தற்போது ‘ விஜய்’ தொல்லைக் காட்சியில் இரு விளம்பரங்கள் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன. தீபாவளி , பொங்கல் என்று பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள் வந்தாலும், இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. சைவப் பெரும்குடி மக்களுக்கு இச் செய்தி கட்டாயம் தெரிந்திருக்கும்.
நவராத்திரி நாட்களில், சரஸ்வதி சபதம் போடுவார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று திருவிளையாடல் போடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.
இதுதான் அந்த விளம்பரங்கள்:
1.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘ விஜய்’ தொலைக்காட்சியில் இளைய தளபதி ‘விஜய்’ நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
2. விநாயகர் சதுர்த்தி அன்று ஆர்யாவும் நயன் தாராவும் கலந்து கொல்லும் சிறப்பு நேர்காணல் நடைபெறும் என்பதை பெருமையுடன் அறியத்தருகிறோம்.
சைவப்பெரும்குடி மக்களே, விநாயர் சதுர்த்திக்கும் ‘துப்பாக்கிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுவிடாதீர்கள். நயன்தாராவும், ஆர்யாவும் விநாயகரின் அருமை பெருமை பற்றிய கதாகாலாட்சேபம் நடத்தப்போகிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள்.
அனேகமாக அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று ‘தலைவா’ படம் போட்டாலும் போடுவார்கள்.
மக்களின் கலை,பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் தமிழக சினிமாவிற்குள் புதைக்கும் மோசமான போக்கு ஒன்று காணப்படுகிறது. இதனை யாரும் தட்டிக் கேட்பதில்லை. சினிமா இல்லாமல் தொலைக்காட்சிகள் இயங்க முடியாது என்பது போன்றதான ஒரு கேவலமான நிலை உருவாக்கப்படுகிறது.
விசுவரூபம் வருமா வராதா? தலைவா திரைப்படத்திற்கு என்ன நடக்கிறது?. ஒரு நாளைக்கு 10 இலட்சம் ரூபா (10000 பவுன்ஸ்) கேட்கிறாராம் சந்தானம்! …இந்தக் கதைகள்தான் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்து நிற்கின்றன.
தினமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பி, அவர்களை ஒரு மாயக்கனவுலகில் தொடர்ச்சியாக வைத்திருக்கும் காரியத்தையே இவை செய்கின்றன.
– சைவப்பழம்.
உண்ணாவிரத புகழ்… ‘மஞ்சள் துண்டு’ கருணாநிதி குடும்ப (Yellow towel Karunanidhi Family) Spice Jet’ கலாநிதிமாறனின் Sun TVயிலும் Vijay TV இற்கு குறைவில்லையென்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…
அடிக்கடி விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன…
சந்தானத்தின் ‘கலகலப்பு’ தனுச்சின் ‘வேங்கை’, பிள்ளையார் ஈயாக வருகிறார் என்று போல் ‘நான் ஈ’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
தலைவா சிறப்பு நிகழ்ச்சி…
அதுமட்டுமல்ல சந்தானமும் சிறேயாவும் இணைந்து சிறப்பு நிகழ்ச்சியாம்…
என்று ஒரே கோடம்பாக்கம் தான் விநாயகர் சதுர்த்தி…
இன்று தமிழ்நாட்டின் அரசியல் தலைமையே கோடம்பாக்கம்தானே…