Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?(வசன கவிதை) :அவதானி

இனியொரு... by இனியொரு...
01/23/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
10
Home பிரதான பதிவுகள் | Principle posts

 அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்தினாலும் எதுவுமே மாறாது என்று அவர்கள் எல்லாருக்கும் தெரியும். என்றாலும் அந்தக் கடதாசி பெறுமதி மிக்கது என்பதால் அதை வீணாக்கக் கூடாது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அதை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்ல மாட்டார்கள். பயன்படுத்தத் தெரியவில்லை என்று உங்கள் பாட்டில் வீட்டில் இருந்து விடாதீர்கள் என்றும் எப்படியாவது சரியாகப் பயன்படுத்தும் படியுமே அவர்கள் சொல்லுகிறார்கள். அதை விடவும், எவரேன் பயன்படுத்த மாட்டார் என்று அறியும் எவரும் அதை எடுத்துப் பயன்படுத்தவும் இயலும் என்பதால் அந்தக் கடதாசியை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆராயத் தொடங்கினேன்.

சில கேள்விகளுக்குச் சரியான ஒரு மறுமொழி மட்டுமே உண்டு. சில கேள்விகளுக்குச் சரியான மறுமொழி ஒன்றுமேயில்லை. சில கேள்விகட்குச் சரியான மறுமொழிகள் பல உள்ளன. வாக்குச் சீட்டைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்குப் பல மறுமொழிகள் உள்ளன. அந்தக் கடதாசியில் உள்ள சதுரமான சிறிய பெட்டிகளில் ஒன்றிற்குள் பெருக்கல் அடையாளம் இடுவதோ இலக்கம் எதையாவது எழுதுவதோ தான் சரியான மறுமொழி என்று சொல்கிற பலர் எந்தப் பெட்டி என்று சொல்லுவதில்லை. சொல்லுகிறவர்கள் ஆளுக்காள் வேறு விதமாகச் சொல்லுகிறார்கள். எனவே அவற்றை விடச் சரியான வேறு மறுமொழிகளும் உள்ளன என்று உறுதியாக நம்புகிறேன். வரிசையில் நின்று உங்கள் கைவிரலை அசிங்கப்படுத்தி வாங்குகிற அந்த வாக்குக் கடதாசியை வீணாக்கலாமோ? எனவே தான் வேறு நல்ல பயன்பாடுகளைச் சொல்லுகிறேன். தெரிவு உங்களுடையது.

தாள் சதுரமாக இருந்தால் அதை மடித்துக் காகிதக் கப்பல், பறவை, தவளை, கடகம், குதிரை என்று பலவுஞ் செய்யலாம். சற்று நீள்சதுரமாக இருந்தால் றொக்கற் செய்து வீசி விளையாடலாம். இன்னும் நீளம் என்றால் நீளத் தோணி ஒன்று செய்து தண்ணீரில் விடலாம். தாளைக் கசக்கிப் பந்தாக்கி வீசி விளையாடலாம். கெட்டியான பற்களும் வாயில் உமிழ்நீரும் இருந்தால் வாயிற் போட்டுச் சப்பி உருண்டையாக்கி ஒரு தேர்தல் சுவரொட்டி மீது எறியலாம். தெருவிற் கிடக்கும் கோழி மலத்தையோ நாய் மலத்தையோ எடுத்து ஓரமாகப் போடப் பாவிக்கலாம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். வீட்டுக்குக் கொண்டு செல்லவும் முடியாது. கிழித்துக் குப்பைத் தொட்டியில் இடலாம். கிழிக்க விடமாட்டார்களென்றால் கிழிக்காமலே இடலாம். ஆனாற் குப்பைத் தொட்டியெதுவும் அயலில் இராது. கோவில் உண்டியல் மாதிரி ஒரு பெட்டி. அதிலுள்ள நீண்ட துவாரத்தின் வழியே தான் போடலாம். நேரமிருந்தால் எல்லாச் சதுரங்களிலும் பெருக்கல் அடையாளமிடலாம். அல்லது தாளுக்குக் குறுக்காகப் பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் அடையாளம் ஒன்றை இடலாம். ஒரு அரிவாளும் சம்மட்டியும் வரையலாம். நீளமாக ஒரு கவிதை எழுதலாம். வாக்குகளை எண்ணுவோர் தேநீர் பருகும்போது படிக்கும் வாய்ப்புண்டு.

