சோளன் : ஐயா முதலமைச்சரே, மூடிசூடிய மன்னரே வணக்கம் வாழ்த்துக்கள்.
விக்கி : ஆயுபோவன், குட்மோர்ணிங், வணக்கம்!
சோளன் : அதென்ன ஐயா வணக்கத்துக்குள்ளேயே இப்படி பென்னாம் பெரிய குண்டு வச்சிருக்கிறீயள். வேற வேற மாதிரி எல்லாம் பேசிறியள்.
விக்கி : அச்சோ…. குண்டு கிண்ட்டெல்லாம் பேசக்கூடாது பாருங்கோ, அப்புச் சாமி கோவிச்சுப்போடுவார்.. நாங்கள் இப்ப இந்து தத்துவத்தையும் புத்தற்ற போதனையையும் கலந்து சிலாவிக் கலக்கி தான் பஞ்சாமிர்தம் போடுறம் பாருங்கோ. ஆயுபோவனும் வணக்கமும் அதில ஒண்டுதான். இதுக்கு நல்ல தமிழில நல்லிணக்கம் எண்டெல்லே சொல்லுவினம்.
சோளன் : நீங்கள் ஆய்போவன மாதிரி ஏன் சலாம் அலைக்கத்தையும் சேர்க்கக் கூடது என்று சோளனுக்கு நீங்கள் வந்த காலத்தில இருந்தே மூளைக்குள்ள ஒரு குடைச்சல். அவையளையும் உவன் ராசபக்ச எங்கட சனத்தை அழிக்கிறமாதிரித் தானே அழிக்கிறான். அவையளுக்கும் நல்லிணக்கத்தில கொஞ்சம் பாத்தும் பாராமல் குடுக்கலாம் தானே.
விக்கி : அய்ய்யோ, ராஜபக்சவை அவன் இவன் எண்டு கதையாதைங்கோ. அவர் கோவிச்சுப் போடுவார். நீங்கள் முஸ்லீம் ஆக்களைப் பற்றிச் சொல்லுறியள் போல. அது பாருங்கோ இப்ப வேண்டாம். தற்செயலா நான் முஸ்லிம் ஆக்களைக் கதைக்கப் போய் கௌரவத்துக்குக் கோவம் வந்துட்டா ஏன்ன செய்யிறது.
சோளன் : கௌரவமா?
விக்கி : கௌரவ ஜனாதிபதி அவர்கள்.
சோளன் : ஆ.. அதுசரி அப்ப முஸ்லிம் ஆக்களப் பற்றிக் கதைக்க மாட்டியளோ. அவை ராஜபக்ச இனக்கொலை செய்தாலும் நீங்கள் ராஜபக்சவோட மட்டும் தான் நல்லிணக்கமோ?
விக்கி : ஓம் எங்களுக்கு இப்ப அவர் தான் முக்கியம். அவரைப் பிடிச்சுத் தான் எல்லம் செய்யவேணும் என்று இந்தியா வேற சொல்லியிருக்கு.
சோளன் : அப்ப ராஜபக்சவோட நல்லிணக்கம் என்று முஸ்லிம் ஆக்களை கடாசிப் போட்டியளே.
விக்கி : உந்தப் பெரிய பெரிய கதையள் எல்லாம் ஒருத்தரும் எனக்கு சொல்லித் தரேல்லெ. அப்பவே சொல்லியிருக்கிறன் அரசியல் எல்லாம் எனக்குத் தெரியாது என்று.
சோளன் : ராசபக்சவோட நல்லிணக்கம் எண்டால் இப்ப ராசபக்சவுக்கு எதிராப் போராடின மீடியா காரர், ராஜபக்ச கொலைசெய்யிற வெலிவேரிய அப்பாவி மக்கள் எல்லாரும் எதிரிகளோ?
விக்கி : அவங்கள விட்ருங்கோ, சல்லிக் காசும் இல்லாதவங்கள். அவங்கள ராசபகவோட ஒப்பிட ஏலுமே? நாங்கள் யார்? பென்னாம் பெரிய படிப்பெல்லம் படிச்சு இங்கிலீசுக் காரரையே கலக்கினவங்கள். சட்டப்படி போராடுறது குற்றம். அதுக்கான தண்டனையத் தான் அனுபவிச்சவை.
