தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் செம்மொழி விருந்து 600 கோடி ரூபாய் செலவில் கோவையில் துவங்கியுள்ளது. பல ஈழ அறிஞர்களும் இந்த மாபலி விருந்தில் கை நனைக்க கோவை சென்றுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களின் உடல் நிலை கவலைக்கிடமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டும் அவர்கள் குறித்த எந்த விதமான செய்தியையும் கருணாநிதியின் ஊடகங்களோ ஆளும் வர்க்க நீதிமன்றங்களோ பேசாமல் தவிரிக்கின்றன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யபப்ட்ட மனுவில், ” வழக்கறிஞர்களைப்
பார்வையிட வழக்கறிஞர்கள் செல்ல அனுமதி கேட்டோம். சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடருபவர்களுக்கு அனுமதி அளிக்கச் சிறை விதிகளில் இடமில்லை என சிறை கண்காணிப்பாளர் அனுமதி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அவர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் உதவி அளிக்கவும், அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வழக்கறிஞர்கள் குழுவுக்கு அனுமதி அளிக்கவேண்டும் அல்லது வழக்கறிஞர்கள் ஆணையரையோ, முடியாத பட்சத்தில் மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்றப் பதிவாளர் ஆகியோரை ஆணையராக நியமித்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சொக்கலிங்கம், துரைசாமி ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் ஏ.கே.ராமசாமி அதற்கு பதிலலித்த அரசு கூடுதல் பிளீடர் ராஜசேகரன், மத்திய சிறையில் இருந்த வழக்கறிஞர்கள் மு.ராஜேந்திரன், ம.பா.நடராஜன், கு.ஞா.பகத்சிங், அ.விஜயபாரதி, பி.ஏ.கே.ராஜா ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிகிச்சையை ஏற்க மறுத்து வருகின்றனர் என்றார். இந்தநிலையில், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் நியமித்தும் பயன் இல்லை. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். எனவே,
மருத்துவமனையில் உள்ளவர்கள் நிலை குறித்து மதுரை மருத்துவக் கல்லூரி டீனும், சிறையில் உள்ள எழிலரசு குறித்து சிறை கண்காணிப்பாளரும் புதன்கிழமை காலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது டிவிஷன் பெஞ்ச்.
செய்தியில் சிவத்தம்பி பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் தலைப்பில் சிவத்தம்பி வருகிறார். ஏன் இந்தச் சில்மிசம்? யாரைத் திருப்திப்படுத்த? ஆனானப்பட்ட புலியெல்லாம் இலங்கை அரசாங்கத்தோடை போய் படுத்துக் கிடக்க வெறுமனே சிவத்தம்பியை காய்வதில் என்ன பயன்? சரியோ தவறோ சிவத்தம்பிக்காவது கொஞ்சம் சமூகம் பற்றிய சிந்தனை இருக்கிறது. மற்ற பெரும்பாலான பேராசிரியர் மார் சமூகம் குறித்து ஏதாவுது அக்கறைப்பட்டிருப்பார்களா? (சில விதிவிலக்குகள் தவிர)
கடந்த பத்து வருசமாக இலங்கை அரசாங்கம் குண்டு போட்டு அழிக்கையுக்கை நீங்கள் என்ன கலியாணம் செய்யாமல் பிள்ளைப் பெறாமல் இருந்தனீரங்களே?
புலிகளை ஆதரிக்கும் யாரும் “ஆனானப்பட்ட புலியெல்லாம் ” என்று சொல்வதில்லை. புலிகள் மட்டுமே போராடப் பிறந்தவர்கள் என்று முடிவு செய்வது உங்களைப் போன்றவர்கள்தாம். புலிகளின் தவறுகளையும் தட்டிக்கேட்போம்.
//சிவத்தம்பிக்காவது கொஞ்சம் சமூகம் பற்றிய சிந்தனை இருக்கிறது//
மனிதகுல விரோதியோடு கூத்தடிக்கும் சிவதம்பிக்கு சமூகசிந்தனையா?
//கடந்த பத்து வருசமாக இலங்கை அரசாங்கம் குண்டு போட்டு அழிக்கையுக்கை நீங்கள் என்ன கலியாணம் செய்யாமல் பிள்ளைப் பெறாமல் இருந்தனீரங்களே? //
ஒருவன் தன்னுடைய வாழ்க்கைப் பயனத்தைத் தொடர்வதையும் துரோகிகளுக்கு துணை போவதையும் சேர்த்து குழப்பிக்கொள்ளும்படிதான் இருக்கிறது உன் அறிவு.
சிவத்தம்பியின் தடுமாற்றங்கள் இலங்கைப் புகழ் பெற்றவை. (கீழுள்ளவை சில மாதிரிகள்).
சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்டுக்களோடு (அவர்களுடைய பல துரோகங்களின் போதும்) ஒட்டிநின்றார்.
அவர்களை விடாமலே 1980களில் தமிழ்த் தேசியவாததுடன் நட்புச் சைகைகள். பிறகு ஈரொஸுடன் நட்பு.
பிறகு புலிகளுடன் மிகுந்தநெருக்கம். (முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி 1997இல் கொழும்பு வரும் வரை மூச்சே இல்லை)
தெற்கு வந்த போது முஸ்லிம்களை வெளியேற்றியதற்குக் கண்டனம். பிறகு பின்வாங்கல்.
2008 வரை விடுதலப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா எல்லாரையும் சமாளித்துப் போகும் போக்கு.
இதற்கிடையில் தமிழக அரசுடன் நெருக்கம். (1995 தமிழராய்ச்சி மாநாட்டில் பங்கு பற்றாமல் மறித்த ஜெயலலிதாவை நெருங்க வாய்ப்பிருந்ததோ தெரியாது).
இப்போது ஏசுவோருக்கு முந்தியநிலைப்பாட்டுக் குழப்பங்கள் பற்றி விமர்சனங்கள் இல்லையா?
உப்பிமில்லை, ”ஊலர்தல் காய்தலுமில்லை”
இன்னும் இருக்குது நேரம், ….
யதார்த்தத்தை நடைமுறை முரணில் அளக்கும் நேரம்….
‘
ரூபன்
240610
புலிகள் மட்டும் போராடப் பிறந்தவர்கள் என்று நான் சொல்லவில்லையே. செய்தியில் இல்லாத விடயம் தலைப்பில் ஏன் வந்தது அந்த சில்மிசம் ஏன? யாரைக் குளிர்விக்க? என்று கேட்டது நல்ல சுட்டுப் போட்டுது போல இருக்குது.
அதை வெளிக்காட்டுது ஒருமையின் வந்த உங்கள் பதில்.
கலியாணம் செய்யாமல் பிள்ளை பெறாமல் என்பது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதல்ல. அதில் கொண்டாட்டமும் இருந்து தான் வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள அதிக அறிவு அவசியமில்லை. புல் பெயர்நாட்டு கொண்டாட்டங்கள் பற்றி அறியாதவருக்கு வேண்டுமானால் சொல்லாம்.
சிவத்தம்பி விமா;சனத்தற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால் நீங்கள் இந்தச் செய்தியில் குசும்பு செய்கிறீர்கள் என்றேன். ஆசிரியருக்கே புரிந்து பேசாமலிருக்கும் போது முத்துசாமிக்கு ஏன் இந்தக் கோள்வம். ஐயா முததுசாமி செய்தியில் சிவத்தம்பி பற்றி ஏதாவது வருகிறது என்று திரும்பவும் ஒருமுறை பார்த்திட்டு பதில் எழுதுங்கோ.
//புலிகள் மட்டும் போராடப் பிறந்தவர்கள் என்று நான் சொல்லவில்லையே.// மதன், ஆனானப்பட்ட புலியெல்லாம் என்று ஏன் புலிகள்மேல் பாரத்தை ஏற்றுகிறீர் என்றுதான் கேட்கிறேன்.
//செய்தியில் இல்லாத விடயம் தலைப்பில் ஏன் வந்தது அந்த சில்மிசம் ஏன? யாரைக் குளிர்விக்க? //
தலைப்புக்கும் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? தலைப்பில் உள்ள விடயத்தைப் பற்றியும் விரிவாக எழுதினால்தான் உமக்கு புரியுமா?
//ஆசிரியருக்கே புரிந்து பேசாமலிருக்கும் போது //ஆசிரியர் பேசவில்லை என்பதுமட்டும்தான் உமக்கும் எனக்கும் தெரியும். அவர் புரிந்து பேசாமலிருந்தார் என்பது கற்பனை.ஆனானப்பட்டவிலிருந்து ஆசிரியருக்கே என்பதுவரை உமது சொல்லாடல்கள் தொடர்கிறது.
செல்லையா முத்துசாமிக்கு வந்த கோள்வத்திலை செய்தியைக்கூடப் படிக்காமல் அவர் ஒருமையிலேயே என் அறிவை அளந்திருக்கிறார். இணையம் என்றடியாலை இப்பிடி நேரிலை என்றால் கை> கத்தி> பொல்லு துவக்கு……?
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குட்டிப் புலி இருக்கு என்று எங்கோ படித்த ஞாபகம். வெளியாலை திட்ட முதல் உங்களுக்கு உள்ளுக்கை ஒருக்கால் எட்டிப்பாருங்கோ.
பிறகு பார்ப்பம் மிச்சத்தை..