விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு சரியான காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயம் சென்னையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் விசாரணை மேற்கொண்டது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், தமிழக கியூ பிரிவு எஸ்.பி. சம்பத் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
இந்த ஆவணங்கள் 2 பெரிய தொகுப்புகளாக சீல் வைக்கப்பட்ட உறைகளில் அளிக்கப்பட்டன.
அதில் விடுதலைப்புலிகளும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் என்று அவர் கூறினார்.
மேலும் விடுதலைப் புலிகளின் அரசியல் அணியான மக்கள் முன்னணி சார்பில் தமிழகத்தையும், ஈழத்தையும் இணைத்து விரிந்த தமிழகம் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சம்பத் கூறினார்.
சரியாய் போச்சு… கடக்கிற இடைவெளியில் கச்சதீவு இருக்க காசிக்குபோற சந்நியாசி புலியில் ஏறித்தான் போவானாம்
மேலும் தமிழீழத்தையும் தமிழகத்தையும் இணைத்து அகன்ற தமிழ்நாடு அமைப்பதற்காக விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்படுவதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு அமைப்பு தமிழகத்தில் இயங்குகிறதா? அல்லது அரசே உருவாக்கிவிட்டதா?
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகும். இது 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விடுதலை புலிகளின் பிரதி தலைவரான மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா இக்கட்சியின் தலைவராகவும் யோகரத்தினம் யோகி பொதுச் செயலாளராகவும் செயற்பட்டனர். இக்கட்சியின் சின்னமாக புலி காணப்பட்டது. இக்கட்சி இலங்கையில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தது. பின்னர் 2012 பெப்ரவரியில் ஆண்டுதோறும் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினால் இலங்கையின் தேர்தல் ஆணையாளரினால் இக்கட்சியின் பதிவு இரத்துச் செய்யப்பட்டது[1].
இக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1990 பெப்ரவரி 24 முதல் மார்ச்சு 1 வரை வாகரையில் இடம்பெற்றது.