சோளன் : அப்ப தமிழ் மக்களும் தானே போராடினவை.
விக்கி : அது பிழை எண்டு தெரிஞ்சு தானே நான் முள்ளி வாய்க்கால்ல கொலை செய்யேக்க மூச்சுவிடாமல் இருந்தனான்.
சோளன் : புலம் பெயர் தலைவர் மார் உங்கள்ள கோவமா இருக்கினமாம்.
விக்கி : யார் சொன்னது. நாடுகடந்த அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை எல்லாம் எனக்குத் தானே வோட்டுப் போடச் சொன்னவை.
சோளன் : சிலபேர் எதிர்க்கினமாம்.
விக்கி : அட அவங்களை விடுங்கோ. அவை நான் செய்யிற அதே வேலையளைத் தான் வேற விதமாச் செய்யினம். நான் நெடுக்கால செய்தால் அவை குறுக்கால செய்யினம். அவை ஏதோ நீங்கள் சொன்ன முஸ்லிம்கள், வெலிவேரியா இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டவையே. இதால அவை இருக்கிறது மகிந்தவுக்கும் விருப்பம் தான். என்ன இந்தியாவில தேர்தல் எண்டு வரேக்க தங்களுக்குப் பிரச்சனை வந்தாலும் எண்டு தான் மன்மோகன் பயப்படுரார். எங்களுக்கு அது பிரச்சனை இல்லை. இப்ப மோடி வந்தாலும் என்ன. அவரும் என்னப் போல தான் ஒரு கடவுள் பக்தன். புலம் பெயர் நாட்டில செத்தவீடு, பிறந்த நாள் எண்டு விழா வைச்சு நடத்த தடை வந்தாலும் எண்டு பயப்படுகினம். அதெல்லாம் எங்களுக்குப் பிரச்சனையே இல்லை.
ஆகலும் மிஞ்சிப் போனால் சிங்களவன், சிங்களம், தேசியத் தலைவர், தாயகம் என்று பஞ் டயலாக்கை இடைக்கிடை எடுத்து விட்டால் அவை அடங்கிப் போவினம்.தேவை வரேக்க எடுத்துவிட எழுதிப் பாடமாக்கி வைச்சிருக்கிறன். அவைக்கு அது மட்டும் தான் முக்கியம் என்றது எனக்கும் மகிந்தவுக்கும் நல்லாத் தெரியும். பம்பலப்பிட்டி முருகனின் வேலைப் பிடிச்சு ஆணையாகச் சொல்லுறன் அவையிண்ட பிழைப்புக்கு நான் ஆப்பு வைக்க மாட்டன். அது அவைக்கும் தெரியும்.
சோளன்: நீங்கள் வேல் எண்டு சொல்லேக்க தான் ஞாபகம் வருகுது, இண்டைக்கு வேலோட முடிசூட்டி நீங்கள் எடுத்த படம் சுப்பர். சும்மா தனுசு மாதிரி இருக்கிறியள்.
விக்கி: நன்றி, அது சரி யார் அந்த தனுசு?
சோளன் : தனுச உங்களுக்குத் தெரியாதே. நான் என்னவோ அரசியல் மட்டும் தான் தெரியாது என்று நினைச்சால் நீங்கள் உலக அறிவில முட்டை வாங்கின ஆளா இருப்பியள் போல. தனுசு இந்தியாவில் பெரிய நடிகன். அந்தக் காலத்தி எம்சிஆர் போல இப்ப தனுசு தான்.
விக்கி : (விக்கி கடுப்பாகிறார்) அப்பவே சொன்னனான் உந்தத் தமிழ் நாட்டு காரரைப் பற்றிப் பேசக்கூடாது என்று. எங்கடை பிரச்சனைய அவை தங்கடை லாபத்துக்கு பயன்படுத்தீனம்.
சோளன் : நீங்கள் சொல்லுறது முழுக்கப் பிழையில்ல எண்டாலும் உங்கட மன்மோகன்ம் அப்படித்தானே?
