்துக்களாகப் பதுக்கிவைத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். இலங்கை அரசினதும் மக்களின் வரிப்பணத்திலும் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை விமானச் சேவை முழுவதுமே பிரித்தானியாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை பிரித்தானிய அரசும் பார்த்துக்க்கொண்டிருக்கிறது.
சிறீ லங்கன் ஏர் லைன்ஸ் என்ற நிறுவனம் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட பிரித்தானிய அரசிற்கு வரிகட்டும் நிறுவனம். இது தொடர்பான தகவல்கள் விலாவாரியாக பிரித்தானிய கொம்பனி ஹவுசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இருளுக்குள் புதைந்திருந்த இந்த உண்மையை வெளிப்படுத்தும் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
கடந்த வருடத்திற்கான கணக்கு பிரித்தானிய கொம்பனி ஹவுசில் சிறீ லங்கன் ஏர் லைன்ஸ் பதிவு செய்துள்ளது.
இலங்கை அரசின் பங்கு 40 வீதமும் தனியார் முதலீடு 60 வீதமும் என்று இலங்கையில் கூறப்படும் சிறீ லங்கன் ஏர்லைன்சின் முழுமையான நிதி நடவடிக்கைகளும் சட்டவிரோதமாக இலங்கைக்கு வெளியில் மேற்கொள்ளப்படுகின்றது.
ராஜபக்சவின் ஊழல் பேரரசு தனது நாட்டின் தேசிய விமானச் சேவையை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அடியாட்களுக்கும் பங்குபோட்டுள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட பங்குதாரர்களின் அறிக்கை பிரித்தானிய கொம்பனி ஹவுசில் சமர்ப்பிக்கப்பட்ட பங்குதாரர்களின் அறிக்கைக்கு முற்றிலும் வேறுபட்டது. பல பில்லியன்கள் பெறுமதியுள்ள இந்த வியாபாரத்தில் பிரித்தானிய அரசிய மட்டங்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
சிறீ லங்கன் ஏர்லைன்சின் பிரித்தானியப் பிரிவைத் தொடர்புகொண்டு இது தொடர்பாகக் கேள்வியெழுப்பிய போது தமது நிறுவனம் முழுமையாக இலங்கையைச் சார்ந்த நிறுவனம் என்றும் மேலதிக தகவல்கள் தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்தனர்.
ஏர்லைன்சின் லண்டன் மதிப்பு £279,115,152 பவுண்ஸ்கள் அதாவது 2.79 பில்லியன் பவுண்ஸ்கள் என கொம்பனி ஹவுஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு பெரும் தொகையான திருட்டுச் சொத்தை பிரித்தானிய அரசு தனது எல்லைக்குள் வைத்துக்கொண்டு இலங்கை அரசைத் தண்டிக்கப் போவதாகக் கூற அதனை நம்பும் நம்பக்கூறும் தமிழ்த் தலைமகளை என்னென்பது?
அமெரிக்காவில் நடைபெற்ற கூத்தாட்டம் ஒன்றில் சஜின் வாஸ் குணவர்தனவால் நையப் புடைக்கப்பட்ட கிரிஸ் நோனிஸ், முன்னை நாள் ஜனாதிபதி பிரேமதாசவின் அடியாள் பாஸ்கரலிங்கம் உட்பட ராஜபக்சவிற்கு நெருக்கமான பலர் சிறீ லங்கன் ஏர்லைன்சின் லண்டன் தலைமையகத்தில் இயக்குனர்கள்.
இலங்கை ரெலிகொம் சேவைக்கும், விமானச் சேவை ஊழலுக்கும் புலம்பெயர் தமிழ் வியாபார நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
ஒரு நாட்டின் தேசிய விமானச் சேவையையே கடத்தி அன்னிய நாட்டில் நட்டுவைத்து கொள்ளையடிக்கும் இனக்கொலையாளி ராஜபக்ச கும்பலுக்கு பிரித்தானியாவும் துணைபோகிறதா என்பது விசாரணைக்கு உட்படுத்தபட வேண்டும்.
அப்பாவி உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை எந்தக் கூச்சமுமின்றிக் கடத்திக் கொள்ளையடித்த இக் கும்பல்கள் இலங்கையில் மக்களிடம் சென்று வாக்குக் கேட்கின்றன.
சர்வாதிகாரி ராஜபக்சவின் பகல் கொள்ளை தொடர்பாக பிரித்தானிய அரசிடம் முறையிடும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். உலகின் மிகப்பெரும் பகல் கொள்ளையான இக் கடத்தல் தொடர்பான வழக்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கான முனைப்புக்களை இனியொருவின் வாசகர்கள் சிலர் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
சிறீ லங்கன் ஏர் லைன்சில் கிரிஸ் நோனிசின் பங்குகளின் மொத்தப் பெறுமதி : £247,837 (http://companycheck.co.uk/director/904783280 )
சிறீ லங்கன் ஏர் லைன்சில் ராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் பங்குகளின் மொத்தப் பெறுமதி : £56,113,690,000
( http://companycheck.co.uk/director/904725839 )
http://companycheck.co.uk/search/results?SearchCompaniesForm[name]=SRI+LANKAN+AIRLINES+LIMITED+&yt3=
http://companycheck.co.uk/director/911540190/ANTHONY-NISHANTHA-WICKRAMASINGHE/directors-secretaries
தொடர்புடைய பதிவுகள்:
நீங்கள் தந்துள்ள இணைப்புகளின் படி அவர்கள் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் சொத்துகள் மற்றும் பங்குகளின் சந்தை மதிப்புத் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நோனிஸ் சிறீ லங்கன் ஏர் லைன்சில் பங்கு வைத்திருப்பதாக எந்தக் குறிப்பும் கிடையாது.
