Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

விஜய் ரி.வி இன் பின்னால் மறைந்துகொள்ளும் கோடரிக்காம்புகள்

இனியொரு... by இனியொரு...
03/01/2014
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

vijayஇலங்கை இனப்படுகொலைக்குத் துணைசென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்ற போது தமிழ் ஈழம் கிடைத்துவிட்டது போன்று போலிப் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழ் இன வெறியர்கள் இறங்கினார்கள். இலங்கை அரசு குரூரமான புலிகள் இயக்கத்தை அழித்து பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றது என்று டேவிட் கமரன் கூறியபோது பின்னால் பதுங்கியிருந்து வேடிக்கைபார்த்தார்கள்.

டேவிட் கமரனோடு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பிரித்தானிய வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர் வில்லியம் ஹக் தனியார் பல்கலைக் கழகத்தைத் திறந்துவைத்து இலங்கையின் உயர் கல்வி வரலாற்றை அழுக்காக்கிய போது தமிழ் இன வெறியர்கள் தலைமறைவாகினர்.

இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்குவரும் பேரினவாத பாசிச அரசுகள் ஒவ்வொரு தடவையும் கல்வியைத் தனியார் மயமாக்க முனையும் போதும் சிங்கள – தமிழ் மக்களின் போராட்டங்களால் அது முறியடிக்கப்பட்டது.

இந்தத் தடவை யாருடைய எதிர்புமின்றி ஏழைகளின் கல்வி பிரித்தானிய அரசால் நாசப்படுத்தப்படுவதற்கான அடிக்கல்லை வில்லியம் ஹக் நாட்டி வைத்தார். அதுவும் ‘தேசியம் பேசும்’ பிழைப்புவாதிகளின் ஏகோபித்த ஆதரவோடு.

இலங்கையில் நடைமுறையிலுள்ள முழுமையான இலவசக் கல்வித்திட்டம் தெற்காசியாவின் கல்வியறிவு பெற்ற நாடாக இலங்கையை மாற்றியிருந்தது. வசதியற்ற ஏழைகளின் குழந்தைகள் கூடப் பல்கலைக் கழகக் கல்வியை கற்றுப் பட்டதாரியாக வாய்ப்பை வழங்கிய மூன்றாமுலக நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிக்கிறது. இலங்கையில் ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் இலவசக் கல்வியில் கைவைக்கத் துணிந்ததில்லை.

ஈழப் போராட்டம் தீவிரமடைந்ததன் முக்கிய காரணங்களில் இலவசக் கல்வியில் தரப்படுத்தல் முக்கியமானதாகும். அந்த இலவசக் கல்வியே பறிக்கப்படும் போது அதனால் பாதிக்கப்படாத மக்களில் அக்கறையற்ற விசமிகளான தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் தமிழ் வெறியர்கள் மூச்சுக்கூட விடவில்லை.

கொழும்பின் மீரிகமவில் 120 ஏக்கர் காணியில் பிரித்தானியாவின் லங்ஷையர் பல்கலைக்கழகத்தின் வளாகம் திறந்துவைக்கப்பட்டது. பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹக் திறந்துவைத்த பல்கலைக் கழகத் திட்டத்திற்கு 75 மில்லியன் பவுண்ஸ்களைக் கொட்டியிருக்கிறார்கள்.

தமிழ் சிங்கள ஏழைகளின் அடிப்படை உரிமையில் கைவைக்கும் இந்த நிகழ்வை தமிழின வெறியர்கள் கண்டுகொள்ளவில்லை. பிரித்தானியாவை அவர்கள் நிபந்தனை இல்லாமல் ஆதரித்தார்கள்.

தமிழ் நாட்டில் கல்வி வியாபாரத்தில் உச்சத்திலிருப்பவர்கள் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தினர். பல மில்லியன்கள் பெறுமதியான கல்விக்கூடங்களை தமிழ் நாடுமுழுவதும் கொண்டிருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.எம் நிறுவனத்தினர் தமது கல்வி வியாபாரத்திற்காக ராஜபக்ச இனக்கொலை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை எழுதிக்கொண்டார்கள்.

எஸ்.ஆர்.எம் நிறுவனம் தமிழ் நாட்டில் புதிய தலைமுறை என்ற தொலைக்காட்சி சேவையையும் நடத்தி வருகிறது.

தமிழ் மக்கள் உட்பட முழு இலங்கை மக்களதும் கல்வி உரிமையை அழிக்கும் பிரித்தானிய அரசையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும் இனவெறியர்கள் ஆதரிக்கிறார்கள்.
தமிழர்களே ஒன்றிணையுங்கள் என்ற தலையங்கத்தில் தமிழ் இனவெறி நாசகார சக்த்திகள் காப்பாற்ற முயல்வது தமிழர்களை அல்ல எஸ்.ஆர்.எம் போன்ற பல்தேசிய வியாபாரிகளையே.
விஜய் தொலைக்காட்சி என்ற கலை வியாபார நிறுவனம் தமிழை அழித்து சீரழிவுக் கலாசாரத்தைப் பரப்புகிறது. இதனைக் கண்டுகொள்ளாத தமிழ் இன வெறியர்கள் இலங்கையில் அது நிகழ்ச்சிகளை நடத்துவது ‘மட்டுமே’ தவறு என்கின்றனர். மற்றப்படி விஜய் தொலைக்காட்சியோடு அவர்கள் எந்தவகையிலும் முரண்பட்டுக்கொள்ள மாட்டார்கள்.
பிரித்தானிய அரசு, புதிய தலைமுறை தொலைக்காட்சி போன்றவற்றிலிருந்து இலவசக் கல்வியைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு விஜய் தொலைக்காட்சி, இந்திய சினிமா போன்றவற்றின் கலாச்சாரச் சீரழிப்பிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் அவசியமானதாகும்.
புதிய தலைமுறைக்கு எதிராகவோ, இந்திய சினிமாக் கலாச்சாரத்திற்கு எதிராகவோ இதுவரை மூச்சுக்கூட விடாமல் அவற்றுடன் பங்காளர்களாகச் செயற்படும் தமி இனவெறியர்கள் விஜய் ரி.வியின் ஒரு நிகழ்ச்சிக்கு எதிராக மட்டும் தொடையத் தட்டுவது ஏன்?
அவர்கள் நேர்மையானவர்களானால் குறைந்தப்பட்சம் விஜய் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, தென்னிந்தியாவின் சீரழிந்த சினிமாக்கள் போன்ற கல்வி மற்றும் கலை வியாபாரிகளைத் தடை செய்து ஈழத்துக் கலைகளை ஊக்குவிக்கும் போராட்டத்தை நடத்தட்டும் பார்க்கலாம்.

கொழும்பில் சுப்பர் சிங்கர் நடக்கக்கூடாது:கௌதமனின் தாகம் தமிழீழ தாயகம்

 

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மகிந்தவின் அரசவை மருத்துவரின் கார் மீது துப்பாக்கிச் சூடு!

மகிந்தவின் அரசவை மருத்துவரின் கார் மீது துப்பாக்கிச் சூடு!

Comments 10

  1. balasingam says:
    12 years ago

    மகிந்தரின் மண்ணில் சூப்பர் சிங்கர் குத்தாட்டம்! பின்னனியில் CID – “ரோ” அம்பலம்
    February 28, 201410:58 am

     
    இன்று அதிகாலை சிறிலங்காவில் தரையிறங்கினார்கள்.. இதில் திவாகரின் நிலை இன்னமும் தெரியவில்லை ஆனால் அவரும் அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வருகிறது, அது உறுதிப்படுத்தப்படவில்லை. புலம்பெயர் தேசத்தில் இவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள.

    தமிழகத்தில் இவர்களுக்கு கொடுக்கும் எதிர்ப்பு இனி ஒரு தமிழனுக்கு இவ்விதம் செய்யும் எண்ணத்தை நினைத்துபார்கவே அஞ்சவேண்டும்! இவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்ளை உடனடியாக தமிழகம் திருப்ப அழுத்தம்; கொடுக்க வேண்டும் என தமிழக கலைஞர்களின் குரல் வலுவடைந்து வருவதாகவும்

    விஜய் தொலைக்காட்சியை கண்டித்து நடவடிக்கை எடுக்க தமிழக மாணவர்கள் உடனடியாக செயலில் இறங்க வேண்டும் இது விஜய் தொலைகாட்சி முகவரி அதில் நமது எதிர்ப்பை தெரிவிப்போம். என மானவர் அமைப்புக்கள் போர்கொடி உயர்த்தியுள்ளதுடன் தமிழகத்தில் பாரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

    இதில் பங்கு பற்றும் சூப்பர் சிங்கருக்கு இலங்கையில் நடப்பது பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முழுமையான விபரம் வழங்கப்படமாலே இலங்கை அழைத்துச் சென்றனர் என்பதுடன் பிரல்ய பாடகர்களை அழைத்து இவ் நிகழ்வு நடத்த முயற்சித்த போது அது பயனற்ற நிலையில் இவர்களை பயன் படுத்தியதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சூப்பர் சிங்கறில் வெற்றியீட்டிய மற்றும் ஏனைய ஒரு சில போட்டியாளர்களை ஜெனிவாவை திசை திருப்பி தமிழனின் மனநிலையை மாற்ற இந்திய புலனாய்வு துறை “ரோ” மற்றும் இலங்கை புலனாய்வு அமைப்பு இணைந்தே இந்த வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அன்மையில் இலங்கை இந்திய நட்புறவு சந்திப்பு இலங்கையில் நடந்த வேளை அங்கு சென்றிருந்த இந்திய “ரோ” அமைப்பின் தலைவர் ராம் இந்தத் தகவலைப் பரிமாறியதாகவும் அதற்காக முதலீடுகளை வீடமைப்பு உட்கட்டமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச இருபது லட்சம் ரூபாய்களை இந்த பாடகர்களுக்கு வழங்கியதுடன் இதன் பின்னனியில் இந்திய புலனாய்வு அமைப்பு இருப்பது அம்பலமாகியுள்ளது

    அத்துடன் ஐரோப்பாவில் மக்களின் போராடும் மனநிலையை குழப்புவதற்காக தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு ஒன்றில் இதே சூப்பர் சிங்கரை களமிறக்கி ஐ.நாவின் தீர்மானம் வரும் நாளில் மக்கள் மன நிலையைக் குழப்பும் வேலையை இந்திய ரோ அமைப்பு கோத்தாபாயவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதற்காக சில தமிழ் தனவந்தர்கள் ஆயத்தமாகி நாட்களையும் குறித்துள்ளதாகவும் குறித்த தமிழர் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பில் முகாமிட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்தடன் தமிழ் கலைஞர்களை புறம் தள்ளி இந்தியாவிடம் மன்டியிட்டு மானம் இழந்த பிழைப்பு நடத்துவதை இன்னும் தமிழர்கள் புரியவில்லை அது மட்டுமல்லாது பல தமிழ் கலைஞர்கள் பல திறமைகளுடன் உள்ள நிலையில் ஏன் இந்தியக் கலைஞர்கள் இதிலும் பாரிய சூழ்ச்சி உள்ளது இதை புரியுமா ஐரோப்பா இளசுகள் அல்லது அங்கு சென்று கூத்து கும்மாளமா தக்கபதில் எடுத்தால் காலத்தில் சிறந்ததாகும்…

    • tamilan says:
      12 years ago

      சரி சரி,
       நீங்க  சொல்ற மாதிரியே ரா தான் அவர்களை அனுப்பியது என்று வைத்துக்கொள்வோம். இனியொரு கேட்டது  போல் //அவர்கள் நேர்மையானவர்களானால் குறைந்தப்பட்சம் விஜய் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, தென்னிந்தியாவின் சீரழிந்த சினிமாக்கள் போன்ற கல்வி மற்றும் கலை வியாபாரிகளைத் தடை செய்து ஈழத்துக் கலைகளை ஊக்குவிக்கும் போராட்டத்தை நடத்தட்டும் பார்க்கலாம்.//  இது க்கு  தயார  தலிவா?

      • lala says:
        12 years ago

        அதானே பாத்தன் .. கோத்தபாயவின் புலான்ய்வு பிரிவு , ரா போன்ற இந்திய , இலங்கை புலனாய்வு துறையை ஏதாவது சொன்னால் உங்களுக்கு பொத்துக்கொண்டு வந்து விடுமே ?

        நேரடியாக அவர்களுக்கு வக்காலத்து வாங்கினால் குட்டு வெளிப்பட்டு விடுமென்பதால் ., அவர்களுக்கு செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு , குழப்ப முனைபவர்களுக்கு எதிராக சேற்றை வாரி வீசுவது , கரித்து கொட்டுவது என்று கிளம்ம்பி விடுவது..

