தொல். திருமாவளவன் அறிவிப்பு.
தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களை 19Š02Š2010 மாலை 5 மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தோம். “தாட்கோ‘ மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ததற்காகவும், ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் “கலைஞர் வீட்டுவசதித் திட்டம்‘ என்கிற பெயரில் 21 லட்சம் காரை வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்புச் செய்ததற்கும், அரசுப் புறம்போக்கு நிலத்தில் மூன்றாண்டுகளாகக் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பித்ததற்காகவும், மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். அத்துடன் காவல்துறையின் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான வயது வரம்பை 33லிருந்து 35ஆகத் தளத்திட வேண்டும் என்றும், ஐ.ஐ.டி. போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் மாணவர்களுக்கென “முன்பயிற்சித் திட்டத்தை‘ தாட்கோ மூலம் நடத்திட வேண்டுமெனவும், கிராம உதவியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்களில் மிச்சமுள்ள 60 பேருக்கு வயது வரம்பைத் தளர்த்தி வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விமர்சனம் செய்துள்ளதை பொருட்படுத்தாமல் உள்ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டோம்.
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010ஆம் ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்‘ விருதினை வழங்குவதெனும் எமது முடிவுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மகிழ்வுடன் இசைவளித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளின் போது “அம்பேத்கர் சுடர்‘, “பெரியார் ஒளி‘, “அயோத்திதாசர் ஆதவன்‘, “காயிதேமில்லத் பிறை‘, “காமராசர் கதிர்‘, “செம்மொழி ஞாயிறு‘ என்னும் விருதுகளைப் பொற்கிழியுடன் சமூக நலத்தொண்டர்களுக்கு வழங்கி வருகிறோம். இத்தகைய விருதுகளில் அம்பேத்கர் சுடர் விருதினை இந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வழங்குவதில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமிதம் கொள்கிறோம்.
ஏப்ரல் 14ஆம் நாள் சென்னையில் நடைபெறவுள்ள மகத்தான பெருவிழாவில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மற்ற விருதுகள் பெறுவோர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
பொறுக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருந்தேன் கிடைத்துவிட்டது. திருமாவளவன் = பொறுக்கி.
கந்தசாமி சரியாகவே சொல்கிறார். கலைஜருக்கு காலை வாரிடக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒருவர் இந்த திருமாவலவன்.சோப்பு போடுவதில் இவருக்கு நிகர் இவரே.