விக்கி : மன் மோகனையும் லோக்கலையும் ஒப்பிடாதையுங்கோ. மன் மோகன் தனியாள் இல்லை. அவருக்குப் பின்னால ரோ, ஐபி, இந்துத் துவம் என்று எத்தினை இருக்கு..
சோளன் : சொன்னாப் போல.. இந்துத்துவத்தில உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதால கேக்கிறன். 80 ஆம் ஆண்டில தொடங்கி முள்ளி வாய்க்கால் வரைக்கும் முப்பதாயிரம் போராளிகளை நீங்கள் ஆட்சி செய்யும் யாழ்ப்பாணம் மட்டும் கொடுத்திருக்கு. அவையளின்ட ஆவி எல்லாம் உங்களை அடிச்சுப் போடும் எண்டு நினைக்கேல்லையே?
விக்கி : (விழுந்து விழுந்து சிரிக்கிறார்) நான் என்ன விசரன் எண்டே நினைச்சியள். என் குருவானவர் பிரேமானந்தா சுவாமிகள் அந்தக் காலத்திலையே யாகம் செய்து மந்திரிச்சு கட்டின தாயத்து எந்தப் பெரிய ஆவிகளில இருந்தும் பாதுகாப்பு வாங்கித் தரும். அந்த நம்பிக்கையில தான் இப்பவும் வாழ்றன். என்று சொன்னவர் கடமைகள் கண்ணை மறைப்பதால் விடை பெற்றுக் கொள்கிறார். நேரமின்மையால் சுருக்கமாக வணக்கம் சொல்கிறார். ஆயுபோவன் டொட் டொட் டொட்..
(இது ஒரு மெய் நிகர் நேர்காணல், யாவும் கற்பனை என்றாலும் உண்மை கலந்த கற்பனை)
ரோட்டில நிக்கிற காவாலியள் வடிவான பெட்டயள் போனால் கூ என்டு கத்தி குளறுவாங்கள்.ஏன்?…………………………………….. அவங்களுக்கு உள்ள மாதிரி பிரச்சனை உங்களுக்கும் இருக்கு பாருங்கோ……….. மேலும் நீங்கள் யாரை முதலமைச்சரா போட வேணும் என்டிரியள். ஓரு வேளை உங்களை போட்டிருக்கலாமோ…………..
என்னத்தை எழுதலாம் என்று யோசிச்ச உங்களிற்கு இப்ப நல்ல தீனி கிடைத்துள்ளது. எதைவேண்டுமானாலும் பேசுங்கள் உங்களின் கதைகேட்கவும். ஆமா போடவும் இதிலை வேலைவெட்டியில்லாத வெங்காயங்களும் இருக்கத்தான் செய்யுதுகள்.
நீங்கள் சொல்லும் ஈழவிடுதலைபோராட்ட இயக்கங்கள். ஈழத்திற்காகவா போராடினார்கள்>(ஈ.பிஆர்.எல்.எப் . டெலோ .புளொட்) தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைவதற்கு முன்னர் இந்த துரோகக்கூட்டம் அவ்வவ்போது ஆழும் அரசுகளுடன் கூடி கும்மாளம் அடித்தது உங்களிற்கு ஏன் ஞாபகம் வரவில்லை? சிந்தாத்தன் இதற்குமுன்னர் என்ன செய்துகொண்டு இருந்தவர். இவர்கள் எல்லாம் எப்போதோ அரசியலில் இருந்து துக்கிஎறிப்பட்டவர்கள். தனித்து போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்று இருந்தவர்கள். இன்று கூடமைப்பினால் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இப்போது பதவிக்காக அடித்துக்கொள்வதைப்பார்த்தாலே தெரியவில்லையா அவர்களின் விடுதலை உணர்வு என்னவென்று? இந்த மாகாணசபை முதலமைச்சரிற்கே சரியான அதிகாரங்கள் கிடைக்கப்போவதில்லை இதற்குள் அமைச்சுப் பதவிக்கு போட்டிவேறு. அதற்கு வங்காலத்துவாங்க ஒரு கூட்டம்.