  2. tamilan says:
    12 years ago

    எனக்கு  ஒரு ஐடியா, சுப்பர்  சிங்கர்  நடக்கும்  நாளில்  உலகம்  முழுவதும்  உள்ள  ஈழத்து  சினிமாகளை  வாங்கி  சென்னை  முழுவதும் திரையிட  கெளதமன்  தயாரா?
    இது   தமிழகத்தில்  உள்ள  வியாரபாரிகளுக்கு எதிரான  அடையாள  நடவடிக்கையாக  இருக்கும்.

    • lala says:
      12 years ago

      செய்யலாமதான் . யார் பாக்கிறது ?

      னீங்கள் இது வரை எத்தனை புலம்பெயர் சினிமாவை காசு கொடுத்து பார்த்துள்ளீர்கள் ?

      கவுதமன் புலம் பெயர் தமிழ் சினிமாவை சென்னையில் வெளியிட்டுநட்டம் வந்தால்நீங்கள் பணம் கொடுத்து ஈடு செய்வீர்களா ??

  3. venthan says:
    12 years ago

    நோர்வேயில்ருந்த்து  ஈழத் தமிழர்கள்  சினிமா ஒன்று  எடுத்தார்கள்.  அதை  தமிழகத்து  சினிமா  காரர்கள்  இருட்டடிப்புச்  செய்து  ஓடவிடாமல்  பண்ணிவிட்டார்கள்.

  4. S.G.Ragavan (Canada) says:
    12 years ago

    புலம் பெயர் ஈழத்து சினிமாக்களை தென் இந்தியாவில் வாங்கி வெளியிடுவது என்பது பெரும் பொருட்ச் செலவின் பால்பட்டது. அதனை கௌதமன் தனித்து செய்ய முடியாது.

    முதலில் புலத்து மக்கள் சகல தென் இந்திய சினிமா குப்பைகளையும் நிராகரிக்க வேண்டும். கேபிள் இணைப்பில் பெறும் விஜே டிவி , சண் டிவி என்பவற்றின் இணைப்பினை துண்டித்து தமது எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டும். இதற்கு புலம் பெயர் தமிழர்கள் முன்வருவார்களா? இதனை பிரச்சாரமாக முன் கொண்டு செல்ல தமிழர் தரப்பு தமிழ் இணைய ஊடகங்கள் முன்வருமா?

    இன்று மிகச் சிறந்த தமிழ் திரைப் படங்கள் நல்ல கதை அம்சங்களுடன் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருகிறது அதனை ஊக்குவிக்க யாரும் இல்லை. தென் இந்திய பாப்பானத்திகளின் அழுகை அதட்டல் பிதட்டல் இன்னும் பல ……… வற்றை பார்க்கும் (குஷ்புவின் கு …… யை பார்க்கவா என புதுவை இரத்தினதுரை தனது பாணியில் முன்பு சொன்னார். அதே போலத்தான் இதுவும்.) எமது சமுகம் இவற்றை புறக்கணித்தால், பணத்திற்கு பின்னால் அலையும் விஜே டிவி கள் திருந்த வழியுண்டு. அவர்களை திருத்துவதைவிட நாம் திருந்த நிறையவே உண்டு. புலம் பெயர்ந்த நாம் இன்னும் புலன் பெரிதானவர்களாக இல்லை.

    • lala says:
      12 years ago

      இங்கு கவுதமன் புலம்பெயர் தமிழரின் படங்களை சென்னையில் வெளியிடுவாரா என்று கேட்டிருப்பவர் , இதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் படம் சென்னையில் வெளியாகி ஒரு சந்தை வாய்ப்பு ஏற்படுனம் என்ற நல்லஎண்ணத்தில் இதை கேடகவில்லை .
      இலங்கை பாசிச அரசை அதன் புலன்னாய்வு துறையின் , இந்திய புலானய்வு துறையின் செயற்பாடுகளை எதிர்க்கும் , அதற்கு தடையாக இருக்கும் ஒருவரை வம்புக்கிழுத்து தனி மனித விமரிசன தாக்குதல்நடத்துவதே நோக்கம் .

      அவரது கேள்வியே கேணத்தனமாக உள்ளது .
      புலம் பெயர் தமிழ் படங்கள் , புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்டு , மக்களின் பேராதரவோடு ஒடியிருந்தால் அத்தைகைய படங்களை சென்னையில் வெளியிட்டு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரலாமே எனக்கேட்டிருந்தால் அதனை ஒப்புக்கொள்ளலாம் .