பட்டியலில் உள்ள எதுவுமே உங்கள் விருப்பிற்குரியதல்ல என்று சொல்ல அக் கடதாசியைப் பயன்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன. நிச்சயமாக வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்தும் தெரிவு உங்களுடையது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நாட்டின் நிலைமைகள் ஜனநாயகத்திற்கு ஆபத்தான சூழலைத் தோற்றுவித்துள்ளது : சந்திரிக்கா

Comments 10

  1. thamilmaran says:
    16 years ago

    எல்லோருமே ஈரோச் ரவி போல் எழுத ஆசைப்பட்டால் எங்களால் எப்படி விளங்கிக் கொள்ள்ல் முடியும்.புரிகிறமாதிரி எழுதுங்கள். இங்கிலாந்து ஆங்கிலமே மாறீ விட்டதுநமது தமிழும் மாற வேண்டாமா?

  2. Yoga says:
    16 years ago

    என்னது?எழுதியிருக்கிறாரா?ஈரோஸ் ரவியா?யாரது?என்னங்க குழப்புறீங்க!மேலே தலைப்பு பாத்தீங்களா?வசன கவிதை! நல்லா முத்தி அங்கொடை(இப்போதும் இருக்கிறதா?)க்கு போகவேண்டிய கேஸ்!!இங்கிலாந்திலை ஆங்கிலம் மட்டுமா மாறியிருக்குது?நீங்க வேற இப்பிடி எழுத அவர் இதையே ஆங்கிலத்தில மொழி பெயர்த்து எழுதி உங்களையும் அங்கொடைக் கேசா மாத்திப் போடுவார்!!!பாத்து!!!!!

  3. garammasala says:
    16 years ago

    “உங்களையும் அங்கொடைக் கேசா மாத்திப் போடுவார்” – யோகா சனம்
    சம்பந்தன் சொல்லறது சரி என்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் ஏற்கெனவே ‘யோகா சனம்’ கேசுகள் தான்.

  4. Yoga says:
    16 years ago

    அப்புக்கு விளங்கீட்டுது! கவலையே இல்ல!!அந்த யோகாவோட சனம் சேத்திருக்கிறியள் பாருங்கோ,ரியலி சூப்பர்!!!உந்த மூள ஆருக்கு வரும்?

    • Yohgan says:
      16 years ago

      ரியலி சூப்பர்! யோகாவே நீங்கள் மேலே எழுதியதைப் பாருங்கோ!! அதென்னுங்கோ …காவோட சனம்? அடைப்புக்குறிகள் பாவிக்கும் உங்களுக்குத்தானுங்க அந்த மூளை வரும். நீங்கள் பலே கில்லாடிங்கோ -யோகன்-

    • xxx says:
      16 years ago

      அப்புவுக்கு விளங்கிச்சோ ஆச்சிக்கு விளங்கிச்சோ.
      தமிழ்ச் சனத்துக்குச் சம்பந்தர் ஐயாவையுமெல்லோ நல்லா விளங்கிப் போச்சுது.
      பாவம் எங்கடை “யோகாசனம் கேஸ்”. அதுக்கு லேசிலை எதுவும் வழளங்காது.

    • garammasala says:
      16 years ago

      சும்ம துன்புறுத்தாதையுங்கோ xxx.
      ஐயாவும் அடியாளும் வலும் நொந்து போயிருக்கினம்.

  5. Yohgan says:
    16 years ago

    சம்பந்தர் ஐயாவின் அடுத்த தேர்தல் வோட்டுக்கான கூட்டு ஜாதிக கெல உறுமய அல்லது சிகல உறுமயவாக இருக்குமோ? ஆச்சரியப்படுவதற்கில்லை!!

  6. thamilmaran says:
    16 years ago

    தொண்டர் திலகங்கள் குண்டுக்ள் வீசி மக்கலை வோட்டுப் போடவே அனுமதிக்கவில்லை இதில் மக்கள் வாக்களீக்கவே இல்லை.இது தொண்டர் திலகங்க்ளீன் சுத்து மாத்துத் தேர்தல் இங்கே சுதந்திரம் என்பது ஏட்டளவில் மட்டுமே.

  7. Shiva says:
    16 years ago

    thamilmaran
    உளறாமை ஊரிலை வந்து விசாரியும்.
    வன்னியிலையும் அதே கதை தான்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...