கடும் குளிரையும் பனிப்பொழிவையும் மீறித் தொடர்ந்து கொண்டிருக்கிறது வால் ஸ்டிரீட் போராட்டம். வால் ஸ்டிரீட் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் திரளின் கோபத்தில் ரோம் தீப்பிடித்தது. சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, ஓய்வூதிய வெட்டு, மக்கள் நலத்திட்டங்கள் ரத்து, பொதுத்துறை விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் கிரீஸ் பற்றி எரிந்தது. எகிப்தின் மக்கள் முபாரக்கின் இராணுவ டாங்குகள், போர் விமானங்களுக்கு அஞ்சவில்லை. முபாரக்கின் கூலிப்படைகள் முதல் குதிரைப்படைகள் வரை அனைத்தையும் எதிர்த்து நின்றார்கள். அன்றைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின் தலைநகரம், இளைஞர்களின் கலகத்தால் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தது.
கண்டங்கள், நாடுகள், நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், குறுக்கு நெடுக்காக உலகம் முழுவதும் மக்களின் கோபத் தீக்கு எண்ணெய் வார்த்திருக்கிறது முதலாளித்துவம். முபாரக்கின் சர்வாதிகாரம், கிரீஸ் அரசின் சிக்கன நடவடிக்கைகள், ஒபாமாவின் வரிகள், வேலையின்மை, கல்வி மருத்துவ மானிய வெட்டு, சுற்றுச்சூழல் அழிவு என்று ஆயிரம் பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டாலும், அவை அனைத்தின் மூல காரணம் உலக முதலாளித்துவம்தான்.
போராடும் மக்களுக்கு இது தெரியாமல் இல்லை. “”முதலாளித்துவம் ஒழிக!, வங்கி முதலாளிகளைக் கைது செய்!” என்று அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்குகிறார்கள். உணவு, உடை, இருப்பிடம், வேலை, பொழுதுபோக்கு, நுகர்பொருட்கள், கல்வி, சுகாதாரம், போலீசு, இராணுவம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். தனி மனித முயற்சியின் மூலம் யாரும் வெற்றி பெற முடியும்மென்ற “அமெரிக்க கனவும்’ அமெரிக்க ஜனநாயகமும் பொய் என்பதை அவர்கள் தம் சொந்த அனுபவத்தில் பட்டு உணர்ந்திருக்கிறார்கள்.
எனினும், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்று ஒப்புக் கொள்வதில் அவர்களுக்குத் தயக்கமிருக்கிறது. தன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவம் வெற்றி பெற முடியவில்லை. எனினும், பல பத்தாண்டுகளாக விடாப்பிடியாக நடத்திய அவதூறுப் பிரச்சாரத்தின் விளைவாக, மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் அது உயிர் வாழ்கிறது. கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், தனிநபர் ஊக்கம் மற்றும் உரிமை மறுப்பு, அதிகாரவர்க்க ஆட்சி என்ற பொய்களை மக்கள் மனதில் நிலைநாட்டி பீதியூட்டியிருக்கிறது. ரசிய, சீன சோசலிசங்களின் சீரழிவு இந்தப் பொய்களுக்கு புனுகு தடவிவிட்டது. அவற்றின் தோல்வியோ ஊனமுற்ற முதலாளித்துவத்துக்கு ஊன்றுகோலாகப் பயன்படுகிறது.