தமிழர்களிற்கு ஒரு தீர்வு வேண்டுமென்றால் ஒரேவழிதான் உள்ளது. உலகத்தில் புலம்பெயர்ந்துள்ள அத்தனை தமிழர்களையும் மீண்டும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பினால்தான். சிங்களவனிடம் மிதிபட்டால்தான் சுதந்திரத்தின் வலிதெரியும் அதன்பின்னர்தான் சரியான பாதை திறக்கும். அதுவரை இதுதொடரத்தான் போகிறது> வெளிநாடுகளில் சுகமாக குந்திக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி தானும்கெட்டு மற்றவனையும் குழப்பிக்கொண்டு மேதாவிகளாக எத்தனை நாளுக்கு இன்னும் உயிரைப்பிடித்திருக்கப்போகிறீர்கள்?????????????????????? நல்ல முடிவாக எடுத்து போய்சேருங்கள்……………….உங்களால் நாலுபேராவது வாழட்டும்.
வெளிநாட்டில் பல தமிழா;கள் உண்மை உணா;வுடன் இருக்கிறார்கள். அவா;களை நாம் மதிக்கிறோம். ஆனால் இப்படி சிலரை நாம் மாற்றவே இயலாது. நாய் வால்கள்தான். உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கின்ற.
கருத்து எழுதுவதற்கும் ஒரு பண்பு இருக்கவேண்டும். நோ;காணல் என்ற பெயரில் எவருக்குமே உபயோகமற்றவற்றை எழுதவேண்டுமென்பதற்காகவே எழுதிக்கொண்டிருக்கக்கூடாது. மிக அண்மைக் காலம்வரை துரோகத்தையே செய்துகொண்டிருந்த சித்தார்த்தன் கூட்டம் ஆனந்தசங்கரி கூட்டத்துக்காகப் பாpந்து பேசுவதற்கான உரிமை இருந்ததால்தான் தோ;லுக்கு டிக்கட் வழங்கப்பட்டது. அந்த நன்றியுடன் இறுதிக்காலத்தில் நல்லவா;கள் என்ற பெயருடன் போய்த் தொலையட்டும். சுரேஷ் போன்றவா;களுக்கு தலைவா; என்ற பெயா; வேண்டும். பிரபாகரனின் தாராள மனத்தினால்தான் அவா; தமிழருள் ஒருவனாக இருக்கிறார். அந்த கெளரவத்தைக் காப்பாற்றிக்கொண்டு தமிழருக்கு விசுவாசமாக இருப்பதுதான் நல்லது. இவா;களது இயக்கங்களைக் கலைத்துவிட்டு தமிழா;க்கென உள்ள ஒரே கட்சியாக தந்தையின் தமிழரசுக் கட்சியை ஏற்று செயல்பட்டால் யாவா;க்கும் நல்லது. திரு. சம்பந்தன் துரோகியாக என்றுமே இருந்ததில்லை.
Senthilan you started out right. Then all those names. These are all actors in the field. In the Northern Province.
எதனையும் கூறலாம். எல்லாம் சரியாக – பொருத்தமாக இருப்பது போலத்தான் படுகிறது. ஆனால் ஆனால் தமிழ் மக்கள் – ஏன் சிங்களவர்களும் ஆதரித்தும் அணிதிரண்டுமும் நிற்கிற பிற்போக்கு – பாசிச – மேட்டுக்குடி – தேசிய வாதம் குறித்து தான் ஒன்றும் புரியவில்லை. –
நிலைமைகள் மிகக்கவனத்திற்குரியவை போலும்.
விஜய்
Vijey, when I see him I think of Mohammed Ali Jinnah. 1935. Nagpur.
ஏன் சிறிசபாரட்ணம் கொல்லப்பட்ட புகையிலை தோட்டத்தினுள் பதவிப்பிரமாணம் செய்யவில்லை? விளக்குகிறார் சிவாஜிலிங்கம்.
ஒலிப்பதிவு இணைப்பில்…
http://www.ilankainet.com/2013/10/blog-post_6099.html