புலிகள் மீதான தேடுதல்நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. இன்று காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார், சென்னை தாம்பரத்தில், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில், விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவரை சமீபத்தி்ல் கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையி்ல் காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார், சென்னை விரைந்தனர்.
தாம்பரம் பஸ் நிலையப் பகுதியில் வைத்து அந்தோணி என்பவரைக் கைது செய்தனர். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஆவார்.