மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தைத் தவிர மற்றவார்களைக் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்ததில்லை. மைத்திரிபால சிரிசேன உட்பட ஏனையவர்களின் கணக்கு வழக்குகள் மகிந்தவின் ஊடாகவே கையாளப்பட்டன. தன்னையும் சூறையாட அனுமதிக்கக் கோரிய ஜெயராஜ் பர்னான்டோ புள்ளை மகிந்த அரசால் படுகொலை செய்யப்பட்டார். மகிந்த சூறையாடலுக்கு அனுமதித்த மிகச்சில ஆதரவாளர்களுள், விமல் வீரவன்ச வாசுதேவ நாணயக்கார போன்றோர் பட்டியலிடப்படுகின்றனர். ரத்மலான பகுதியில் ஆயிரம் தொடர்மாடிக் கட்டுமான திட்டத்தில் பல பில்லியன்களை விமல் வீரவன்ச கொள்ளையடித்த ஊழல் சமபவம் அவரது மனைவின் கைதின் பின்னர் வெளி வந்துள்ளது. இதனை மையப்படுத்தியே ஊழல் விசாரணைகள் நடைபெறுகின்றன.
பல்வேறு பெயர்களில் கடவுச் சீட்டுக்களை வைத்திருந்தார் என்று ஆள்மாறாகட்டக் குற்றம் சுமத்தியே விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச கைது செய்யப்பட்டார்.