“சர்வாதிகாரி ராஜபக்சவின் பகல் கொள்ளை தொடர்பாக பிரித்தானிய அரசிடம் முறையிடும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்”
இந்த ஆண்டின் சிறந்த ஜோக்.
இனிஒரு கூடவா பிரித்தானிய அரசை நம்புகிறது.
இனியொருவின் ஆய்வுகளுக்கு பாராட்டுக்கள்.
இந்த பாஸ்கி என்ற திருட்டுப்பயல் நன்கே சுட்டிக்காட்டப்படுகிறான். பாஸ்கரலிங்கம் பிரதமராயிருந்த ரணில் விக்கிரமசிங்க-இன் ரகசிய ஆலோசகனாக செயற்பட எட்டு ஆண்டுகள் கழிந்து கொழும்புக்கு திரும்பி கலதாரி ஐந்து நட்சத்திர ஹோடேலில் குடிகொண்டிருந்தபோது ஸ்ன்டேடைம்ஸ் பத்திரிகையால் ஒரு பேட்டிக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு உளறியவை மேலதிக ஆய்வுகளுக்கு உதவியாகலாம்:-
http://www.sundaytimes.lk/020414/bus/5.html
அதே நேரம் சொறிக்கள்ளன் கிரிஸ் நோனிஸ்-இன் தொடர்வியாபார வெறி காட்டும் சுவாரசியமான விடயம் ஒன்றும் இணைப்புகளினூடு புலப்படுகிறது. நியூயோர்க்கில் கொமென்வெல்த் அமைப்போடு தேவையான அனைத்து வேலைகளும் ராஜபக்ச கும்பலால் நோனிஸ்-இடமிருந்து கறக்கப்பட்ட உடனேயே சூடோடு சூடாக நோனிசுக்கு அடி உதை உலக்கு எனப் பரிசளிக்கப்பட்டது. இப்போ லண்டனில் பதிவாகியுள்ள இன்னுமொரு கொம்ம்பனியான yocomm.com உடன் என்ன செய்யாப்போறானோ ? தனக்கு மட்டுமல்ல, ராஜபக்ச அரசுக்கும், தனது ராணி, ராணியின் அந்தரங்க பிரபுக்கள் சிலர், கொமென்வெல்த் அமைப்பின் காலனித்துவ வரலாறு என்று எல்லாக் களவுகளுக்கும் புகழாரம் சூட்டி இப்போ அந்திரத்தில் மிதக்கிறான் நோனிஸ்.
http://companycheck.co.uk/company/03978862/YOCOMM-LTD/directors-secretaries#people-summary
https://archive.today/fiK9g
“The combined cash at bank value for all businesses where Ramalingam holds a current appointment equals £3,681,670,000, with a combined total current assets value of £56,113,690,000 and total current liabilities of £66,643,720,000. Roles associated with Ramalingam Paskaralingam within the recorded businesses include: Director ”
So his worth is minus £9,953,030,000/- . So he seems to be in debt?
His liabilities exceed his assests, so what you say is wrong. சிறீ லங்கன் ஏர் லைன்சில் ராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் பங்குகளின் மொத்தப் பெறுமதி : £56,113,690,000
Thats the whole point. London is a premier vehicle that facilitates offshore underground black money hiding
Read the linked PDF titled MISSING WEALTH OF NATIONS
http://krugman.blogs.nytimes.com/2014/04/11/offshore-and-underground/?_r=0
What Zucman points out is that we have international data on investment positions, with each country reporting its assets abroad and foreign-owned assets at home. But the numbers don’t add up: globally, liabilities are substantially larger than assets. That’s mathematically impossible, but Zucman shows that it’s what will appear in the statistics if a lot of money is run through offshore havens, so that the ownership doesn’t show up in anyone’s national statistics
தேசிய சொத்துக்களை கொள்ளயடிப்போர் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
இலங்கையின் சொத்தென்பது அனக்கு வாழும் சகல இனமக்களின்
வியர்வை சிந்திய உழைப்பேயாகும். இந்த அரச கொள்ளைக்கூட்டத்திற்கு
துணைபோகும் புலம் பெயர் தமிழர் எவ்வாறானவர்களாக இருப்பார்கள்?
பாடசாலைகளிற்கு பென்சிலும் கிராமங்களிற்கு மலசல கூடமும்
கோவில்களிற்கு கிண்றுகழும் கொடுத்துவிட்டு தொலைக்காட்சிகளில்
தம்மை புண்ணியவாஙளாக விளம்பரப்படுத்துகின்றார்கள்.
100 வருடத்திற்கு முன்பே தென்னிலங்கைக்கே போகாமல் தமிழர் தமது பகுதிகளில் மேன்மையாக வாழ்ந்தவ்ர்கள்தான்.
தமது நாட்டு பெண்களை கூட வெளிநாட்டிற்கு வித்து மாதம்தோறும் வருகின்ற பணத்தை வரி வரி என்று கூறி பொருட்களின் விலை ஏற்றி கொல்லை அடிக்க காத்திருக்கின்ற கூட்டம் அப்பா இவர்கள் இவர்களுக்கு எதை சொன்னாலும் ரோஸம் பிடிக்காது ( இலங்கையில் கட்டாயம் ஒன்று நடந்தே ஆகவேண்டும் அது என்னவென்றால் இவன்ட ஆட்சி மாற வேண்டும் )