Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

விக்கிரமபாகு கருணாரத்தின கைது செய்யப்படவுள்ளார்?

இனியொரு... by இனியொரு...
12/10/2010
in இன்றைய செய்திகள்
0 0
26
Home இன்றைய செய்திகள்

லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கத்துக்கெதிரான கருத்துக்களை வெளியிட்ட காரணத்துக்காக விக்கிரமபாகு கருணாரத்தின கைது செய்யப்படலாம் என்று ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரிகளின் தகவல்களிலிருந்து தெரிய வருகின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஒரு இலட்சம் பேரளவிலான சிவிலியன்கள் கொல்லப்பட்டார்கள் என்று அவர் லண்டனில் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு, பொய்யான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதற்கு ஏதுவான சட்டப்பின்புலம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

விக்கிரமபாகு மற்றும் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோரைக் கைது செய்யுமாறு ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புப் பணிப்பாளர் விமல் கீகனகே மற்றும் ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய சட்டத்தரணிகள் சிலரும் ஏற்கெனவே பொலிசில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.

அவ்வாறான பின்புலத்தில் தான் ஜனாதிபதியே இன்று அது தொடர்பான சட்டவிதிகளை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினர் ஒரு இலட்சம் தமிழ் சிவிலியன்களைப் படுகொலை செய்ததாக விக்கிரமபாகு கருணாரத்தின லண்டனில் வைத்துத் தெரிவித்த குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கையில் பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளதாக நேற்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறான நிலையில் பொதுமக்கள் சுயமாக விக்கிரமபாகு கருணாரத்தின மீது தாக்குதல் மேற்கொண்டாலோ அல்லது அவர் போன்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கெதிராக வன்முறையில் இறங்கினாலோ அரசாங்கத்தால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது போகும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

அரசாங்கம் அனைத்து மக்களினதும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு மதிப்பளித்து ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதை கடுமையாகச் சாடிய மறுகணமே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இலங்கை மக்களின் கருத்துக்களுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டது தான் வேடிக்கையாக இருந்தது.

பிரிட்டனில் நடைபெற்றது பொது மக்களின் ஆர்ப்பாட்டம் அல்லவென்றும் அது புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களினது ஆர்ப்பாட்டம் என்றும் அவர் வலியுறுத்தினார். அந்தவகையில் ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்தானது கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் செயல் எனவும் அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அதற்கடுத்த நிமிடமே அவர் விக்கிரமபாகுவின் கருத்துச் சுதந்திரத்தை மீறும் வகையில் வார்த்தைகளை உதிர்த்தமை தான் பெரும் நகைச்சுவையாக இருந்தது.

அத்துடன் விமான நிலையத்தில் விக்கிரமபாகு மீதான தாக்குதலையும் நியாயப்படுத்துவது போன்று அவர் கருத்து வெளியிட்டார். மேலும் அன்றைய சம்பவத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும்,எந்தவொரு ஊடகவியலாளருக்கும் காயங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டிய வண்ணம், அவர்கள் தாக்கப்படவில்லை என்றும் அழிச்சாட்டியமாக மறுத்தார்.

அதே போன்று ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களில் அமைச்சர்கள் அல்லது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஒரு சிலர் கதை பரப்புவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல, அவையனைத்தும் சோடிக்கப்பட்ட பொய்கள் என்றும் மறுத்துரைத்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கைத் துருப்பினர் உலகின் மிகச்சிறந்த சமாதானப் படை : மகிந்த ராஜபக்ச Vs மேர்வின் சில்வா

Comments 26

  1. YOGA.S says:
    15 years ago

    பொது மக்கள் கொதித்தெழுந்தார்களா?அப்படியான நிலையிலா வைத்திருக்கிறீர்கள்?உண்பதற்குப் “பாணே” இல்லாதிருக்கையில் கொதிப்பதாவது?எதிர்க் கருத்து இல்லையெனில்,ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனில் சர்வதேசத்தில் இன்னமும் உங்கள்”புகழ்” ஓங்கும்!

  2. chandran.raja says:
    15 years ago

    தற்போதைக்கு ஒன்றை மட்டும் உறுதியாக கூறமுடியும். கம்யூனீஸம் களவாடப் பட்டிருக்கிறது.இல்லை.. விலைக்கு வாங்கப் பட்டிருக்கிறது ஏகாதிபத்தியங்களால். இதில் கடந்தகாலத்தில் இலங்கை அரசியலில் இருந்த அணுகு முறையே போதுமானவை. இந்த விக்கிரபாகு கருணரெட்னா ஒரு கொசிமினோ சேக்குவாராவே பிடல்கஸ்ரோ அல்ல. அவர்களின் சாப்பிட்டுவிட்ட கோப்பைகளில் சாப்பிடுவதற்கே அருகதை இல்லாதவர்.இதைத் தாம் நாம் கடந்த காலத்தில் கண்டுகொண்டோம். விக்கிரபாகு லண்டனில் உரைநிகழ்த்த அழைப்பு விடுத்தவர்கள் யாராக இருக்குமென்று நினைத்தால் இலங்கையின் பிற்போக்கு தனத்திற்கு உறைவிடமாக இருப்பவர்களான புலிகள். புலிகளின் பாதுகாப்பாளர்களாக இருக்கிற முதாலித்துவ பிரித்தானிய அரசே!. பிரித்தானிய தொழிலாளிவர்க்கமா இவர் பேச்சை கேட்க ஆவலாக இருக்கிறது?. இதுதெல்லாம் ஒரு சதுரங்க ஆட்டம்மாதிரி இல்லையா….? இன்று நடக்கிற அரசியலில் மேற்குலகத்திற்கும் கிழக்குலக மூலதனத்திற்கும் நடக்கிற கயிறு இழுப்பு போட்டியே அதில் கருணரெட்னா விக்கிரபாகு ஒரு நடிகன் பாத்திரமே.

    • xxx says:
      15 years ago

      விக்ரமபாகுவுடன் எனக்குப் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவருடைய கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிற முயற்சிகளுக்கு ஒத்தூதுவது போலக் கேவலமான நடத்தையுடைய ஒருவர் தன்னை எப்படி இடதுசாரி என்று அழைக்க இயலும்?

      விக்ரமபாகுவின் கோளாறுகள் அவரது ட்ரொட்ஸ்கியதில் தொடங்குகின்றன.
      இலஙக்கையில் எல்லா ட்ரொட்ஸ்கியர்களின் கதையும் முடிவில் ஒன்றுதான்.

      • chandran.raja says:
        15 years ago

        கருத்துசுகந்திரம் ஊடகசுகந்திரம் துரோகம் போன்ற வார்த்தை ஜாலங்களை கண்டுகொண்டுதானே! இருக்கிறோம். முதாலித்துவ சிந்தனைவாதிகள் தத்துவார்தவாதிகளுக்கும் கருத்துசுகந்திரம் இருக்கிறது என்பதை எக்ஸ் அவர்கள் கண்டுகொள்ள வேண்டும்.எந்த வர்கத்கத்திற்கா தமது கருத்துக்களை வைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளவேண்டும்.முயலவேண்டும்

        விக்கிரபாகு ரொஸ்கியத்தில் இருந்த படியால் தான் கோளாறு ஏற்பட்டிருக்கிறா? மாவோவாதிகள் ஸ்டாலிசவாதிகள் எல்லாம் கோளாறு இல்லாத மாதிரியல்லவா எக்ஸ்சின் கதை இருக்கிறது.

        ரொக்ஸியத்திற்கு சேறடிக்க வேண்டுமென்றால்… விரும்பினால் வேறு அணுகு முறைகள் இருக்கிறது. அதற்கு இந்த உதாரணங்கள் உதவப் போவதில்லை.

        • suganthan says:
          15 years ago

          ரொட்ஸ்கிச பன்னாடைகள் ஒன்று காலத்திற்கு ஏற்ப நிறம்மாறி வேடம் போடுவதையோ அன்றேல் மதவாதிகளை போல மாக்சிசத்தை மதம் போல மந்திர உச்சாடணம் செய்வதைத்தானே நாம் பார்த்திருக்கின்றோம். ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான மன்னர் ஆட்சிக்கெதிராக ஈரானில் மக்களின் கிளர்ச்சி போராட்டத்தை பின் கதவால் கபளீகரம் செய்த மத அடிப்படைவாதிகள் போராட்டத்தில் முன்னணி வகித்த இடதுசாரிகளையும், முற்போக்குசக்திகளையும் படுகொலைசெய்தும், சமூகத்தின் அனைத்துபிரிவினரையும் தனது கட்டுக்குள் கொண்டுவந்தது. “கம்யூனிசம் செத்துவிட்டது இஸ்லாத்தை படியுங்கள்” என்றார் அ.கொமேனி. ஆனால் இலங்கையில் ரொட்ஸ்கிஸ்டுகள் ஈரானிய புரட்சியை சிலாகித்துகொண்டிருந்தார்கள். இன்னும் ஒருபடிமேலேபோய் எண்பதுகளின் நடுப்பகுதியில் சிஙகள மக்கள் மீதான புலிகளின் தாக்குதல்களை ஆதரித்த ரொட்ஸ்கிஸ்டுகளும் ( இவர்கள் புலிகளின் உளவாளிகளா என மற்றவர்கள் பயப்படும் அளவுக்கு) யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். இவை வெறும் சிறு உதாரணங்கள்.

          • chandran.raja says:
            15 years ago

            அதே நேரத்தில் எந்தப் பக்கதில்
            நீங்கள் இருந்தீர்கள் என்பதற்கு ஏதாவது ஒருசிறு உதாரணம்…?

          • suganthan says:
            15 years ago

            நாம் நியாயத்தின் பக்கமும், மக்களின் பக்கமும் இருந்தோம் என்பதைக்கூடவா டுபுக்கு ராஜாக்களுக்கு புரிந்து கொள்ளமுடியவில்லை. ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற மக்களுக்கு ஜனநாயக்மும், போராளிகளுக்கு ஜனநாயக மத்தியத்துவமும் அவசியமென் போராடிக்கொண்டிருந்தோம்.

      • sivan says:
        15 years ago

        well done siva sorry x x x

    • xxx says:
      15 years ago

      கருத்துச் சுதந்திரம் ஓரளவுக்கு உள்ள இ டத்க்தில் இருந்து கொண்டு அதைப் பற்றிப் பேசத் தேவை இல்லை என்பது “பரமசிவன் தலையிலிருந்து பாம்பு கேட்டது…” மாதிரி மிக எளிது.
      இலங்கயில் உங்கள் வழிபாட்டுக்குரிய சனாதிபதியின் ஆட்சியை மட்டுமல்ல அதில் உள்ள காடையர்களைக் கூட எதிர்த்து வாய் திறந்தால் என்ன நடக்கும் என்பது இங்கே உள்ள ஊடகவியலாளருக்குத் தான் தெரியும்.
      துரோகம் பற்றி இப்போது அதிகம் பேசுவோர் மகிந்த சிந்தனையாளர்களகவே உள்ளனர்.

      உங்கள் மகிந்த ஆதரவையும் சேர்த்துத் தான் ட்ரொட்ஸ்கியத்தின் சீரழிவைச் சொல்லுகிறேன்.
      இலங்கையில் சமசமாஜக் கட்சிக்கு ஒரு உருப்படியான்ச் இடதுசாரி வாரிசு இல்லாததற்கும் ட்ரொட்ஸ்கியத்துக்கும் நெருக்கமான உறவு உள்ளதாகவே தெரிகிறது.
      தென்னிலங்கையின் ட்ரொட்ஸ்கியத்தின் வரலாறு இடதுசாரி இயக்கத்தின் சீரழிவினது வரலாறு தான்.
      சான்றுகள் வேண்டுமா? ட்ரொட்ஸ்கியத்தின் பிதாவுடன் தொடங்கலாம்.

  3. ramu says:
    15 years ago

    நான் என்றுமே நவ ரொட்ஸ்கிச அனுதாபியல்ல. இருந்தபோதிலும் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் குழிதோண்டி புதைத்து இலங்கையின் வரலாற்றிலேயே மோசமான காட்டுதர்பார் நடத்திக்கொண்டிருக்கும் மகிந்த கும்பலை எதிர்த்து அரசியல்செய்யக்கூடிய அனைத்து சமூகஜனநாயக சக்திகளினதும் ஒருங்கிணைவு இன்றைய காலத்தின் அவசியமாகும். முதலாவது உலகப்போரின்போது யுத்தத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட முன்னணியை தேசபக்த சகதிக்குள் மூழ்கிப்போன இடதுசாரிகள் முறியடித்து வல்லரசுகளுக்கு துணைநின்றது வரலாறு. அதே போலவே நாசிக்களும். கிடலரும் தம்மை தேசிய சோசலிஸிற்றுக்கள் என்றே அழைத்துக்கொண்டார்கள். இதில் மயங்கிப்போன இடதுசறுகல் வாதிகளும் இருந்தார்கள். இன்று மகிந்தாவின் அடிவருடிகள் மொத்த தமிழ்மக்களும் சுயநலமானவர்கள், மோசமானவ்ர்கள் என்று கூறிவருவதை போலவே நாசிச யேர்மனியிலும் யூதமக்கள் சித்தரிக்கப்பட்டனர். மாக்சிசத்தை எண்ணி மூச்சுவிட்டுவாழ்வதாக பாசாங்குபண்ணும் புண்ணாக்கு ராஜாக்கள் (அவரது ஆசானும் அதில் சேர்த்தியென்ற கிளைக்கதை வேறு) பேரினவாத, ஒடுக்குமுறைஅரசுகளை ஆதரித்துவந்திருப்பதை வரலாறு ஏற்கனவே கண்டிருக்கின்றது. சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுபவனே உண்மையான மாக்சிசபாதையை கடைப்பிடிப்பவனாக இருக்கமுடியும்.

    • chandran.raja says:
      15 years ago

      உண்மையான மாக்ஸியவாதி பொய்யான மாக்ஸியவாதி யார் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள் ராமண்னா! அதை தான் முதலில் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறோம். அதுதான் இன்றை தேவைகளும் கூட.வாசகர்களுக்காக இந்த பணியை தொடர்ந்து செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    • xxx says:
      15 years ago

      CR,
      பொய்யான ஒருவர் உங்களுக்குள் இருப்பது உங்களுக்கே தெரியும். அதை வேறு யாரும் சொல்லத்தான் வேண்டுமா?

  4. THAMILMARAN says:
    15 years ago

    கையை வைக்கட்டும் பார்ப்போம்.உள்ளே அடங்கிக் கிடக்கும் சிங்கத்தை உசுப்பேற்றீ பெரிய எரிமலை வெடிக்கப் போகிறது.

  5. Kumar says:
    15 years ago

    உண்மையிலேயே உங்களது மாக்ஸிஸம்,லெனிஸிஸம்,ரொக்ஸிஸம் போன்றவற்றின் மேலான வாக்குவாதம் எனக்கு கொஞ்சம் வாந்தி எடுக்கவைக்கின்றது.நீங்கள் யாவரும் 2010 ல் தான் வாழ்கின்றீா்களா?? மன்னித்துக்கொள்ளுங்கள்.

    இந்தக்கொள்கைகளை படித்திருந்தால் அது அடிபட்டு உருக்குலைந்து மண்ணோடு கலந்த பின்பும் 1917 ன் ஆரம்பத்தில் வாழ்பவா்கள் போலவோ கியூபாப்புரட்சி இனித்தான் ஆரம்பிக்கப்போகின்றது என்ற ரீதியில் ஆரவாரப்படுவது அா்த்தமற்றதாக தென்படவில்லையா,இந்தக்கொள்கைகள் யாவும் அற்புதமானவை ஆனால் தோற்றுப்போய்விட்டன,கியூபாவில் வயிற்றை நிரப்புவதற்கு முக்கிய தொழிலாக விபச்சாரமே உள்ளது இதை ஏன் கூறுகிறேன் என்றால் முதலாளித்துவத்தின் முன்னால் யாருமே நிற்கமுடியவில்லை அவா்கள் போடும் தடைகளை யாராலும் உடைக்கமுடியவில்லை இறுதியாக வட கொரியா நின்று கிழித்தட்டு விழையாடுகிறது இன்னும் சில வருங்கழுக்குள் அதுவும் முடிந்துவிடும்.

    அரசியல் சந்தா்ப்பவாதத்தில் நிலையான கொள்கையில் நின்று யாரும் எதையும்  சாதிக்கமுடியாது இதுவே யதார்த்தம் இந்தக்கொள்கை வழியில் நின்று சுபீட்சம் அடைந்த நாட்டையோ மக்கள் கூட்டத்தையோ கூறுங்கள் பார்க்கலாம்.

    • xxx says:
      15 years ago

      வாந்தி வந்தால் வேறெங்காவ்து போய் எடுப்பது தானே.
      இந்த இடந் தானா அகப்பட்டது?

      • chandran.raja says:
        15 years ago

        இங்கு குமார் தனது கருத்தை தான் சொன்னார்.அதை ஏற்றுக் கொள்வதும்-மறுப்பதும் வாசகர்களின் பொறுப்பு. இதை xxx எப்படி அணுகுகிறார்? தான் சொல்வது தான் கருத்து. மற்றவர்கள் சொன்னால் அது வாந்தி. இது எப்படி? இப்படி பட்டவர்களே! கருத்துச்சுகந்திரதிற்காக ஆலாப் பறந்தடிக்கிறார்கள்.

        • suganthan says:
          15 years ago

          வாந்திவருகின்றது என்பவரை வாந்தியெடுப்பதற்கு இது உகந்த இடம் அல்ல என்று சுட்டிக்காட்டுவது கருத்துச்சுதந்திர மறுப்பாகாது. ஆனால் விக்கிரமபாகுவை காடையர்களை கொண்டு மகிந்த கும்பல் தாக்குவதனை ஆதரிப்பவர்கள் நிச்சயமாக கருத்துச்சுதந்திர ம்றுப்பாளர்கள்தான்.(ஆசான் சிலவேளை வித்தியாசமான நிலை எடுத்திருக்கக்கூடும்)

    • xxx says:
      15 years ago

      “உண்மையிலேயே உங்களது மாக்ஸிஸம்,லெனிஸிஸம்,ரொக்ஸிஸம் போன்றவற்றின் மேலான வாக்குவாதம் எனக்கு கொஞ்சம் வாந்தி எடுக்கவைக்கின்றது” என்று சொல்லித்தான் செய்தார்.
      அதனால் தான் ராஜபக்ச தாசரே, வேறெங்காவது செய்யலாமே என்று ஆலோசனை சொன்னேன்.
      இதுவும் ஒரு கருத்துத் தான்..

      • Kumar says:
        15 years ago

        நான் விக்கிரமபாகுவிற்கு எதிராக அந்த கருத்தைக்கூறவில்லை நம்மவா்கள் சிலருடய தொடா்ச்சியான மேலே குறிப்பிட்ட கொள்கைகள் மீதான புலம்பலைத்தான் குறிப்பிட்டேன்,உணா்ச்சிவசப்படும்போதுதான் எத்தகய சிறிய மனிதா்கள் சொல் பிரயோகத்தின் திறமையால் தம்மை மேதாவிகள்போல் நிலை நிறுத்திக்கொளகின்றார்கள் என்பது வெளிச்சம்.

        வாசுதேவ நாணயக்கார அன்று எப்படி இருந்தார் இன்று எப்படி உள்ளார் யாராவது பதில் கூறமுடியுமா??.

        சகோதரா் xxx,
        இணையத்தளத்தின் உரிமையாளா்கூட இப்படி கூறி இருப்பாரோ என்பது சந்தேகமே, சிலா் வேண்டிக்கொண்டார்கள் அழகான சொற்பிரயோகத்தால் மோதுங்கள் என்று அதை முயற்சிப்போம். 

      • xxx says:
        15 years ago

        “சிலர் வேண்டிக்கொண்டார்கள் அழகான சொற்பிரயோகத்தால் மோதுங்கள் என்று அதை முயற்சிப்போம். ” என்கிறிர்கள், Kumar.

        ஓம். நல்லது.
        “வாந்தி” போன்ற அழகானா சொற்பிரயோகங்களுடனுமா என்று முதலில் உறுதிப் படுத்துங்கள்.

        • Kumar says:
          15 years ago

          சிலவேளை அந்தச்சொல் கொஞ்சம் பாரமானதாக இருக்கலாம் ஆனால் நான் யாரையும் நேரடியாக குறிப்பிட்டு அதைக்கூறவில்லையாதலால் நான் கவலை கொள்ளவில்லை.

          ஆனால் மற்றவா்கள் இப்படிப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டும் விதத்தை நீா் கடைப்பிடிக்காமல் சிறுபிள்ளைத்தனமாக எழுதிவிட்டீா் என்றே நம்புகிறேன்.

        • xxx says:
          15 years ago

          அச் சொல்லில் பாரமே இல்லை.
          பாமரத்தனமே இருந்தது.
          அது யாரையும் குறித்ததாக நான் கூறவுமில்லை.

          • Kumar says:
            15 years ago

            பரதேசித்தனத்தைவிட பாமரத்தனம் பரவாயில்லை என்றே எண்ணுகிறேன் திருவாளா் 3 x.
            வாந்தி என்ற வார்த்தை அருவருப்பானதாக இருக்கலாம் ஆனால் அனாகரீகமான வார்த்தை என்று எங்கு படித்தனீா்?

            நிச்சயமாக எனது கருத்து உம்மைப்பாதித்துவிட்டது என்றே எண்ணுகிறேன் வேறு எதுவுமில்லை

        • xxx says:
          15 years ago

          ஐயாவின் காடு.
          ஐயா பிடித்த முயல்.
          எத்தனை காலென்று ஐயா வைத்தது தான் கணக்கு.

          என்றோ கேட்ட பாடல் வரி:
          “நீ சொன்னால் காவியம்”

          ஐயா வாழ்க!

  6. aathavan says:
    15 years ago

    விக்கிரமபாகு எந்த”வாதி” என்பதற்கு அப்பால்>தமிழ்மக்களுக்காக தொடர்குரல் கொடுத்து செயற்படுபவர். அதனாலேயே தாக்கப்பட்டார். காத்திரமான இடதுசாரி செயற்பாட்டாளர்களுள் இவரும் ஒருவர்.

    • THAMILMARAN says:
      15 years ago

      இடதுசாரி எப்படி வலதுசாரிகளோடு சேர்ந்தார்?இந்தக் கூட்டு அரசியல் சந்தர்ப்பவாதமில்லையா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...