முதலாளித்துவத்தின் பேராசை, கொள்ளை, பித்தலாட்டம், போர்வெறி ஆகியவற்றை அமெரிக்காவின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். எனினும், திட்டவட்டமான மாற்று ஒன்றை முன்வைத்துப் போராடாதவரை, இவையெல்லாம் ஆற்றாமை தோற்றுவிக்கும் புலம்பல்களாகவே முடிகின்றன. சியாட்டிலில் தொடங்கி கடந்த பத்து ஆண்டுகளாக அடுத்தடுத்து பல முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் மேற்குலகில் நடந்த போதும், அவை முன்னேற முடியாமல் தேங்குவதற்கு இதுதான் காரணம். இந்தத் தேக்கம் தொடருமாயின், அது சோர்வையும் அவநம்பிக்கையையுமே மக்களிடம் பரப்பும். அவ்வகையில் அராஜகவாதிகள், பின் நவீனத்துவவாதிகள், டிராட்ஸ்கியவாதிகள், தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட பலரும் முதலாளித்துவத்தின் கையாட்களாக இருந்து மக்களைச் சிதறடிக்கிறார்கள். விரக்திக்குத் தள்ளுகிறார்கள். முதலாளித்துவத்திடம் சரணடையச் செய்கிறார்கள்.
வால் ஸ்டிரீட் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்ப்பதற்குக் காரணம் முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பு. அதனை சோசலிசத்தின் மீதான விருப்பமாக மாற்றுவதன் மூலம்தான் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். ஏகாதிபத்தியமாகவும், மேல்நிலை வல்லரசுகளாகவும், ஒற்றைத்துருவ மேலாதிக்கமாகவும், உலக வர்த்தகக் கழகமாகவும் அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மென்மேலும் மையப்படுத்தப்பட்ட ஒரு கொடிய வன்முறை எந்திரமாக மாறிவரும் உலக முதலாளித்துவத்தை உதிரியான கட்சிகளும், கலவையான முழக்கங்களும், தொளதொளப்பான அமைப்பும் வீழ்த்த முடியாது.
முதலாளித்துவத்துக்கு எதிரான மார்க்சிய லெனினிய சித்தாந்தம், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கட்சி, அதன் தலைமையில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்கள்திரள் இவையில்லாமல் எந்தவொரு நாட்டிலும் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரத்தை வீழ்த்த இயலாது. மக்களின் கோபம் ஒரு சுனாமியைப் போன்ற ஆற்றலுடன் மேலெழுந்தாலும், ஆளும் வர்க்கம் அந்த சுனாமிக்கும் ஒரு வடிகாலைத் தயாரித்துவிடும். வீரம் செறிந்த எகிப்து மக்களின் போராட்டம் எப்படி மடைமாற்றப்பட்டதென்பது நம் கண்முன் தெரியும் சமகாலச் சான்று.
முதலாளித்துவத்துக்கு எதிரான கம்யூனிசத்தின் சித்தாந்தப் போர், போல்ஷ்விக் உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட கட்சி இவ்விரண்டு அவசரத் தேவைகளையும் நிறைவு செய்யக் கோருகின்றன உலகெங்கும் எழுந்து வரும் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள்.
_____________________________________________________
– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2011
இதுவே! மறுக்க படமுடியாத உண்மை.
முதாலித்துவ வர்க்கத்தின் உற்பத்திற்கு பொருள்களுக்கு தொடர்ந்து மேலும் மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியம்.இந்த அவசியம் முதாலித்துவ வர்க்கத்தை புவிபரப்பு முழுவதும் செல்லும் படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக் கொள்ள வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் குடியேற வேண்டியதாககிறது. எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவிக் கொள்ள வேண்டியதாகிறது.
அனைத்து உலகச்சந்தையைப் பயன்படுத்திச் செயல் பவடுத்துதின் மூலம் முதாலித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலக தன்மை பெறச் செய்திருக்கிறது.பிற்போக்கர்கள் கடும் கோபம்
கொள்ளும் படி அது தொழில்களது காலடிக்கு அடியிருந்து அதன் தேசிய அடிநிலத்தை அகற்றியிருக்கிறது.நெடுங் காலமாய் நாட்டிலே இருந்துள்ள தொழில்கள் யாவும் அழிக்கப் பட்டுவிட்டன.. அல்லது நாள்தோறும் அழிக்கப் பட்டு வருகின்றன். புதிய தொழில்களால் அவை அப்புறப்படுத்தப் படுகி´ன்றன.
இந்தப் புதிய தொழில்களை தோன்றச் செய்வது நாகரீகநாடுகள் யாவற்றிக்கும் ஜீவமரணப் பிரச்சனையாகி விடுகின்றன. முன்பிருந்தவைவற்றைப் போல் இந்த புதிய தொழில்கள் உள்ளாட்டு மூலப்பொருள்களை மட்டும் உபயோகிப்பவை அல்ல. தொலைதூர பிரதேசங்களில்லிருந்து தருவிக்கப்பட்ட மூலப்பொருள்களை உபயோகிப்பவை. இவற்றின் உற்பத்திப் பொருள்கள் தாய்நாட்டில் மட்டுமன்றி உலககெங்கும் எடுத்துச் செல்லப்பட்டு எல்லாப் பகுதியிலும் நுகரப்படுகின்றன. (கம்யுனீஸ்கட்சியின் அறிக்கையில் இருந்து..).தொடரும்.
ஆனால் ஈபிடிபி உலகின் பழைய தொழிலைத்தானே யாழில் விரிவு படுத்துகிறது. அதனால் இதுவொரு சரியான இடதுசாரிய நடவடிக்கை என்கிறீர்களா! ஆமெனில் தாங்களும் ஒரு கொம்யூனீஸ்ட்தான்???
தாய்நாட்டு உற்பத்திப் பொருள்களால் பூர்த்தி செய்யப்பட்ட பழைய தேவைகளுக்கு பதில் தொலைதூர நாடுகள் மண்டலங்களது உற்பத்தி பொருள்களால் பூர்த்தி செய்யப்படும் புதிய ´தேவைகள் எழுகின்றன. வட்டாரங்கள் நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்நிறைவுக்கும் பதில் எல்லா திசைகளிலுமான நெருக்கிய தொடர்பும் உலகயளவில் நாடுகளுக்கிடையிலான சார்புடைமையும் ஏற்படுகின்றன.
பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படியே தான் அறிவுத்துறை உற்பத்தியிலும். தனித்தனி நாடுகளுடைய அறிவுதுறைப் படைப்புகள் எல்லாநாடுகளுக்கும் பொது சொத்தாகின்றன.தேசிய ஒருதலைப்பட்ச் பார்வையும் குறுகிய மனப்பாங்கும் மேலும்மேலும் இயலாதனவாகின்றன.
நாட்டளவிலும் மண்டல அளவிலுமான எத்தனையோ பல இலக்கியங்களில் இருந்து ஓர்அனைத்துலக இலக்கியம் உருவாகிறது.
உற்பத்தி கருவிகள் அனைத்தின் அதிவேக அபிவிருத்தியின் மூலமும் போக்குவரத்து சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதாலித்துவவர்க்கம் எல்லா தேங்களையும் மிகவும் அநாகரிக்க கட்டத்தில் இருக்கும் தேசங்ககளையும் கூட நாகரீக வட்டத்திக்குள் இழுத்து விடுகிறது. தனது பண்டங்களின் மலிவான விலைகளை அது
சக்திவாய்ந்த பீரங்கியாகக் கொண்டு சீனமதிலை ஒத்த எல்லாத் தடைமதில்களையும் தகர்த்திடுகிறது; அநாரிக கட்டத்தில் இருப்போருக்கு அந்நியர்பால் உள்ள முரட்டு பிடிவாத வெறுப்பைப் பணிய வைக்கிறது. ஏற்காவிடில் அழியவே நேருமென்கிற நிர்பந்ததின் மூலம் அது எல்லா தேசங்களையும் முதாலித்தவப் பொருள்ளுற்பத்தி முறையை ஏற்கச் செய்கிறது; நாகரீகம் என்பதாய்த் தான் கூறிக்கொள்வதை தழுவும் படி அதாவது முதாலித்தவ மயமாகும் படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது.
சுருங்க கூறுமிடத்து அப்படியே தன்னை உரித்து வைத்தாற்
போன்றதோர் உலகைப் படைத்திடுகிறது அது. ( வளரும்)
முதாலித்தவ வர்க்கம் நாட்டுபுறத்தை நகரங்களது ஆட்சிக்கு கீழ்ப்பட செய்துள்ளது.மாபெரும் நகரங்களை அது உதிதெழ வைத்திருக்கிறது; கிராம மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகரமக்கள் தொகையை வெகுவாக அதிகரிக்கச் செய்துள்ளது; இவ்விதம் மக்களில் ஒரு கணிசமான பகுதியோரை கிராம வாழ்கையின் மடமையில்லிருந்து மீட்டிருக்கிறது.எப்படி அது நாட்டுபுறத்தை நகரங்களை சார்ந்திருக்க செய்துள்ளதோ அதேபோல அநாகரிகநிலையிலும் குறைநாகரிக நிலையிலும் உள்ளநாடுகளை நாகரிகநாடுகளையும் விவசாயநாடுகளை முதலாளிகளது நாடுகளையும் கிழக்கு மேற்குநாடுகளையும் சார்ந்திருக்க செய்திருக்கிறது.
மக்கள்தொகை உற்பத்திசாதனங்கள் சொத்து இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதாலித்துவ வர்க்கம் மேலும்மேலும் முடிவு கட்டிவருகிறது.மக்கள் தொகையை அது அடர்த்தி திரட்சி பெறச் செய்திருக்கிறது.உற்பத்தி சாதனங்களை மையப் படுத்தியிருக்கிறது.சொத்துகளை ஒரு சிலர் கையில் குவியவைத்திருக்கிறது.இதன் தவிர்கவெண்ணாத விளைவு என்னவெனில் அரசியல் அதிகாரம் மையப் படுத்தப்பட்டது. தனித்தனி நலன்களும் சட்டங்களும் அரசாங்கங்களும் வரிவிதிப்பு முறைகளும் கொண்டனவாய்ச் சுயேச்சையாகவோ அல்லது தளர்ந்த இணைப்புடனோ இருந்த
மாநிலங்கள் ஒரே அரசாங்கமாகவும் ஒரே சட்டத்தொகுப்பையும் தேச அளவிலான ஒரே வர்க்க நலன்களையும் ஒரேதேச எல்லையும் ஒரே சுங்கவரி முறையும் கொண்ட ஒரேதேசமாய் ஒருசேர இணைக்கப் பட்டன……..
முதாலித்துவ வர்க்கம் ஒருநுற்றாண்டு கூட நிறைவுறாத தன் ஆட்சிக்காலத்தில் ( வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இது 1847-48 காலப் பகுதியில் எழுதப்பட்டு வெளியிடப் பட்டது) இதற்கு முந்திய எல்லா தலைமுறைகளுமாய் சேர்த்து உருவாக்கியதைக் காட்டிலும் மலைப்பு தட்டுபடியான பிரமாண்டமான உற்பத்திசக்திகளை படைத்தமைத்திருக்கிறது.இயற்கை சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல்.இயந்திரசாதனங்கள் தொழில்துறையிலும் விவசாயத்திலும் இரசாயணத்தை பயன் படுத்தல் நீராவிகப்பல் போக்குவரத்து ரயில்பாதைகள் மின்விசை தந்தி முழுமுழு கண்டங்களையும் திருத்தி சாகுபடி செப்பனிடுதல் ஆறுகளை கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றனவாய் ஒழுங்குசெய்தல் மனிதன் காலடியெடுத்து வைத்திராத இடங்களில் மாயவித்தை புரிந்தாற் போல் பெரும் பெரும் தொகுதியிலான மக்களை குடியேற்றுவித்தல்- இம்மாதிரியான பொருளுற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் சயனம் புரியுமென இதற்கு முந்திய எந்த றுற்றாண்டாவது கனவிலும் நினைத்திருக்க முடியுமா?.. வளரும்.
ஆக நாம் காண்பது என்னவெனில்: முதாலித்துவ வர்க்கம் உருபெற்று எழுவதற்கு அடிப்படையாய் இருந்த பொருளுற்பத்தி பரிவர்த்தனை சாதனங்கள் பிரவுத்துவ சமுதாயத்தில் ஜனித்தவை.இந்த பொருளுற்பத்தி பரிவர்த்தனை சாதனங்களது வளர்ச்சியின் குறிப்பட்ட ஒரு கட்டத்தில் பிரபுத்துவ சமுதாயத்தின் பொருளுற்பத்திn பரிவர்த்தனை உறவுகள் விவசாயத்திற்கும் பட்டறை தொழிலிக்குமான ஒழுங்கமைப்பு -சுருங்கச் சொல்வதெனில்
பிரபுத்துவ சொத்துடமை வளர்ச்சியுற்றுவிட்ட உற்பத்தி ஒவ்வாதனவாயின: அவை பொருள் உற்பத்திக்குப் பூட்டப்பட்ட கால்விலங்காய் மாறின.அதன் விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்தது. அவை உடைத்தெறியப்பட்டன.
அவற்றின் இடத்தில் தடையில்லா போட்டியும் அத்துடன்கூடாவே அதற்கு தகமைந்த சமூகஅரசியல் அமைப்பும் முதாலித்தவ பொருளாதார அரசியல் ஆதிக்கமும்
வந்தமர்ந்து கொண்டன.
இதை போன்றதோர் இயக்கம் இப்போது நம் கண்ணெதிரே நடைபெற்று வருகிறது.முதாலித்துவ பொருள் உற்பத்திமுறை பரிவர்த்தனை உறவுகளையும் முதாலித்துவ சொத்துடமை உறவுகளையும் கொண்டதாகிய நவீன முதாலித்துவ சமுதாலம் மாயவித்தை புரிந்து தோற்றிவித்தால் போல் இவ்வளவு பொருள்ளுற்பத்தி சாதனங்களையும் பரிவர்த்தனை சாதனங்களையும் தோற்றிவித்திருக்கும் இச்சமுதாயம் பாதாள உலகத்திலிருந்து தனது மந்திர வலிமையினால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற்போன மந்திரவாதியின் நிலையில் இருக்க காண்கிறோம்.கடந்த சில பத்தாண்டுகளது தொழல் வாணிப வரலாறே நவீன பொருள்யுற்பத்தி சக்திகள் நவீனபொருள்யுற்பத்தி உறவுகளை எதிர்த்து புரிந்திடும் கலகத்தின் வரலாறுதான்.இதை தெளிவு படுத்த காலஅலைவட்ட முறையில் திரும்பதிரும்ப எழும்வாணிப நெருக்கடியை குறிப்பிட்டால் போதும்-திரும்பதிரும்ப எழுந்து ஒவ்வொரு தரமும் முன்னிலும் அபாயகரமான முறையில் இந்நெருக்கடிகள் முதாலித்துவ சமுதாயம் அனைத்தின் நிலவுதலை ஆட்சேபிபக் கேள்வி குறியாக்குரியதாக்கின்றன.
இந்த வாணிபநெருக்கடியின் போது ஒவ்வொருதரமும் இருப்பில்லுள்ள உற்பத்திபொருள்களில் மட்டுமன்றி ஏற்கனவே உருவாக்கபட்ட உற்பத்திசக்திகளும் அழிக்கப்படுகின்றன.இந்த நெருக்கடியின் போது இந்தற்கு முந்திய எல்லா சகாப்தத்திலும் அடிமுட்டாள்தனமான ஒரு கொள்ளைநோய் மூண்டுவிடுகிறது.அமிதஉற்பத்தி என்னும் கொள்ளைநோய்-மூண்டுவிடுகிறது. திடுமென சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்பட்டு சிறுதுகாலத்திற்கு காட்டுமிராண்டி நிலையில் விடக் காண்கிறோம்.பெரும்பஞ்சம் சர்வநாச முழுநிறைப்போர் ஏற்பட்டு வாழ்கைத் தேவைப் பொருள்கள் கிடைக்காத படி செய்துவிட்டால் போலாகிறது; தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டு விட்டதாக தோன்றுகிறது.- ஏன் இப்படி?
ஏனென்றல் நாரீகம் மிதமிஞ்சி விட்டது.வாழ்க்கை தேவைப் பொருள்கள் அளவுக்கு மீறிவிட்டன.தொழிலும் வாணிபமும் எல்லை கடந்தவிட்டன.சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்திசக்திகள் முதாலித்துவ சொத்துடமை உறவுகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன.
….பொருள் உற்பத்திசக்திகள் இந்த தடைகளை கடக்க முற்பட்டதும் அவை முதாலித்துவசமுதாயம் முழுமையிலும் குழப்பம் உண்டாக்குக்குகின்றன. முதாலித்தவ சொத்துடைமை நிலவுவதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன.அவை உற்பத்தி செல்வத்திற்கு தம்முள் இடம் போதாபடி முதாலித்துவ சமூக உறவுகள் குறுகலாகியிருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதாலித்துவ வர்க்கம் எப்படி சமாளிக்கின்றன?. ஒரு புறத்தில் வலுகட்டாயமாக உற்பத்திசக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும் மறுபுறத்தில் புதிய சந்தைகளை வென்று கைப்பற்றுவதன்மூலமும் பழைய சந்தைகளை இன்னும் அழுத்திப் பிழிவதன் மூலமும்-அதாவது மேலும் விரிவாக மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழிகோலுவதன் மூலமும் நெருக்கடிகளை
தடுப்பதற்கான வழிமுறைகளை குறைப்பதன் மூலமும்.
எந்த ஆயுதத்தை கொண்டு முதாலித்துவ வர்க்கம் பிரபுத்துவத்தை வீழ்த்திற்றே அதே ஆயுதங்கள் இப்பொழுது முதாலித்தவ வர்க்கத்திற்கெதிராக திருப்பப் படுகின்றன.
முதாலித்தவ வர்க்கம் தன்னை அழித்தொழிக்க போகும் ஆயுதங்களை வார்த்தெடுத்திருப்பதோடு அன்னியில் அந்த ஆயுதங்களை பிரயோகிப்பதற்குரிய ஆட்களையும் பாட்டாளிகளாகிய நவீன தொழிலாள வர்க்கத்தையும் தோன்றியெழ செய்திருக்கிறது.
எந்த அளவுக்கு முதாலித்துவவர்க்கம் அதாவது மூலதனம் வளர்கிறதோ பாட்டாளிவர்கம்மாகிய நவீனதொழிலாள வர்கம்கமும் அதே அளவுக்கு வளர்கிறது.இந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை தேடிக்கொள்ள முடிகிறவரை தான் வாழமுடியும்.தமது உழைப்பை மூலதனத்தைப் பெருகச செய்யும் வரை தான் வேலை தேடிக் கொள்ள முடியும். சிறுகச்சிறுக தம்மை தாமே விலைக்கு விற்க வேண்டிய தொழிலாளர்கள் ஏனைய விற்பனைப் பொருள்களையும் போல் தாமும் ஒரு பரிவர்த்தனை பண்டமாகவே இருக்கிறார்கள்; ;ஆகவே போட்டா போட்டியின் எல்லா அசம்பாவிதங்களுக்கும் சந்தையின் ஏற்றயிறக்க அலைவுகளுக்கும் இலக்காகிறார்கள்.