இலங்கை அரசபடைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவினர்களுக்காகப் போராட்டம் நடத்திய ஜெயகுமாரியையும் அவரது மகளையுன் குற்றம் சுமத்தாமல் பேரினவாத அரசு அடைத்துவைத்திருக்கிறது. பாசிச அரசின் இச்செயலுக்கு எதிராக ஒரு சிலர் குரல்கள் மட்டுமே உதிரிகளாக எழுகின்றன.
கைதுக்குக் காரணம் கோரி அமைதி ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட வவுனியா மாவட்டப் பிரஜைகள் குழுத் தலைவர் மீது இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவு கோளைத்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவிருந்த நிலையிலேயே இந்த கொலை முயற்சி தாக்குதல் அவர் மீது நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது, 08.10.2014 இரவு அன்று நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலின் காணொளி காட்சி!