கடந்த மாதம் சிறீலங்கா அரசாங்கத்தின் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்திருந்தார். அதன் பின்னராக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்காக அலுவலகங்களையும், தளங்களையும் நிரந்தரமாக்குவதற்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக காணிச் சுவீகரிப்புச் சட்டத்தில் பிரிவு 2 ன் கீழான அறிவித்தல்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வலிகாமம் வடக்கு உட்பட குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்து கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் 30000 திற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை தோன்றியுள்ளது. மேற்படி காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய அனைத்து மாவட்டங்களில் தீவிரமாக நடைபெறுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இராணுவக் குறைப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபடுவது போல பாசாங்கு காட்டிவரும் சிறீலங்கா அரசு மறுபுறத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நில அபகரிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இந் நிலச் சுவீகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்தக் கோரியும், இடம்பெயர்ந்து வாழும் வலி வடக்கு உட்பட்ட அனைத்து மக்களையும் உடன் மீள் குடியமர அனுமதிக்க கோரியும், இவ்விடயத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலிவடக்கு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களது வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இடம்:- யாழ் மாவட்ட செயலகம் (கச்சேரி) முன்பாக.
திகதி:- 24-04-2013 (புதன்கிழமை)
நேரம்:- மு.ப 11.00 மணி – பி.ப 1.00 மணிவரை
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராஜா கNஐந்திரன்
பொதுச் செயலாளர்
That looks like lawyer Gajendrakumar Ponnambalam. He is indeed carrying a great torch forward. I rarely venture out of my neighbourhood at Batticaloa.