கடந்த ஞாயிறு 19.02 . 12 அன்று ஸ்பயினில் வரலாறு கண்டிராத மிகப்பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. 2 மில்லியன் மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் அதன் அமைப்பாளர்களே எதிர்பாராத அளவிற்கு அதிகமானதாகும். பொருளாதார நெருக்கடிக்கு உட்படிருக்கும் ஸ்பெயினில் தொழிலாளர் நலச் சட்டங்களை மறுசீரமைப்பதற்கு அந்த நாட்டு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஸ்பானிய அரசை நிலை குலைய வைத்துள்ளது.
57 தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் முன்வைக்கப்பட்ட சுலோகங்கள் பொதுவாக முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு எதிரானதாக அமைந்திருந்தது.
உலகில் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு முன் உதாரணமாக இந்த ஆர்ப்பாட்டம் திகழ்ந்ததாக முற்போகு ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன.