இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், இன்றைய அழிவுகளுக்கும் காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தான் விடுதலைப்புலிகளிடம் நீண்ட நேரம் வாதிட்டதாகக் கூறும் இரா. சம்பந்தன், அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால், நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் சென்றிருக்கலாம் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.
இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கின்ற போது இந்த விடயத்தை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளர்களைச் சந்தித்து பல விடயங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாக கூறிய இரா. சம்பந்தன் அவர்கள், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.
BBC
வீடுதலைப் புலிகள் இந்தச் சந்தர்ப்பவாதிகளைத் தமது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்கு அனுப்பினதை விடப் பெரிய தவறா?
சம்மந்தர் நீயுமா…………?ஒன்டும் இல்ல xxx …….பூனை இல்லாத வீட்டில………..எலி ஓடி விழையாடுது……….
thotta,
எலி எல்லாற்றை காலையுமெல்லோ கடிக்கிது.
சம்பந்தர் அய்யா இப்போது சரியான முடிவொன்ரை எடுதுல்லர் அது சரத் பொன்செக வை ஆதரிபது.அரசியல் முதிர்வு அவரது முடிவில் தெரிகிரது.தமிழருக்கு காலம் வேலை செய்தால் சம்பந்தர் அய்யா வரலாட்ரை தொடுவார்.
சம்பந்தர் அய்யா எப்பவுமே தன்ரை வசதிக்கேத்த மாதிரி முடிவெடுப்பார்.
அவற்றை முடிவாலை அவருக்கு நன்மையே ஒழியத் தமிழச் சனத்துக்கு எப்பவுங் கேடுதான்.
“தமிழருக்கு காலம் வேலை செய்தால்” சம்பந்தர் அய்யா ஏன் எங்கடை அரசியலிலை இருக்கிறார்? 32 வருசமாப் பேய்க்காட்டுது!