பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.
எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.
இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.
பயணச்சீட்டிற்கே ஒருவருடம் வருந்தும் ஒருவர் வங்கிக்கடனிலோ, கடன் அட்டையிலோ இலங்கையில் தனது நாடகத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
முதலில் இலங்கை சென்று மற்றவர்களுக்குத் தனது நிலையை மறைப்பதற்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளை வாங்கிகொள்கிறார். பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார். இலங்கை சென்றதும் உறவினர்களுக்குப் பண உதவி, கோவில் திருவிழாக்களைப் பொறுப்பெடுத்தல் போன்றவற்றைக் கடன் அட்ட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்கிறார்.
துப்பரவுத் தொழிலாளியாக புலம்பெயர் நாடுகளில் வேலைசெய்யும் ஒருவர் இலங்கையில் காட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகும் உள்ளூர்வாசிகள் புலம்பெயர் நாடுகள் தொடர்பாகக் கனவுகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடு பற்றற்ற ஐரோப்பியக் கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் ஒன்று வடக்கிலும் கிழக்கிலும் உருவாகிவிடுகின்றது.
தாய் நாட்டில் விடுமுறையை முடித்துப் புலம்பெயர் நாடுகளை நோக்கித் திரும்பும் ஐரோப்பியத் தமிழன் தனது கடனட்டைக் கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றது.
தமது வாழ்க்கை தொடர்பான உண்மை நிலையை இலங்கைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐரோப்பியத் தமிழனும் தமது உறவினர்களுக்குச் சொல்லவேண்டும். அவர்களைக் கனவுலகத்திலிருந்து விடுவித்து சொந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகும் கடன் சமூகத்தை நோக்கி தவறான விம்பத்தை அழிக்க வேண்டும். எங்கள் சொந்த மண் எல்லா வளங்களையும் கொண்டது, வானமும் வையகமும் ஒத்துழைக்கும் செல்வம் கொழிக்கும் பிரதேசங்கள் அவை. இவற்றைப் புரிந்துகொண்டால் ஒடுக்குமுறைக்கு எதிராகப் வாழ்ந்து போராடி வெற்றிபெறும் சமூகம் தோன்றும்.
அருமையான பதிவு.
இந்த நிலை மாறவேண்டும் போலியான திரையை உடைத்து நியத்தை வெளிக்கொண்டுவரவேண்டும் இல்லையேல் நமது இனம் காலம் பூராகவும் அகதியாகவே அலையவேண்டியதாகிவிடும்.
மிக மிக உண்மையான விடயத்தை சமூக விடிவை நோக்கிய பார்வையில் எந்தவித கூச்சமுமின்றி குறிப்பிட்டுள்ளீர்கள்.நன்றி! தூரநோக்கற்று உண்மைக்குப்புறம்பான வகையில் பகட்டுக்காக வாழ த்தலை ப்பட்டதனால்தான் அடையவேண்டியத்தை அடையாமலும் செய்யவேண்டியதை சரியானநேரத்தில் செய்யாமலும் எமக்கு ஏற்பட்ட இன்னல்களை,அவமானங்களை,சரியான இடங்களில் சரியான நேரத்தில் சமர்ப்பிக்காமல் மூடத்தனமாக நடந்ததனால் அல்லவோ எமக்கு எதிராக உலகமே சேர்ந்து பயங்கரவாதப் பட்டம் கட்டி கொத்துக்கொத்தாக கொன்று ஒழித்தது. இன்று அவர் செய்யவில்லை இவர் செய்யவில்லை என்று ஒருவரை ஒருவர் கைகாட்டி எதிரிக்குப் பலம் சேர்க்கின்றனர் இல்லையேல் சம்பந்தப்படாத நாடுகளை இனங்களை குறை சொல்லி ஒப்பாரிவைக்கின்றனர் மற்றவர்களை குறைசொல்ல நமக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது? நாமே செய்யவேண்டியதை செய்தோமா? இலையே …ஏன் இன்றுவரை மாமதைகளை குறைத்துக்கொண்டு நல்லதைமுன்னெடுக்க நாங்களும் தயாரில்லை செய்யப் புறப்படுபவர்களை ஒத்துழைக்காவிட்டாலும் அசிங்கப்படுத்தாமல் விட்டுக் கொடுக்கின்ற நல்லமனப்பான்மை கூடவரவில்லை .இதுதான் நாம் !பகட்டுக்காக படாதபாடுபட்டு மாண்டுபோவதொடு மட்டுமே..இன்னும் சிலகாலங்களில் புலம் பெயர் தேசங்களில் நம் சந்ததியினர் யாரென்று தெரியாத கலப்போடு கலப்பாக காணமல் போகப்போகிறார்கள் என்பதேன் யாருக்கும் புரியாமல் ……?????புலம்பெயர் தேசத்தில் மட்டுமல்ல [பிறந்தகத்திலும் தான்….நாங்கள் திருந்த என்ன செய்யலாம் ???கேள்விகள் பலரிடம் விடை…???
தமிழ்நெஞ்சங்களேகலங்காதீர்கள்விரைவில்நாம்புத்துயிர்பெறுவோம்தியரங்களில் இருந்து மீள்வோம்.
செவ்வேல் கொற்றம் !
கொட்டிக் கிடக்குதே பெருவெளியில்
எண்ணக் குவியல்! அதை
எட்டிப் பிடித்து நீ வளம்பெறுவாய்
நற்றாள் பணிந்தே! தலை
கூடி அழுவதேன்? தலை கனத்து
வேலைத் துறந்ததேன்? வழி
தேடித் தொலைவதேன்? தமிழ் நிலத்துக்
கொற்றம் முருகவேலே!!!
முதலாம் செவ்வேலர்
தூய தமிழ்நெறித் தொண்டர்
திருமுருகாற்றுப்படை
தமிழ்முருக அரசாங்கம்
உண்மையான வாழ்க்கையை நம்மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். ஒரு சிலரின் கடின உழைப்பால் பல குடும்பங்கள் வாழ்கின்றனர்
போலி வாழ்க்கைகக்கு நமது மக்கள் மயங்குகிறார்கள். போய்வருகிறார்களும் உண்மையை எடுத்துக் கூறுவதில்லை, ஒரு சகோதரி இங்கு ஓடருக்கு இடிடயப்பம் அவித்து விற்ற பணத்தில் ஒரு பகுதியை த்தன் தங்கைக்கு பணம் அனுப்ப அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓடருக்கு இடியப்பம் எடுத்து விருந்து வைக்கிறார்கள், நான் கண்டது, நிலமையைய எடுத்துக் கூறியபோது அழுதார்கள். அதற்கு பின் தாமே ஏதும் வேலை எல்லாம் என வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
40 – 60 லட்சம் இலங்கைப் பணத்தைச் செலவு செய்து ஐரோப்பிய, அமெரிக்க கண்டங்களை அடைந்து, அகதி வாழ்க்கையை பெரும்பாலும் முட்டை…… எனக் கட்டுரையை ஆரம்பித்திருந்தால் கட்டுரையானது முழுமையாக இருந்திருக்கும். மேலும், இந்தப் பணத்தைக் கொண்டு முதலீடு செய்து ஒரு தொழிலைத் தானாக வெற்றிகரமாகச் செய்யும் வல்லமை அற்ற இவர்கள் சென்றடைந்த நாடுகளில் லேறு என்ன தொழில்களைச் செய்யமுடியும்?
மரண பயமின்றி வாழ முடியும்.நல்ல உணவு உண்ண முடியும்.நல்ல கல்வி கற்க முடியும்…..
இலங்கை இந்தியாவை விட நல்ல மருத்துவ வசதியை பெற முடியும் . #
இன்று தெற்காசியாவில் வசிக்கும் மக்களில் புலம் பெயர்ந்த தமிழர்களே மிக சிறந்த மருத்துவ வசதியை பெற்றிருக்கிறார்கள் .
அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் பெறும் மருத்துவ வசதியை தெற்காசிய மக்கள் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாது .
அப்படி பெறுவதென்றாலும் பெரும் தொகை பணம் செலவளிக்க வேண்டும்.
நீங்கள் சொல்வதில் சிரிய தவறு 40 – 60 லட்சம் இந்தப் பணத்தைக் கொண்டு முதலீடு செய்து ஒரு தொழிலைத் தானாக வெற்றிகரமாகச் செய்யும் அளவிட்கு அந்த நேர நிலமை இருக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
The folks who try to preach here didn’t do that, they escaped to the West at the 1st chance they had.
“ஒரு சகோதரி இங்கு ஓடருக்கு இடிடயப்பம் அவித்து விற்ற பணத்தில் ஒரு பகுதியை த்தன் தங்கைக்கு பணம் அனுப்ப அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓடருக்கு இடியப்பம் எடுத்து விருந்து வைக்கிறார்கள்”
ஒரு வசனத்தில் பல விடயங்களைச் சொல்லியிருக்கும்
Siva Pillai அவர்களுக்கு நன்றி
இலங்கையில் சண்டைக்கு முன்புமே ஓடருக்கு இடியப்பம் வாங்கி சாப்பிட்டிருக்கேன், இதில் என்ன புதுமை?
What you say is partially true. But let us be realistic, what is the percentage of such people end up as cleaners and dishwashers in restaurants. The author goes back to his Jaffna mentality of looking down on people whom he think are doing lesser jobs. People are not judged by what work they do. Some work more than 8 hrs to earn more and invest in their future and that of their kids. Whats wrong with having a mortgage? People do send with credit cards when they travel. That is what Westerners do. They do that with the confidence they can pay it back. Please don’t be the Jaffna man who will wants to save the money before he can spend it. Thats not how the world works. Its the author who needs togrow up not the readers here. It’s only the losers who can admire this kind of writing.
You are the one who look only your backyard, but the author mentioned about the absolute majority of Tamil people who live abroad and this is their pure reality.
You completely misunderstood about idiyappam story.
சிலா் இந்த இணையத்தளத்தில் பின்னூட்டம் இடுவதன் நோக்கம்
எதையும் எதிா்த்தே கருத்துக்கூறவேண்டும் என்ற பிற்போக்கு புத்
தியினாலேயன்றி வேறு காரணம் கிடையாது.
தமிழ் நன்றாக தொியாதவா்களால் முழுமையாக தமிழ் பதிவுகளை
விளங்கிக்கொண்டு கருத்து வெளியிடுவது கடினம்
இயலாமல் போனால் யாழ்ப்பாணத்து மனோபாவம் அது இது என்று
புலம்பவேண்டியது.
A large proportion of our migrant population have educated their children, to an extent that would not have been possible back home. The next generation is filled with hope and aspirations. They have succeeded and so have most of us. The future is bright and let us think positive. Let us look at those amongst us who have succeeded and let them guide and inspire us. Yes we do love going home every year and that is a positive sign at least for the first generation. Most of us are comfortable in our expenses.
I clearly understood what was said because I can relate to it myself. When I go on vacation I incur a debt but not without my knowing. I don’t have to pretend to my people what I am not. If I don’t have the money to I tell them that I don’t. If you are a character who faked you always did that in SL too. No one can change you. What’s wrong with the money made from idiyapam making used to buy idiyaoam in SL ? So idiyapam making in the West is something lesser than being a doctor or something ? Isn’t this your Jaffna man mindset ?
Let me tell you about my travel to SL last year, I travelked by CTB bus, took the train, stayed in non-airconditined houses, ate Perera and Sons pastries, had my breakfast at Indo Ceylon, walked as much as I can. Always remeber that song from 9 Ruppee Note . Its all a matter of getting used to.
Sutharsan, you did misunderstand the article, deliberately or otherwise.
The point of the article was not to belittle any profession. The point was that many
diaspora Tamils create an illusion about western countries when they visit their homeland. People who are relatively poor give the impression that they are financially doing well in the west. This gives people back home the wrong idea. I have seen many people suffer because of the misplaced notions about life in the west. There is nothing wrong in migrating, but people should come with realistic expectations, and avoid wasting money. That is all the article says. What you did on your own travels is irrelevant. If you led a simple life good on you – but it is a truth that many Tamils who travel back spend unwisely. As for spending from credit card, you read any book by a western economist and it would tell you it is not a good idea. The fact that the average westerner does it does not make it right. By saying this, it is you who display a ‘Jaffna’ mentality that if the westerners do something, it must be right.
“Sutharsan, you did misunderstand the article, deliberately or otherwise…”, I did understand what the writer tried to say and I cannot agree with what he says here. Majority of the people who go to SL on vacation have the means to do so and they do not end up in a huge debt when they get back. The few who do what the writer says would have done the same even when they were home. That’s their nature. People in SL are not dumb to see a few idiots and conclude that life is a bed of roses in the West. I too have friends & relatives who visit in SL and I cannot buy this story.
I went to sri lanka in 2011, I work in a petrol station as manager, the salary I get is 1400 pounds . we were planning to go from 2009. I did not cope with expectation of my family and friends in sri lanka. I ended up using all my credit card. Three yeas later, I’m still paying which is not ending. Just to pay the credit card, I work during the weekend including Sundays, I’m missing the time I go to church with my kids on Sundays. All that are cost of my travelling. I even told them the situation in UK, which they did not believe. On e of the other relative went from UK told them that he was running a supper market. He even showed them his ‘own’ supper market’s t-shit, on which I found ASDA sign. What a lie? I knew that he works at ASDA as a cashier. This is a great article of Sasi, please forward it to the people in Sri Lanka, they should know what’s happening here.
