இந்தியாவில் இந்திய அரசின் படுகொலைகளையும் கடந்து தமது வாழ்வுரிமைக்காகப் போராடுவது பழங்குடி மக்களே. அமரிக்காவையும் இந்தியாவையும் கூட்டிவந்து விடுதலை பெற்றுத் தருகிறோம் என்று பழபழப்பான ‘திருவோட்டோடு’ தெருத்தெருவாக ஈழத் தமிழ் தலைமைகள் அலையும் போது உலகின் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்திய அரசிற்கு எதிராக தண்டக்காரண்யா காடுகளில் வீரத்துடன் போராடுகிறார்கள் பழங்குடி மக்கள். பிரித்தானியா இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இப் பழங்குடி மக்களை விச வாயு கொடுத்து அழிப்பதற்குத் தீர்மானித்திருந்த அளவிற்குஅவர்களின் போராட்டம் பிரித்தானியாவை அச்சுறுத்தியது.
‘இந்தியாவில் தென் வட முனைகளில் பழங்குடி மக்களை அழிப்பதற்கு விச வாயுவைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் மிகவும் தொந்தரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். விச வாயுவைப் பயன்படுத்தி அழித்துவிடுவோம்’ என்று இந்தியவில் வேலைபார்த பிரித்தானிய அதிகாரிகளுக்கு சேர்ச்சில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே கடிதத்தில் மற்றொரு இடத்தில் ‘உண்மையில் விச வாயு பயன்படுத்துவதில் என்ன அருவருப்பு இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.
இக்கருத்துக்களைத் தெரிவித்த வேளையில் வின்ஸ்டன் சேர்ச்சில் அரசியலில் செல்வாக்குள்ளவரக இருந்த போதும் பிரித்தானியாவின் பிரதமராக இருக்கவில்லை. போருக்கும் விமானப் படைக்குமான அரச செயலராகப் பதவி வகித்தார். இந்த உண்மையை பிரித்தனிய வரலாற்றாசிசிரியரான கைல்ஸ் மிலிட்டன் தெரிவித்துள்ளார்.
தவிர சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசப் போராளிகளான போல்ஸ்விக்குக்களுக்கு எதிராக பாரிய அளவில் விச வாயுவைப் பயன்படுத்துவதற்கு சேர்ச்சில் அனுமதி வழங்கியிருந்தார் என அவர் மேலும் தனது நூலில் ஆதரங்களுடன் தெரிவித்துள்ளார். விக்டன் நுல் வெளியீட்டு விழாவில் “Russian Roulette,” தனது என்ற நூலை வெளியிடும் போதே கைல்ஸ் மிலிட்டன் இத்தகவல்களைத் தெரிவித்தார். அவ்வேளையில் பிரித்தானியாவின் எதிர்காலப் பிரதமராகக் கருதப்பட்ட சேர்ச்சில் அரச த். உறைச் செயலராகவிருந்தார்
பிரித்தானிய அரசு என் டிவைஸ் என்ற பெயர் கொண்ட இரசாயன ஆயுதத்தைத் இரகசியமாகத் தயாரித்திருந்தது. ஒரு ஷெல் பொன்ற வடிவமைப்புக் கொண்ட இந்தக் கருவியின் நுனியில் விச வாயு இணைக்கப்பட்டிருந்தது. போட்டன் என்ற ஆய்வு கூடத்திலேயே இப் பயங்கர ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. அவ்வேளையில் ஆயுதத் தொழிற்சாலைக்குப் பொறுப்பாகவிருந்தவர் மிகவும் அதிக அழிவு தரக்கூடிய பேரழிவு ஆயுதம் இது எனத் தெரிவித்திருந்தார்.
சேர்ச்சில் ரஷ்யாவில் கம்யூனிசப் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே இந்த ஆயுதங்களைத் தயாரிக்க உத்தரவிட்டிருந்தார்.
1918 ஆம் ஆண்டு ஓகஸ்ட் செப்டெம்பர் மாதமளவில் விமானங்களூடாக இந்த ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வடக்கு ரஷ்யாவில் போல்ஸ்விக்குகளால் விடுதலை செய்யப்பட்டிருந்த கிராமங்கள் மீது வீசப்பட்டன.
முதலாளித்துவப் பயங்கரவாத அரசுகள் மக்களுக்காகப் போராடிய பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்தை நிறுவ முற்பட்ட கம்யூனிசப் போராளிகள் மீது விச வாயுத் தாக்குதல்களை நடத்திய மறு புறத்தில் கம்யூனிசத்தை அழிப்பதற்கு உலகம் முழுவதும் அவதூறுப் பிரச்சாரங்களைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டனர்.
