புல்மோட்டை இடைத்தங்கல் முகாமில் இருந்த 90 பேரும், மூதூர் இடைத்தங்கல் முகாமில் இருந்த சுமார் 90 இளைஞர் யுவதிகள் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கூறி இராணுவத்தினரால் மீண்டும் வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தோர் முகாமில் இருந்து சென்று உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த பெண்களும் இவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் இராணுவத்தினருடன் கலந்துரையாடி கைதுசெய்யப்படுவர்களை காவற்துறையினரிடம் ஒப்படைக்கும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க தமது அமைப்பு உச்ச முனைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.