15.11.2008.
விடுதலைப்புலிகளின் முக்கியத்தளமாகிய பூநகரி பகுதி மற்றும் ஏ.32 பாதை இன்று காலை படையினர் தம் வசப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
(12 GW), (10 GR) ஆகிய பிரிவுகளைச் சேரந்த படையணியினர் நேற்றிரவு மேற்கொண்ட பாரிய தாக்குதலையடுத்தே இந்த வெற்றி இலக்கு எட்டப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது..
பூநகரி – பரந்தன் (B-69) பாதையை ஊடறுத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளை;பூநகரி மற்றும் ஏ 32 பாதையை கைப்பற்றிய படையினருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பூநகரியை கைப்பற்றியமை தொடர்பில் அவர் விடுத்த அறிக்கை ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.