Young man it is very simple, when you are there don’t try to act like a millionaire, stay at cheaper places, eat cheaper but safer food, spend with your income level in your mind. If you can live within your means in the UK you can do it while you are travelling too.
I invite the others to share their experience too, sorry i dont know how to write tamil here.
I feel this is my true story.
வெளி நாட்டின் போலி வாழ்க்கையை மிக அழகாக அனுபவிக்க துடிப்பவர்களுக்கு தந்து இருக்கிறார்.
நீங்கள் சொன்னவை யாவும் உண்மை ஆனால் europe ஐ பொருத்தவரை uk ஐ தவிர மற்ற நாடுகளில் வாழுபவர்கள் கொன்சம் நிம்மதியாக வாழுகிறார்கள் பெரிய பந்தாவும் இல்லை ஆனால் uk வாழுபவர்கள் 1/h 3 pounds சம்பளத்துக்கு வேலை செய்து இவளவு ஆடம்பரம் கூடாது. லீவு கிடையாது 7days வேலை இவர்கள் europe ல் எந்த நாட்டிட்க்கும் போனது இல்லை ஸ்ரீலங்கா போய் அரைகுறை english பேசி அங்கே உள்ள கிராம மக்களை தூண்டுகிறார்கள் மற்றய eroupe மக்கள் தமிழ் பற்றுடன் உள்ளார்கள்
பெரும்பாலான தமிழர்கள் இப்படித்தான் வாள்கின்றார்கள், அனால் எல்லோரும் அல்ல.
முட்டாள்கள் எப்போதும் முட்டாள்களே.இங்கே கஸ்ரப்பட்டு வேலைசெய்து ஊரில்கொண்டுபோய் தேவையில்லாதுகொட்டுபவர்கள் முட்டாள்கள்.என்னைப்பொறுத்தவரை அது மிகக் குறைந்தவீதம்தான். வெளினாடுகளில் கள்ளவேலைகள் செய்து காசுசம்பாதிக்கும் ஒரு தமிழர்கூட்டம் இருக்கு. அரசாங்கத்துக்கு தங்கள் உண்மையான வருமானக்களைக் காட்டாமல் வருமானம் குறைந்தவர்களுக்காக அரசு வழங்கும் அனைத்துச் சலுகைகளையும் அதமூலம் களவாக எடுத்துக்கொண்டு. வீடுகளில் பழைய பொருள்களைப் போட்டுவைக்கும்நிலக்கீழ் அறைகளை வாடகைக்குவிட்டு… கடைகளைநடத்தி அரசாங்கத்துக்குக் கள்ளக்கணக்குக் காட்டி.. கடையில் வேலைசெய்யும் விசாஇல்லாஎங்கள் ஊர் தமிழர்களுக்குநியாயமான சம்பளத்தை வழங்காது அடிமாட்டுச் சம்பளம் வழங்கி… இப்படியே அடுக்கிக்கொண்டு போகக்கூடிய கள்ளவேலைகளில் ஈடுபட்டு காசு கோடிக்கணக்கில் வைத்திருக்கும் கள்ளநாய்களே இப்போநீங்க குறிப்பிட்ட மாதிரி ஊரில் காசை அள்ளிக்கொட்டுகின்றனர். இதில் ஊர்மக்களும் முட்டாள்கல்தான் கேளுங்க உங்களுக்கு எப்பிடி இப்பிடி காசு வருகுதெண்டு.நான் இங்கே கடின வேலை செய்து உழைக்கும் ஒருவன் அண்மையில் என்னிடம் என் தாய் கேட்டகேள்வி என்னை அதிரவைத்தது. அது “என்னடா மோனை இங்க வெளினாட்டுக்காரரெல்லாம் எப்பிடி கோடிகோடியா கொண்டந்து செலவழிக்கினம்நீதான் ஒரு கொஞ்சக்காசு செலவழிக்க இப்பிடி கவலைப்பர்றாய் யோசிக்கிறாய்”நான் சொன்னன் அம்மாநான்நேர்மையாய் உழைத்து முழு வருமானமும் அரசாங்கத்துக்குக் காட்டி ஒழுங்கா வருமானவரிகட்டி சீவிக்கிறன். அவ்வளவும்தான்னு.நிறைய குடும்பங்களின் அவர்களின் ரத்த உரித்துகள் சொல்வதைநம்பாமல் மற்றவன் எப்படி காசு செலவழிக்கிறான் என்பதையே பார்க்கிறார்கள். இவர்களை முட்டாள்கள் என்று சொல்லாது எப்படிச்சொல்ல… கள்ளவழிகளில் காசு பெருக்கி ஊரில்க்கொண்டுபோய்க் கொட்டும்நம்மவர்கள் இருக்கும்வரை ஊரும்விளங்காதுநம்ம இனமும் விளங்காது. அவ்வளவுதான்.
Let’s get things in the right perspective. There are people who really don’t earn that much but they spend like millionaires on borrowed money. This can give wrong impression to people in Sri Lanka.
On the positive side our people have advanced themselves in many way in higher education better job training and even wealth creation through businesses. We should be proud about our achievements in the western countries.
Please don’t paint a very negative picture purely based on small minorities.
On positive note about people who did cleaning to survive are now fast food business owners earning good profits and employ others as cleaners. Well done to them too.
yes true, our peoples want to be “the change”
The article highlighted the reality. Hope the relatives in Sri Lanka will realise the hardship of their blood relations living in overseas. I was in Sri Lanka in 2011 and 2014. I have noticed many things.
1. Many young boys are wasting their life without proper education or jobs.
2. Charitable organisations are growing with the help of foreign income. Locals are not prepared to do volunteer work.
3. Social cohesiveness in the villages are lost and many had become selfish.
4. There is no shortage of mobile phones, Skype, scooters,
5. Temples are supported by foreign income and priests are looking for overseas jobs. Very few locals go to the temples.
6. Many Tamils in Colombo are busy and not interested in travelling to their home town.
7. Infrastructure are developed by the help of foreign aid.
8. Schools are functioning well but tuition culture is thriving.
9. Educated like in overseas are finding hard to get married.
Once you live on others income you loose your dignity. Quality of life is depend to some extent on income. There are many wise people still who look after their lives honourably both in overseas and Sri Lanka. .
GOOD OBSERVATIONS! WRITE A BOOK…OR START A BLOGG AT BLOGGER.COM FOR FREE…WRITE IN FB TOO!
தாங்கள் பெருமையடிப்பதற்காக ஐம்பதுகளைத் தாண்டிய பெருசுகள் கருப்புக் கண்ணாடியும் முக்கால் காச்சட்டையும் போட்டுக்கொண்டு தங்களுக்குப் பின்னால ஒரு கூட்டத்தையும் கூட்டிக்கொண்டு ஊரில அலையுற கண்கொள்ளாக்காட்சியோ காட்சி. அதுக்குள்ள அவேன்ற அரைகுறை இங்கிலீசு! ஊரில இருக்கிற பத்தாம் வகுப்பு குழந்தேன்ர இங்கிலீசு கூடத் தெரியாமல் கொடுமை கண்ணா.. நான் கண்ணால பார்த்த கண்கொள்ளாக் காட்சி ஒன்றில் முக்கால் காச்சட்டையும் ஆபீஸ் சப்பாதும் அணிந்து கொக்கோகோலா போத்திலோட கமரா கழுத்தில தொங்க நல்லூரடில ஒன்று அலைஞ்சுது. லண்டன் ரெஸ்கோ ரீ ஷேர்ட்டோட இன்னுமொன்று அலைஞ்சுது.
30 ஆண்டுக்குள்ள ஒரு வசனம் இங்கிலீச ஒழுங்காப் பேசத் தெரியாது என்றால் அவமானம் என்று சொல்லமாட்டன் பேசத் தெரிந்தவன் போல உச்சரிப்பை மாத்தி பந்தா காட்டுறது தான் அவமானம்
அதாவது ஐம்பது தான்டிய ட்மிழன்லங்காவுல கட்டை கால்சட்டையும் கருபுக்கண்ணடியும் போடுவது மகா பாவமெங்குறீர். தமிழன் எங்கேயோ பேயிட்டான்பா.
In my opinion it has done more good than harm ie our people living abroad and helping their folks in SL. There is some abuse but it is minor.
நான் இன்னமும் (?) புலம் பெயரவில்லை அதனால் முழுமையாகக் கருத்துக் கூற முடியாது. எனினும் சில விடயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
1. ஐரோப்பிய நாடுகளில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பு உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் கிடைப்பதை விட அதிகளவில் தனிமனித சுதந்திரம் உள்ளது.
2. உங்கள் தொழில் துப்பரவு செய்வதானாலும் உங்களிற்கு வாழவும் சிறிதளவு உறவினர்களிற்கு அனுப்பவும் தக்க வருமானம் வருகிறது. உங்களில் பலரிடம் சொந்த வாகனம் இருக்கிறது. இடைக்கொரு தடவை ஊருக்குச் சென்றுவரும் அளவிற்குச் சேமிக்க முடிகிறது. இலங்கையில் வெளிநாட்டுப்பணம் வியாபார முயற்சி மூதாதையர்களின் சொத்து இல்லாத ஐரி போன்ற துறைகளில் உள்ளவர்கள் தவிர எத்தனை பேரால் இந்தியாவிற்குக் கூடச் செல்ல முடியும்?
3. உறவினர்களிற்கு பணம் அனுப்புவது மற்றும் இங்கு வரும் பொழுது கோயில் ஏழைகள் என வாரிஇறைப்பதற்கு வெறும் பந்தா பண்ணுவது மட்டும் காரணமல்ல. ஒருவகைக் குற்ற உணர்ச்சியும் காரணமாகும்.
4. ஐரோப்பிய நாடுகளில் சேவைகளிற்காக கட்டணம் அதிகமாகும்.இடியப்பத்திற்கான மூலப்பொருள்களை பாவித்து ஒருவர் இடியப்பம் அவிப்பதற்கு ஆகும் செலவை விட பலமடங்கு இடியப்பம் வாங்கச் செலவிட வேண்டும். இலங்கையில் அப்படியல்ல. எனவே இடியப்பம் ஓடர் செய்வதை சமப்படுத்தக்கூடாது. அதுசரி புலம் பெயர் நாடுகளில் ஓடரிற்கு இடியப்பம் அவிப்பவர்களிடம் வாங்குபவர்கள் யார்? ரஷ்யர்களா? அதுவும் நம்மவர்கள் தானே?
5. இலங்கையிலும் ஐரி போன்ற துறைகளில் உள்ளவர்கள் செழிப்பாக வாழ்கிறார்கள். அவர்களிலும் சிலர் ஊரிற்குப் போகும் போது சில புலம் பெயர்ந்தவர்கள் போலவே நடக்கிறார்கள். இந்தியாவிலிருந்து போட்டோகிராபரை வரவழைத்துத் திருமணத்திற்கு படம் பிடிப்பவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.
6. அடிப்படையில் இவை தனிமைப்படுத்தல் மற்றவர்களை விடத் தாழ்வாக எண்ணுதல் முன்னேற முயற்சித்தல் என்பனவற்றின் விளைவே. ஐரி போன்ற துறைகளில் உள்ளவர்கள் இன்று பெறும் உயர் வருமானத்திற்கு உலகமயமாக்கம் கேள்வி நிரம்பல் எனப்பல வகைகளில் விளக்கம் அளிக்கமுடியும்.
வோட்டர்,
நீங்கள் சொல்வது தவறானது. வீட்டுக்குப் பணம் அனுப்பக் கூடிய நிலையில் இங்கு யாரும் இல்லை. இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள பொய்யான விம்பத்திற்கு ஏற்ப நடக்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்ட சூழ்நிலைக் கைதிகளே இவர்கள். இதனால் தமது வாழ் நாள் முழுவதும் கடன்காரர்களாக உழைக்கும் தற்கொலைப் போராளிகள் போல ஆகிவிட்டனர். இதுதான் கட்டுரையின் கருப்பொருள். இதுதான் புலம் பெயர் அவலம். சிலவேளைகளில் இலங்கையில் முதலிட்டு 16 மணிநேரம் உழைத்தால் புலம்பெயர் நாடுகளைவிட மகிழ்ச்சியாக இருக்கலாம். பாதுகாப்பு என்பது ஒரு காரணம் தான் நாளாந்தம் பிரச்சனைகளால் செத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது அது பிரச்சனையே இல்லை.
“சிலவேளைகளில் இலங்கையில் முதலிட்டு 16 மணிநேரம் உழைத்தால் புலம்பெயர் நாடுகளைவிட மகிழ்ச்சியாக இருக்கலாம். பாதுகாப்பு என்பது ஒரு காரணம் தான் நாளாந்தம் பிரச்சனைகளால் செத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது அது பிரச்சனையே இல்லை.”, note – sometimes only. Safety and security is less important that indebtedness, may be for you and not for others. Forced to become indebted by circumstances ? It is a foolish choice, these folks woud have lived as fools even when they remained in SL.
இடியப்ப கதையை மீண்டும் தவறாக விளங்கிக்கொள்கின்றனா்.
ஒருவா் எவ்வளவோ கஸ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தை இன்னொருவா் சோம்பேறியாக இருந்து செலவு செய்யும் நிலையையே இங்கு குறிப்பிடுகின்றனா் இது தனியே இடியப்பத்திற்கு மட்டும் அல்ல எல்லாவற்றிற்குமே பொருந்தும் அத்தோடு எல்லோருடய நிலையும் அதுவே.
Voter ஒரு சாதாரண தொழிலாளி எங்கு வாழ்ந்தாலும் அவன் நிலை ஒன்றேதான் வெளிநாடுகளில் வாழும் தமிழ் தொழிலாளிகளால் ஒருபோதும் சேமிக்கவோ வெளிநாடு செல்லவோ முடியவே முடியாது ஆனால் என்ன நடக்கிறது உழைக்கும் பணத்தை கொண்டு நாங்கள் வாழ்கின்ற நாட்டின் நிலமைக்கேற்ப வாழாமலும் உடுக்காமலும் உண்ணாமலும் சோ்த்தே பயணம் வரமுடிகிறது மேலும் லண்டன் மாநகரை எடுத்துக்கொண்டால் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் குடியிருக்கின்ற கவலையான நிலையை பாா்க்கலாம் இப்படியெல்லாம் அந்தரங்க வாழ்வையும் தொலைத்து சோ்த்த பணத்தில் படம் காட்டுகின்றனா் சிலா் இவா்களிடம் இருந்து பணம் பெற்று வயிற்றை வழா்க்கின்றனா் பலா்.
நமது சமூகம் ஒரு போலியான சமூகம் நாம் அடுத்தவா் நம்மை புகழவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே வாழ்பவா்கள்
இன்னும் இன்னும் பணம் இருந்தாலே அடுத்தவா்கள் மதிப்பாா்கள் என்று புலம்பித்திாியும் கூட்டமுமாகும்.
பல புதிய விடயங்களைத் தெரிந்து கொண்டேன்.
1. சாதாரண அடிமட்டத் தொழிலாளர்களின் நிலை
அமெரிக்காவில் குறைந்த கூலி பற்றிய சட்டம் உண்டு (மணிக்கு 8.5 டொலர்; இது இடத்திற்கு இடம் சற்று மாறுபடலாம்.) இது போன்ற சட்டங்கள் இலங்கையில் இல்லை.
எனக்குத் தெரிந்த நண்பர்களின் தரவுகளின் படி அங்கு இந்தக் குறைந்த கூலி உணவு தங்குமிடம் போக்குவரத்து உட்பட்ட சாதாரண செலவுகளிற்குப் போதும். சிறிதளவு சேமிக்கவும் முடியும். இந்த நிலை ஐரோப்பாவில் இல்லையா? அல்லது சட்டவிரோதமாகத் தொழில் செய்பவர்களால் இந்தச் சட்ட மீறல்கள் பற்றி எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றனரா?
2. மத்திய தர வர்க்கம்
இவர்களின் சேமிப்பு இலங்கையின் மத்திய தரத்தைவிட அதிகம் அல்லவா? இரு இடங்களிலும் மக்கள் கடன் எடுத்துத்தான் பண்டிகை (திருமணம் போன்றவை) கொண்டாடுகின்றார்கள். ஆனால் இங்கு ஹெலிகொப்ரலில் மணமகன் – மணமகள் வந்திறங்கும் அளவிற்குக் கடன் எடுக்க முடியாது. இங்குள்ள மத்திய தரத்தால் இந்தியாவிற்குச் சுற்றுலாவைத் திட்டமிட முடியாது.
புலம் பெயர்நாடுகளில் இருந்து விடுமுறைக்காக வருபவர்கள் படம் காட்டுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் ஐரோப்பாவில்உள்ள தொழிலாளர்கள் இங்குள்ள தொழிலாளர்களை விடவும் புலம் பெயர் நாடுகளிலுள்ள மத்திய தரம் இங்குள்ள மத்திய தரத்தைவிடவும் வசதியாக இருப்பதாகவே நம்புகிறேன்
இதில்லாவிடின் குறைந்த கூலிக்காக அமெரிக்க ஐரோப்பிய முதலாளிகள் இலங்கை மற்றும் இந்தியாவை நாடுவது ஏன்?
எல்லா நாடுகளிலும் அடிப்படை ஊதியம் என்ற வரைமுறை உண்டு. சில நிறுவனங்களில் வெளிநாட்டவர்களுக்கு இது கூடக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.அண்ணளவாக அமெரிக்க ஊதியம் தான் ஏனைய நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில் தொழிலாளி ஒருவரின் மாதச் சம்பளம் 1400 டொலர்கள். இது கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டு வாடகை மட்டும் 1200 டொலர்களுக்கு மேல். அதிலும் சேரி போன்ற பகுதிகளில் 2 படுகையறைகளைக் கொண்ட விடுகளுக்கு மட்டுமே. இனி, மின்சாரம்,நீர்,தொலைபேசி,போக்குவரத்து என்று சேர்த்தால் 2000 வரை ஆகிவிடும். கார், பெற்றோல், உடை, குழந்தைகளின் படிப்புச் செலவும் என்று பார்க்தால் சேமிப்பு என்பது இல்லை. இது போதாது என்று அரசிற்கு ஆதரம் காட்டினால் வருமானத்தை நிரப்புவதற்கு சிறு தொகை ஒன்றை அரசு வழங்கும். ஒரு தசாப்தங்களின் முன்னர் அரச கட்டுப்பாடுகள் அருகியிருந்த வேளையில் ஒரு வேலை மட்டுமே சட்டரீதியாகச் செய்து கொண்டும் மற்றதை சட்டவிரோதமாக அரசிற்குக் கணக்குக் காட்டாமல் செய்வது வழமை.
ஆக, கணக்குக்காட்டாத வேலை சேமிப்பாகும். இப்போது நிலைமை வேறு.; சட்டவிரோத வேலைகள் இல்லை. தவிர, தொழில் நுட்பம் ஒவ்வொரு மனிதனையும் கட்டுப்படுத்துகிறது. தவிர, இவ்வாறான செயற்பாடுகளை கிரிமினல் சட்டத்திற்கு உட்படுத்திவிட்டார்கள்.
தரவுகளிற்கு நன்றி. இதனைத் தயவுசெய்து மலையகத் தொழிலாளியுடனோ அல்லது கொழும்பில் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒருவருடனோ ஒப்பிட்டுப் பாருங்கள். இங்கு பலர் – குடும்பத்தின் வயது வந்த பிள்ளைகளும் தாய் தகப்பனும் ஒரே அறையில் படுக்கின்றார்கள். நாளாந்தச் சம்பளம் 500ப்பரூபா கேட்ட மலையக மக்களின் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. கொழும்பில் சேரிப்பகுதியில் ஒருஅறைக்கான வாடகை 6000 – 10000 வரை. மொரட்டுவவில் உள்ள தொடர் மாடியின் மாத வாடகை 12000 இலிருந்து ஆரம்பிக்கிறது.
வெளிநாடுகளில் எல்லா இடங்களிலும் பாலும் தேனும் ஓடவில்லை என்று நான் அறிவேன். ஆனால் இலங்கையை விட மேலான நிலை உள்ளது.
இல்லையென்றால் பேசாமல் ஊருக்கே திரும்பி வாருங்களேன்.
“இடியப்ப கதையை மீண்டும் தவறாக விளங்கிக்கொள்கின்றனா்.
“, so you are saying that if I am washing dishes at a restaurant my kith and kin should never go to eat at a restaurant using the money I give them? It applies to anything one does or matters only in the case of Idiyappam makers. What sense does it make to go and make Idiyappams while your dear ones are visiting you from overseas than spending quality time with them? Do you expect the host toil in the kitchen while the guests sit in the living room watch the TV or guests too to chip in in the cooking? What a great holiday you are proposing. You make it sound like these folks never make their food on their own. Some readers get carried away with this kind of sensational news and you take advantage of that.
“நீங்கள் சொல்வது தவறானது. வீட்டுக்குப் பணம் அனுப்பக் கூடிய நிலையில் இங்கு யாரும் இல்லை” – where did you find that out ? No one ?? “இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள பொய்யான விம்பத்திற்கு ஏற்ப நடக்கவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்ட சூழ்நிலைக் கைதிகளே இவர்கள்”, Blame it on someon else ? Majority of the folks are not the kind of idiots you think they are. “இதனால் தமது வாழ் நாள் முழுவதும் கடன்காரர்களாக உழைக்கும் தற்கொலைப் போராளிகள் போல ஆகிவிட்டனர். ” How many have lost their lives due to this phenomenon, we should be hearing about deaths day in and day out but we don’t. All what the author has done is written something that sounds sensational. It lacks factual data.
இந்தக் கட்டுரை ஜேவிபி நியூஸ் தளத்திலும் வெளி வந்திருக்கிறது. மூலம் தெரியப்படுத்தப்படவில்லை.
http://www.jvpnews.com/srilanka/75771.html
திரு Voter
மனிதா்கள் நாடுவிட்டு நாடு செல்வதன் நோக்கம், இருக்கின்ற நிலைமையைவிட மேன்மையான நிலை ஒன்றை அடையலாம் என்ற எண்ணமே காரணம். மூன்றாம் உலக நாடுகளிலுந்து தொழில் துறையில் வளா்ச்சிகண்ட நாடுகளிற்கு செல்வதன் காரணம் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளதாலாகும் மேற்கத்தய நாடுகளில் தகமையுடன் வருபவா்கள் தமது தகமைக்கேற்ப தொழில் புாியக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு ஆனால் இதை நமது நாடுகளில் எதிா்பாா்க்கவே முடியாது.புலம்பெயா்ந்த தமிழ் மக்களில் பெரும்பான்மையினா் எத்தத்தகமையும் இன்றி இந்த நாடுகளில் குடியேறியவா்களாவா் ஆனால் இப்போது இரண்டாவது மூன்றாவது சந்ததிகளை நாங்கள் இங்கு உருவாக்கிவிட்டோம் அவா்கள் நிச்சயமாக வந்தவா்களின் நிலையில் வாழப்போவதில்லை அத்தோடு எமது நிலைமை மோசமாக இருந்தாலும் நாங்கள் அதற்கு பழகிவிட்டோம் அத்தோடு எமது சந்ததிகளின் எதிா்காலம் கருதி விரும்பியோ விரும்பாமலோ இங்கு நாங்கள் வாழ்ந்தேயாக வேண்டிய நிா்ப்பந்தம்.இன்று உலகின் வழா்ச்சியடைந்த 8 நாடுகள் என்று அழைக்கின்ற நாடுகளில் ஒன்றான இத்தாலியை எடுத்துக்கொண்டால் அவா்கள் நல்ல வாழ்வு தேடி போகாத நாடே இல்லை எனலாம் ஆனால் ஆச்சாியம் என்னவென்றால் இன்றும் அவா்கள் புலம்பெயா்ந்துகொண்டே இருக்கின்றாா்கள் இப்படியான ஒரு நாட்டிலிருந்தே புலம்பெயரும் நிா்ப்பந்தம் உள்ளதென்றால் நாம் எந்தமட்டில்.நீங்கள் குறிப்பிட்டிருந்த மக்கள் அவா்களின் வாழ்க்கை நிலையுடன் ஒப்பிடும் போது இங்கு வாழ்வதில் பாதகம் இல்லைத்தான் ஆனால் வடமாகாண கிழக்கு மாகாண மக்களில் பெரும்பான்மையினா் சொந்தமாக வீடு, காணி என்று சுதந்திரமாக பொருளாதார நெருக்கடி இன்றி வாழ்ந்தவா்கள் இங்கு வந்து நான்கு சுவா்களுக்குள் மாட்டி நிற்பதையும் கவனிக்கவேண்டும்.
இங்கே குறிப்பிடவேண்டிய விடயம் தமிழா்களில் பொிய தொகையினா் நாட்டில் யுத்தம் தொடங்கியிருக்காவிட்டால் நிச்சயமாக வெளியேறியிருக்கமாட்டாா்கள்.
1970 களில் நான் எனது நண்பா்களுடன் கடைசி காட்சி பாா்ப்பதற்கு யாழ் நகா் சென்றுவிட்டு பின்பு அங்கு இருந்த இரவு தேனீா்கடைகளில் அமா்ந்து சுதந்திரமாக மகிழ்ச்சியாக தேனீா் அருந்திவிட்டு துவிச்சக்கர வண்டிகளில் சத்தமாக பாடியபடி வீடு சோ்வோம் அப்படிப்பட்ட ஒரு சுதந்திரத்தை நான் எனது முப்பது வருட வெளிநாட்டு வாழ்க்கையில் அனுபவித்ததாக ஞாபகம் இல்லை. ஆம் இங்கு தனிமனித சுதந்திரத்திலுந்து எல்லாவற்றிற்குமே உத்தரவாதம் உண்டு ஆனால் நாம் அதை உணா்வதிலேதான் சிக்கலே உள்ளது.ஒவ்வொரு நிமிடமும் அங்கு வந்துவிடவே மனம் துடிக்கிறது ஆனால்!!!.
“அப்படிப்பட்ட ஒரு சுதந்திரத்தை நான் எனது முப்பது வருட வெளிநாட்டு வாழ்க்கையில் அனுபவித்ததாக ஞாபகம் இல்லை. “, if you didn’t that was your choice, you are unable to get the Jaffna man out of you and assimilate. No one stops you from getting back home.
You keep talking about the Jaffna man mentality. Did somebody tell you that there is something wrong with the mentality of Jaffna people?Or that everything is right with the western mentality? All ancient cultures have developed certain ways of thinking, and Jaffna people are very wise in many ways. People are entitled to their views, and you don’t need to call them names for expressing their point of view. People need not adapt everything that is western mindlessly, just because they live in the west – that, I say, is your ‘slave of the west’ mentality. Yes, many of us here do have the Jaffna mentality and proud of it, and it doesn’t mean that people need to go back.
I did not say it is wrong, the porblem is trying to fit that into the society you live in doesn’t seem to work. The great gift of most of the Jaffna folks is their ability to adapt to new situations very easily. Some men find it hard to do that and start blaming it on the society itself.
திரு குமார்
உங்கள் பின்னூட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன். கட்டுரையில் இவை சரிவர வெளிப்படுத்தப்படவில்லை. நன்றி
70களில் நீங்கள் அனுபவித்த சுதந்திரத்தை கொழும்பிலுள்ள பலரும் இப்போது அனுபவிப்பதில்லை. போரற்ற நாட்களில் மட்டுமே கிராமப்புற மக்கள் அனுபவித்து வந்த சுதந்திரம் அது.
Hi. ,, I thing you should travell around the Europe before write this artical
Only small percent of people are working in cleaning industry, I want to tell you one thing
I don’t understand why is in your artical you separate the group of people which they working in cleaning industry, don’t for get money is money, next thing during the war time if the people in Europe don’t help back home how did the tamil people sauvive???
All the people working in cleaning industry, there are more doctors Lawyers , managers , accountant, It specialist more ad more ,,
In new jaffna.com they publish the artical about the Tamils in Europe , I don’t know why all the news reports publish bad about Tamils in Europe , my advice open your eyes ad look around , thank you
They thrive on the negative news only, its an insult to the hardwoking people.
I thing this website insulting the tamil people in Europe, they point out only negative things, they didn’t thing of lots of positive. People in srilanka they don’t open their eyes ad don’t look around, and always slag off others, the person who wrote this artical should apologies for that
கட்டுரையிலும் பின்னூட்டங்களிலும் ஏராளமான முரண்பாடுகள்.
கட்டுரை: தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை 15 மணி உழைப்பு
நானறிந்தது: புலம் பெயர்நாடுகளில் தான் அதிக இலக்கிய முயற்சிகள் – விழாக்கள் – கொண்டாட்டங்கள்; அதிகளவான இணையக் கட்டுரைகள் பின்னூட்டங்கள் புலம் பெயர்நாடுகளில் இருந்து தான்.
கட்டுரை: முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும் உணவகங்களிலும் பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்
பின்னூட்டம்: மேற்கத்தய நாடுகளில் தகமையுடன் வருபவா்கள் தமது தகமைக்கேற்ப தொழில் புரியக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு ஆனால் இதை நமது நாடுகளில் எதிர்பார்க்கவே முடியாது
கட்டுரை: மாதாந்த வாடகை 1200 யூரோ.
பின்னூட்டம்: இதில் மிச்சம் பிடித்து கழுத்தில் கமராவுடன் …
நானறிந்தது: கழுத்தில் தொடங்கும் கமரா மொடல்கள் 400 – 500 டொலர்கள். முதல் 10000 டொலர்கள் வரை. இலங்கையில் சாமானியர்கள் நினைக்கக்கூடியதல்ல இது.
இந்தக் கட்டுரை மிகவும் மலினமான வெளிப்பாடு. எப்படிப்பட்ட மக்கள் எந்த நாடுகளில் எப்படி வாழ்கிறார்கள் என்ற பாகுபாடு இன்றி ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் பாணியில் கதையளக்கப்பட்டுள்ளது. கனடாவும் அவுஸ்திரேலியாவும் இந்கிலாந்தும் சுவிஸ்சும் ஒன்றல்ல. ராஜ் ராஜரட்ணமும் சுத்திகரிப்புத் தொழிலாளியும் ஒன்றல்ல. தகமையுடையோரும் அது இல்லாதவர்களும் ஒன்றல்ல. அந்தக் கட்டுரையில் கருதப்படும் மக்கள் யார் என்பதற்கு எதுவித குறிப்பும் இல்லை.
30 வருடங்களுக்கு முன்பு வந்தவா்களில் பெரும்பான்மையினா் அவா்கள் எங்கு வாழ்ந்தாலும் கட்டுரையில் குறிப்பிட்ட நிலையிலேயே வாழ்கின்கின்றனா்.
ராஜ் ராஜரெட்ணம் போன்றவா்கள்( அவா் மோசடி வழக்கில் உள்ளே சென்றுள்ளதையும் கவனிக்கவேண்டும்,அதாவது குறுக்குவளியில் சென்று பணம் படைப்பது. இதில் அமொிக்க நீதித்துறை நியாயமாக நடந்திருந்தால் சாி)தகமையுடன் வந்தவா்கள் யாவரும் சிறுபான்மைக்குள் அடங்குவா். இப்போது கூறுங்கள் கட்டுரையை எழுதியவா் பெரும்பான்மையானவா்களைப்பற்றி கவனம் எடுக்கவேண்டுமா அல்லது சிறுபான்மையினரை கவனத்தில் கொள்ளவேண்டுமா ??
அடுத்ததாக மேற்குலகில் எந்தப்பொருளையும் கடனாக வாங்கிவிடலாம் சில நாடுகளில் இன்று வாங்கிவிட்டு இரண்டு வருடங்களின் பின்பு பணத்தை செலுத்த ஆரம்பிக்கலாம், நம்மில் பலா் புதிய வாகனங்களை இப்படி வாங்கிவிட்டு கட்டாமல் விடுவதால் வழியில் வைத்து வாகனத்தை பறிக்கும் நிகழ்வுகளும் உண்டு இதில் கமரா ஒரு விடயமே அல்ல சிலா் இரண்டு அல்லது மூன்று வீடுகள்கூட வாங்கிவிட்டிருக்கின்றாா்கள் நீங்கள் அறியும்போது சிலவேளை பொறாமைப்படலாம் ஆனால் உண்மை நிலை என்ன தொியுமா? வட்டி மட்டும் என்று கடன்களை பெறலாம் ஆனால் முதலை ஒருபோதும் கட்டுவதில்லை அதாவது ஒப்பந்தகாலம் (சாதாரணமாக 25 வருடங்கள்) முடியும்போது முழுவதையும் கட்டவேண்டும் அதற்குள் வீடுகளை விற்று பணம் உளைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இதை செய்கின்றாா்கள் இடையில் வீட்டிற்கு செலவு செய்யவேண்டி வந்தால் பணம் இருக்காது.