      ஆனால் அப்படியா நடக்கிறது ?
      எத்தனை புலம்பெயர் படங்கள் அரங்குகளில் வெளியிடப்பட்டன ?
      அதை எத்தனை புலம்பெயர் தமிழர்கள் அரங்குகளுக்கு சென்று காசு கொடுத்து பார்த்தார்கள் ?
      இந்த கேள்வியை கேட்டவர் கூட திரையரங்கிற்கு சென்று புலம்பெயர் தமிழர்களின் படங்களை பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே ?

      இங்கு ஒடாத , புலம்பெயர் தமிழர்களாலேயே பார்க்கப்படாத படங்களை சென்னைக்கு கொண்டு சென்று கவுதமன் திரையிடுவாரா ? எனக்கேட்பது இலங்கை அரசின் செயர்பாடுகளுக்கு தடையாக இருக்கும் ஒருவருக்கு எதிராக அழுந்த காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறல்ல ..

  5. மாயா says:
    12 years ago

    புலத்து புலி லொபிகள் பணம் கொடுத்து தமிழக மூடர்களை பேச வைக்கிறார்கள். சிறீலங்காவில் எல்லா தமிழக தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் சிங்களவர் நடத்தும் தமிழ் தொலைக் காட்சிகளில் வருகிறது. தமிழ் திரைப்படங்களை சிங்கள சப் டைட்டிலோடு சிங்கள செனல்களில் ஒளிபரப்புகிறார்கள். இவை இந்த மூடர் கூட்டத்துக்கு தெரியாதோ? இவற்றை தடை செய்யாதது ஏன்? வடக்கு – கிழக்கு மற்றும் இலங்கையில் தமிழர்களே இல்லையா? அங்கு கலை நிகழ்ச்சி நடந்தால் அமெரிக்காவோடு வாக்களிக்க வரும் ஈழத் தமிழர்கள் விமானம் ஏற மாட்டார்களாக்கும்? புலத்தில் வன்னி போர் நடக்கும் போதும் ; தோற்ற பின்னரும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்களே? அதை புலிகள்தானே செய்தார்கள்? அப்பொதெல்லாம் இவர்கள் எங்கே இருந்தார்கள்? 

    • lala says:
      12 years ago

      ## புலத்து புலி பினாமிகள்  பணம் கொடுத்து தமிழக  மூடர்களை பேச வைக்கிறார்கள் ##

      தமிழக மூடர்களுக்கு  பணம் கொடுத்து பேச  வைப்பதற்கு புலத்து புலி பினாமிகளிடம்  பணம் இருக்கிறதா ?
       
      வன்னியில் புலிகளின் தலைமை அழிந்தவுடன்   புலத்தில் இருக்கும் பினாமிகள் புலிகலின் சொத்து அனைத்தையும் அபகரித்து கொண்டார்கள் என்றுதான் உங்களைப்போன்றவர்கள்  இவ்வளவு காலமும் கூறி வந்தீர்கள் .
      அப்படியானால் புலத்து புலி லொபிகள்  தமிழக மூடர்களை பணம் கொடுத்து  பேச  வைப்பதற்கு ஏது பணம் ?

      ##  சிங்களவர்நடத்தும் தமிழ் தொலைக்காட்சிகளில்  தமிழ் திரைப்படங்களை  ஒளிபரப்புகிறார்கள் ##

      தொலைக்காட்சிகளில்  படங்களை ஒளிபரப்புவதற்கான   உரிமையை பெற்று யார் வேண்டுமானாலும் ஒளிபரப்பிக்கொள்ளலாம் .

      ஆனால்  லைவ்வாக  னடைபெறும்  னிகழ்ச்சிகள் அப்படிப்பட்டதல்ல ..

      மொட்டைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சு போடுகிறீர்கள் ..

      ‘##  கலைநிகழ்ழ்ச்சிகள்  னடந்தால்  அமெரிக்காவோடு வாக்களிக்க  வரும் தமிழ் மக்கள்  விமானம் ஏற மாட்டார்களா ##

      ஈழ தமிழ் மக்கள்  ஜெனிவா மானாட்டில்  அமெரிக்காவோடு  சேர்ந்து வாக்களிக்கிறார்களா ????

      மாயா  அவர்களுக்கு புத்தியே  மாயமாகிப்போனது  போலல்லவா உள்ளது..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...