23.08.2008
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அவுஸ்திரேலிய தொண்டு நிறுவனமொன்று முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொண்டு நிறுவனம் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரினால் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுமார் ஏழு லட்சம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையொன்றைக் குறித்த நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வாழ்கைக்கு மதிப்பளிப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜேஸன் தொம்சன் என்ற அவுஸ்திரேலிய பிரஜையின் தலைமையின் கீழ் புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது .