தவணை முறையில் சுடலை ஞானம் பிறக்கும் இலங்கை அரச அமைச்சர்களுள் வாசுதேவ நாணயக்கார என்ற வில்லத்தனமான கோமாளி அமைச்சரும் ஒருவர். அரசாங்கத்துடன் ஒட்டிக்கொள்வதற்காக ஆயிரம் காரணங்களை சட்டைப்பைக்குள் வைத்திருக்கும் இந்தச் சட்டம்பிக்கு அவ்வப்போது மகிந்த அரசு சில தவறுகள் செய்வதாகத் தோன்றும்.
பொதுபல சேனா தனது வெறியாட்டத்தை நடத்தி முடித்திருக்கும் வேளையில் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
ஞானசார தேரருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.
அளுத்கம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பேற்றை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வாசுதேவ நாணயக்காரவின் எஜமான்களில் ஒருவரான கோட்டாபய ராஜபக்ச தோற்றுவித்து வளர்த்து விழா நடத்திய அமைப்பு அரசாங்கதின் கட்டளைப்படி நடத்தும் வெறியாட்டத்தை நடத்துவதே அரசாங்கம் என்பதை வாசுதேவ வசதியாக மறந்துவிடுகிறார்