இவ்வாறு மக்கள் போராட்டங்களதும் மக்களின் ஜனநாயகதிற்கும் வித்திட்டவர்களின் பயங்கரவாதம் இன்று வரை தொடர்கிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் போல்ஷ்விக் போராளிகள் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்தை முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக நிர்மாணம் செய்தனர்.
சிரியாவில் இதேவகையான விச வாயுக்களைப் பயன்படுத்தியு ஆதாக சிரியாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்று அமரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் கோரின. அண்மைக் காலங்களில் பொட்டாசியம் புலோரைட் மற்றும் சோடியம் புலோரைட் போன்ற கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு நிறுவனங்களுக்கு ஐந்து அனுமதிப் பத்திரங்களை பிரத்தானிய அரசு வழங்கியிருந்தது.
பிரித்தானிய அரசின் வியாபாரச் செயலராகவிருன்ட்க்கும் வின்ஸ் கேபிள் இனால் இறுதியாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. சிரியாவில் பிரித்தானிய அமரிக்க ஆதரவுடன் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதப்போர் நடத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தோற்றத்துடனயே இரசாயனப் பொருட்களின் அனுமதியும் வழங்கப்பட்டது எவ்வாறு என தெளிவுபடுத்துமாறு பிரித்தானியப் பிரதமர் கமரூனை மனித உரிமை அமைப்புக்கள் சில கேள்வியெழுப்பின.
தவிர, சவுதி அரேபியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விச வாயு ஆயுதங்களைக் கொண்டு தாம் போரிட்டதாக அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெரிவித்துள்ளனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட நேர்காணல் ஒன்றில் இவர்கள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
30 ஏப்ரல் 1930 இலும் 13 ஜனவரி 1993 இலும் இரசாயன ஆயுதங்களுக்கு எதிரான ஜெனீவா ஒப்பந்ததில் பிரித்தானியா கைச்சாத்திட்டது. இருப்பினும் உலகில் இரசாயன ஆயுதங்களைத் தொடர்ச்சியாகப் பரிசீலித்த நாடுகளில் பிரித்தானிய முதன்மை இடத்தை வகிக்கிறது.
1939 இற்கும் 1989 இற்கும் இடைப்பட்ட 80 வருட காலப்பகுதியில் போட்டன் ஆய்வுகூடத்தில் இரசாயன ஆயுதங்களைப் பரிசோதனை செய்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் பலர் தொடர்ச்சியாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.
இலங்கையில் வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற 2008 காலப் பகுதியில் பிரித்தானிய அரசு 4.5 மில்லியன் பவுண்ட்ஸ் ஆயுதங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருந்தது.
இலங்கையில் பொட்டாசியம் பொஸ்பரஸ் குண்டுகளை இலங்கை அரசு பயன்படுத்தியதற்கான ஆதரரங்கள் பல முன்வைக்கப்பட்டிருந்தன.
எது எவ்வாறாயினும் அரச பயங்கரவாதிகளுக்கு அடியாள் படைகளாத் தொழிற்படும் பல சமூக விரோதிகள் தம்மை தேசிய்த்தின் காவலர்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
பிரித்தானிய அரசையும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும் ஜனநாயகம் என்று, போராடும் மக்களை அழித்தவர்களை கடந்து செல்வதிலிருந்தே மக்கள் சார்ந்த அரசியல் ஆரம்பிக்கும்.
Alleged British use of chemical weapons in Mesopotamia in 1920
http://en.wikipedia.org/wiki/Alleged_British_use_of_chemical_weapons_in_Mesopotamia_in_1920
British companies sold chemicals to Syria that could have been used to produce the deadly nerve agent that killed 1,400 people, The Mail on Sunday can reveal today.
Between July 2004 and May 2010 the Government issued five export licences to two companies, allowing them to sell Syria sodium fluoride, which is used to make sarin.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2415081/Britain-sent-poison-chemicals-Assad-Proof-UK-delivered-Sarin-agent-Syrian-regime.html#ixzz2gjGwwSoM
Follow : @MailOnline on Twitter | DailyMail on Facebook
Chemical weapons were used by the United Kingdom in World War I, and while the use of chemical weapons was suggested by Churchill and others postwar in Mesopotamia and in World War II.
http://en.wikipedia.org/wiki/Chemical_weapons_and_the_United_Kingdom
பழங்குடி மக்கள் பல நாடுகளிலும் பல வழிகளில் ஒடுக்கப்பட்டுள்ளர்கள்… இதற்க்கு திராவிடத் தலைமை அரசர்களும் விதிவிலக்கல்ல…
– அலெக்ஸ்
தமிழ் இலக்கியத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் பெரும் தாக்குதலுக்கு உள்ளான பாரி, அதியன் போன்ற அரசர்கள் பழங்குடி அரசர்களேயாவார்கள். வணிகமயமான பொருளாதாரத்தை நிறுவ வந்த நிர்பந்தத்தை எதிர்த்து சுயமரியாதையுடன் நின்றதாலேயே இப்பழங்குடி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை காண இயலுகிறது. வரலாறு நெடுகிலும் பழங்குடி அரசுகள் தொடர்ந்து இடைவிடாத தங்களின் வீரந்தணிந்த போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்தியாவில் லிச்சாவி சாம்ராஜ்ஜியம் மகத பேரரசுக்கு எதிராகப் போராட பழங்குடிக் குழுக்களால் உருவாக்கப்பட்டது. அதன் தலைவர் வைசாசி. இதனை அஜாய்சந்ரூ அழிக்கின்றான்.
தமிழகத்தில் கரிகால சோழனின் பேரரசுக்கு எதிராக வெண்ணிப் பறந்தலை போரில் பழங்குடி அரசுகள் எதிர்த்து போர் புரிந்து தோல்வியடைந்தன. மத்திய இந்தியாவின் கி. பி. 10ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை கூண்டு பழங்குடிகளின் ஆட்சி நடந்தது. பழங்குடிகளின் கார்கா – மண்டலா அரசு நர்மதை பள்ளத்தாக்கிலும் அதனை ஒட்டிய வனப்பகுதியினும் அரசாண்டது. ஜபல்பூர் நகரம் அதன் முக்கிய தலைநகர்களில் ஒன்றாகும். ராணி துர்க்காவதி என்ற பழங்குடி பெண்ணின் அரசாட்சி அவள் முகலாயிருக்கெதிரான யுத்தத்தில் சாகும் வரை நீடித்தது. நாக்பூர் நகரம் 18ம் நூற்றாண்டின் கூண்டு பழங்குடி அரசர்களால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து வீரஞ்செறிந்த எதிர்ப்பு பலசமயம் பழங்குடி பகுதிகளிலிருந்தும் வந்தது.
1772 – ல் பகாரிய பழங்குடிகள் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர். தில்கா மஞ்சி என்ற அதன் தலைவன் 1785-ல் பகல்பூரில் தூக்கிலிடப்படும் வரை அப்போராட்டம் தொடர்ந்தது. தமர், முண்டா பழங்குடிகளின் போராட்டம் இந்தியாவின் பழங்குடி பகுதிகளில் எதிரொலித்தது. 1855-ல் காரன் வாலிஸ் கொண்டுவந்த நிரந்தர குடியியல்பு திட்டங்கள் பழங்குடிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் மீதும் சுரண்டலை ஏற்படுத்தியபோது சந்தால் பழங்குடிகள் கடும் எதிர்ப்பைக் காட்டி போராடினர். அதன் பின் 1857-முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி தலைவர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டனர்.
1858-ல் ஆங்கிலேயர்கள் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நசுக்கி விக்டோரியாவின் நேரடி ஆட்சி மூலம் காலனியாதிக்கத்தை இந்திய சமூகத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக 1878-ல் இந்திய வனச்சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள வனங்கள் மற்றும் கானுயிர்கள் அனைத்தும் அரசுக்கு உரிமையுடையது என்று மாற்றப்பட்டது. பழங்குடிகளை நசுக்கக் குற்ற பழங்குடிசட்டம் 1871-ல் கொண்டுவரப்பட்டிருந்தது. பழங்குடிமக்கள் மீது காலனி ஆதிக்கவாதிகளின் சுரண்டலும் ஜமீன்தார்களின் பிடிகளும் இறுகியபோது பீர்கா முண்டா போன்ற பழங்குடித் தலைவர்கள் போராடி, சிறைபட்டு உயிர்த்தியாகம் செய்தனர். தென்னிந்தியாவில் ஆந்திரத்தில் 1922-ல் அல்ஷாரி ராமச்சந்திர ராஜீ என்ற சீத்தாராம ராஜீ என்பரின் தலைமையில் பழங்குடிகள் திரண்டு போராடினர். இப்போராட்டத்தை நசுக்க ஆங்கிலேய மலபார் சிறப்பு படை வரவழைக்கப்பட்டது. எனினும் அல்ஷாரி ராஜீ வீரமரணம் அடையும் வரை பழங்குடிமக்கள் தொடர்ந்து ஆங்கிலேய அடக்கு முறையை எதிர்த்தனர்.
http://www.keetru.com/ungal_noolagam/jan08/balamurugan.php