இதிலும் ஒரு சிறுபான்மையினா் தப்பிக்கொள்ளலாம் ஆனால் பெரும்பான்மை அப்படியல்ல.
நீங்கள் எதற்கும் இங்கு வந்துவிடுங்கள் யாவற்றையும் நோிலேயே பாா்த்துவிடலாம்.
முப்பது வருடங்களின் பின் வந்தவர்களில் பெரும்பானமையானவர்களின் நிலை பெருமளவில் மாறி விட்டதென்பதே உண்மை.
கடைகளில் , உணவகங்களில் , பெற்றோல் பங்கில் வேலை செய்தவர்கள் அந்தநிறுவனக்களையே நடாத்துமளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் .இதன் மூலம் அவர்களது வருவாய் அதிகரித்திருக்கிறது , தமது பிள்ளைகளையும் இதன் மூலம்நன்றாக படிக்க வைக்க முடிகிறது.
அந்த தலைமுறையும் தமது பெற்றொர் இருந்தநிலையை விட மேம்பட்டநிலையை அடைவார்கள் என்பதும் நிச்சயமாகியுள்ளது
Don’t know where you live and who you associate with but it looks like you have surrounded yourself with all the people who have failed by choice mostly. It is hard to believe that someone has lived for 30yrs in the West and did not improve his/her life. A lot of folks who started working in restaurants and grocery stores have progressed to become owners of such businesses. There are some who have done exceptionally well. I am not talking about the Rajaratnams of this world. These are people with little or no educations but with perseverance and hard work they have improved their lives and people around them. Rajaratnam was basically an idiot. He is not the only one who has been abusing the trading system. But he got caught because of his big mouth. The others too do it but they keep their mouths shut. Another reason was he became a high profile target for his alleged financing of the rebellion. The ones who choose to keep doing the same thing for years do that for a reason sometimes. It can be to stay closer to good school districts, transportation, etc. but it has a purpose in it. Sometimes you sacrifice your lifetime for the good of your future generation. Or some simply are contended with what they are doing. There is nothing wrong in it. It looks like you have taken it upon yourself to cry foul for them? If there is a will there is always a way. The will to power is the key, you empower yourself with the will and no one can stop your reaching heights you aspire for.
Who ever wrote this artical they didn’t have a knowledge about European Tamils, might be his relatives live in Europe like what ever he said in this artical, I wonder why tamil people in srilanka they 100 backward than tamil people in Europe
ராஜ் ராஜரட்ணம் ஒரு உதாரணம் மட்டுமே. சிறிய முதலீட்டுடன் கொழுத்தவர்கள் பலர் உண்டு.
பெரும்பான்மையினர் மத்திய தர வர்க்கத்தினரே. இது ஐரோப்பாவிற்கு மட்டுமல்ல எந்தவொரு முதலாளித்துவம் முன்னேறிய நாட்டிற்கும் பொருந்தும். மத்திய தரத்தின் வளர்ச்சி முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பக்க விளைவு. இந்தக் கட்டுரை அவர்களைப் பிரதிபலிக்கிறதா? அல்லது ஒரு சிறு பிரிவைக் குறிக்கிறதா? பெரும்பான்மையினரின் நிலை அதுவாயின் அவர்கள் திரும்பி வர முயற்சித்திருக்க வேண்டும். அப்படி நடக்காதது மட்டுமல்ல அவர்கள் தமது அடுத்த சந்ததியை முன்னேற்றியும் இருக்கிறார்கள்.
உங்களது வங்கிக் கடன் விவகாரத்திற்கு வருவோம். ஐரோப்பாவில் வட்டி விகிதம் குறைவு. 1.5 -2.5 விகிதமாயிருக்கிறது. (சில இடங்களில் சற்று அதிகமாயிருக்கலாம்.) எனவே குறைந்த மாதக்கட்டணத்துடன் ஒருவர் வீட வாங்க முடியும்.
வெள்ளவத்தையில் இரு அறைகளை உடைய ஒரு பாவித்த நல்ல நிலையிலுள்ள தொடர்மாடி வீடு 9 மில்லியனில் தொடங்குகிறது. இதனை வாங்க 25 சதவீத பணத்தை அவர் செலுத்த வேண்டும். மிகுதிக்கு வட்டியும் முதலுமாக 25 வருடங்கள் வரை செலுத்தலாம். இலங்கையில் தற்போது வட்டி விகிதம் குறைவடைந்து 12-16 விகிதத்திலிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன் இது 17-20 விகிதத்திலிருந்தது. ஒரு ஆசிரியரின் மாதச்சம்பளம் 30 ஆயிரம் வரை இருக்கலாம்.
இலங்கையில் ஏன் யாழ்ப்பாணத்தில் கூட வீடற்ற நிலமற்ற மக்கள் நிறைய இருக்கிறார்கள். வெளிநாட்டு வருமானம் வியாபாரம் ஐரி வெளிநாட்டுத் தொழில் (பணிப்பெண் தொழிலல்ல) இல்லாதவர்களால் முற்பணமே செலுத்த முடியாது. ஒரு ஆசிரியரால் வட்டி கூடச் செலுத்த முடியாது.
கமரா அங்கு ஒரு பொருட்டே அல்ல. இங்கு கமரா வைத்திருப்பவர்கள் கலர் காட்டித் திரியலாம்.
நான் சொல்லுவது இதுதான்: இங்கு சிலர் நினைப்பது போல அங்கு பாலும் தேனும் ஓடுகிறது என்பதல்ல. ஆனால் சில விடயங்களில் நிலைமைகள் மேம்பட்டே இருக்கிறது.
புலம் பெயர் நாடுகளிலுள்ள குறைகள் வேறு உள்ளது. எமது கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்கள் அங்கு நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள கஷ்டப்படுகிறார்கள். சுய பால் திருமணம் உட்பட பல தாக்கங்கள் இருக்கலாம். இன்னொரு தமிழரைக்கண்டால் ஒழிய தனிமை தான் வாழ்வாக இருக்கக்கூடும். காலநிலை போக்குவரத்து அருகாமையில் கோவில்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் தவிர்ந்த இடங்களில் இயந்திர மயமான வாழ்வு பற்றிய பிரச்சினைகள் உண்டு.
இது போல இலங்கையில் வாழ்வதில் பணம் சாராத நன்மைகள் உண்டு.
இந்தக் கட்டுரை புலம் பெயர் நாடு என்றாலே நரகம் தான்; பொய்யாகக் கலர் காட்டுகின்றார்கள் என்ற கருத்துப்பட எழுதப்பட்டிருக்கிறது. அதனைத் தான் நான் தவறு என்கிறேன்.